வெள்ளி, மே 04, 2012

சித்திரா பௌர்ணமி


சித்திரைத் திங்கள் முழு மதி நாளான சித்ராபௌர்ணமியைச் சித்திர குப்தரின் விரதம் இருப்பது வழக்கம். இந்த நாளில் உப்பு சேர்க்காத உணவை மட்டுமே உண்பர். குடை, செருப்பு ஆகியவற்றைத் தானம் செய்வர்.

இந்த சித்திர குப்த வழிபாட்டைப் பற்றிய ஒரு பழந்தமிழ் பாடலைப் பார்ப்போம்:

          சித்திரைப் பருவந் தன்னில் உதித்தனன் சித்ரகுப்தன்
          அத்தின மவனை உன்னி அருச்சனைக் கடன்க ளாற்றிற்
          சித்தியும் பெறுவர் பாவந்தீருமே யேம னூரில்
          இத்திறனறிந்தே யன்னோ னிரங்குவானற்ங்கள் சொற்றே
          சித்ர குப்தரைச் சிந்தனை செய்குவோர்
          பற்றித் தூதர்கள் கையில் படார்களெண்
          சித்தி என்னுமச் செலவமெ லாம் இம்மை
          உற்று வாழ்ந்துடன் உறுவர்கள் முத்தியே.              

          மேடமாந்திங்க டன்னில் விதித்தசித் திரையில் வந்த
          நாடிய பருவந் தன்னி னவவித தானியங்கள்
          மாடமே வைத்துச் சித்ரகுப்தருக் களித்துப் பூசை
          பீடதாயியற்ற வல்லோர் பெறுவரே பிரமலோகம்.

          மடலெழுத் தாணி பொன்னால்
                   வெள்ளியால் வகுத்து நென்மேற்
          கடறனிலுதித்த சித்ர
                   குப்தராங் கருணர் தம்மை
          யிடமுறவைத்தே மேட
                   பருவத்தி னோன்பு செய்தோர்
          குடைமிதியிரணி யந்தான்
                   கொடுத்தவர் பெறுவர் முத்தி.

சித்ர குப்தர், சூரியனுக்கும் நீலாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். நீலாதேவி என்பவள் கடல் நீரில் விடியற்காலைச் சூரிய ஒளிபட்டு அதிலிருந்த வண்ணசாலங்கள் உருவாகி அது பெண்ணாக மாறியது என்று கூறுவர். [நீலம் என்பது நீலக் கற்களையும் அந்த வண்ணத்தையும் குறிக்கும்; கடல்நீரின் நிறப்பிரிகையை அந்த நீரிலிருந்து தோன்றிய பெண்ணாக உருவகப்படுத்தப் பட்டிருக்கலாம்.]  இது கீழ் கண்ட பாடலால் கூறப்படும்:

          இன்ன செங்கதிரோன் காதற் கியைந்த பன்னியர் கடம்மிற்
          பொன்னை வெந்கண்ட காட்சிப் பொற்பின ணீளாதேவி
          மின்னிடை தோன்றக் கொங்கை மீமுகங் கறுப்புத் தோன்ற
          நன்னிலை யோரை வாய்ப்ப நம்பியை யுயிர்தாண் மன்னோ

          புத்திரன் பிறந்தானென்னாப் புகலரு முவகைக் குள்ளந்
          தத்தஞ் செய் தெழுந்த காத றலைக்கொளச் செய்வமுற்றிப்
          பத்திர மனைய நாட்ட வரம்பையர் பலாண்டு பாடச்
          சித்திர குப்தனென்னுந் திருப்பெயர் நல்கினானால்.

சூரியன் என்றால் அறிவு. நீலமோ மனதின் வண்ணம். நம் செயல்கள் அனைத்திற்கும் நம் அறிவும் மனமுமே சாட்சியாக இருக்கின்றன. அதுவே, சூரியன் நீளாதேவியின் மகன் நம் செயலுக்குச் சாட்சியாக உள்ளதாக உருவகப் படுத்தப்பட்டிருக்கலாம்.


4 கருத்துகள்:

  1. அறியாத தகவல்கள் பகிர்வுக்கு நன்றி சீனு....

    பதிலளிநீக்கு
  2. //இந்த நாளில் உப்பு சேர்க்காத உணவை மட்டுமே உண்பர். குடை, செருப்பு ஆகியவற்றைத் தானம் செய்வர்//

    சித்திரை வெயிலுக்கேற்ற உணவு! வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ற தானம்! நம் முன்னோர்கள் விவரமானவங்கய்யா!

    (சித்ராபவுர்ணமி சரி! அப்படியே ஜெயசித்ரா பவுர்ணமி உண்டான்னும் கேட்டுச் சொல்லுங்கள்)

    பதிலளிநீக்கு