செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

இலவச குறுஞ்செய்திகள்


இரண்டு நாள் முன்பு என் நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்த்து. அது

“Flash News.
Coming October 17 Sun will set only after 36 hours
(Bright day light will be there for 1.5 days in India).
At the same time countries likes US there will no light.).
It will convert 3 days to 2 big days.
This will be happening in one time in 2400 years.
You are very lucky to see it.”

இவ்வளவு அனுப்பியிருந்தால் மட்டும் பரவாயில்லை. மேலே ஒரு வார்த்தையும் கூறியுருந்தார்.
“This is a report from NASA, Don’t fail to pass on to others”
படித்த உடனேயே, திருப்பதியில் ஐந்து தலை நாகம் வந்த கடிதம் தான் நினைவுக்கு வந்தது. இது போன்ற செய்திகளைப் பார்த்தவுடனேயே இவற்றின் நம்பகத்தன்மை புரிந்துவிடும். கேட்ட உடனே சிரிப்புதான் வரும். ஆனாலும் ஒரு சிலர் இவற்றையும் நம்புகிறார்களே அது எப்படி?
எப்படி இது போன்ற செய்திகள் மக்களிடம் தோன்றுகின்றன. [யாராவது நிஜமாகவே ரூம்போட்டு யோசிப்பார்களா?] முக்கியமாக அதில் அவர்களுக்கு என்ன பயன்? அல்லது வெறும் கவன ஈர்ப்பு () கவனத்தைக் கலைப்பு தானா இவற்றின் நோக்கம்.
புரியவில்லை

7 கருத்துகள்:

  1. நல்லவேளையா இப்படி எல்லாம் குறுஞ்செய்தி வரதில்லை. அவார்ட் கிடைச்சிருக்கு, பரிசு கிடைச்சிருக்குனு சொல்லித் தான் வரும். :))))))))))

    பதிலளிநீக்கு
  2. முன்பெல்லாம் போஸ்ட் கார்டு, பிறகு உள்நாட்டு தபால், இப்போது மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள்.... எப்போதுதான் நிறுத்துவார்களோ தெரியவில்லை.... :)))

    பதிலளிநீக்கு
  3. நன்றி

    செளந்தர், மாலதி, வெங்கட்.

    பதிலளிநீக்கு
  4. கீதா அம்மா,

    பரிசு(!!!) கிடத்ததா?

    பதிலளிநீக்கு
  5. பரிசு வென்றுள்ளது என்று குறுஞ்செய்தி வந்திருக்கிறது.அதெல்லாம் ஏமாற்று வேலை.

    உண்மையிலேயே உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ!!!!!!1

    பதிலளிநீக்கு
  6. நேற்றுதான் வெங்கட்டின் வருகை. இன்று உன் வருகையா? நன்றி ஆதிலக்ஷ்மிம் (!!!).

    பதிலளிநீக்கு