ஹோமரின் ட்ராய்-உம் ஒடிஸியஸும்
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்... (பகுதி-2)
ஆங்கில வார்த்தை Odyssey 'ஒரு நீண்ட பயணம்’
என்று பொருள். இந்த வார்த்தை ஹோமர் என்ற க்ரேக்க பழங்கவியின் The Odyssey என்ற காவியத்திலிருத்து
உருவானது. ஹோமர் எழுதிய The Iliad, The Odyssey ஆகிய இரண்டும் மிகப் பிரபலமான
கதைகள். இதில் இலியாட் என்பது ட்ராய் போரை விவரிப்பது. அதிலும் குறிப்பாக, ட்ராய்
போரில் ட்ராயின் இளவரசன் ஹெக்டர்-ஐ அகில்லீஸ் கொல்வது வரை நடக்கும் சம்பவங்களை
விவரிப்பது ஆகும். இந்த ஓடிஸி என்பது ட்ராய்
போரில் ஈடுபட்ட ஒடிஸியஸ் (Odysseus) தன் நாடான ’இதாகா’(Ithaca)விற்குத் திரும்பிச் செல்ல மேற்கொண்ட நீண்ட
பயணத்தையும் (20 ஆண்டுகள்!) அவன் செய்த சாகசங்களையும் விவரிப்பது. ஓடிஸியஸ், ’நாயகன்’ திரைப்படத்தின்
’வேலு நாயகர்’ போல நல்லவனா கெட்டவனா என்பது கடைசி வரை புரியாத புதிர்.
இந்த கதையின்
முன்கதையில், ட்ராய்-இன் இளவரசன் பாரிஸ், ஸ்பார்டாவின் மன்னன் மெனெலஸின் மனைவி
ஹெலனை (சில கதைகளில் பாரிஸ் அவளைக் கடத்திச் சென்றதாகவும் சில கதைகளில் அவள்
விருப்பப்பட்டு அவனுடன் சென்றதாகவும் உள்ள்ன), தன் நாட்டிற்குக் கடத்துகிறான். கோபமடைந்த
மெனெலஸ் க்ரேக்கத்தின் அனைத்து மன்னர்களையும் அழைத்து, தாங்கள் முன்னரே செய்து
கொண்ட ஒப்பந்தத்தின் படி, தான் ட்ராய் மீது படையெடுக்க உதவுமாறு கூறுகிறார்.
ஒருவகையில் இந்த
ஒப்பந்த்ததிற்குக் காரணகர்தாவே ஓடிஸியஸ்தான். முதலில் ஹெலனை மணக்க விரும்பிய வரன்களில்
ஒருவனாக வந்தவன் தான் ஓடிஸியஸ். ஆனால் அவளை மணக்க பல க்ரேக்க மன்னர்களும்
விரும்பினர். அவர்கள் அனைவரையும் எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் அவள் தந்தை டைண்டரெஸ்
கவலையுற்று இருந்தார். தனக்கு ஹெலன் கிடைப்பது கடினம் என்று உணர்ந்த ஓடிஸியஸ் அவள்
தந்தையிடன் அவரது சகோதரனின் மகள் பெனலோப்-ஐ தனக்குத் திருமணம் செய்து கொள்ள அவர் உதவினால்
தான் அவரின் இப்பிரச்சனைக்குத் தீர்வு சொல்வதாகக் கூறினான். அதன்படி அவர், அவன்
திருமணத்திற்கு உதவ, அவன் க்ரேக்க மன்னர்கள் அனைவரையும் சுயம்வரத்திற்கு வரவழைத்து,
ஹெலன் – அவள் விரும்பும் கணவனைத் தேர்ந்தெடுப்பாள் என்றும் அந்த ஜோடிக்கு எவரேனும்
தீங்கிழைத்தால் தாங்கள் அனைவரும் மெனெலஸுக்கு உதவி, பிர்ச்சனையைத் தீர்த்து
வைப்போம் என்றும் சபதமேற்கச் செய்தான்.
ஆனால், இப்பொழுது
பாரிஸ்-ஆல் பிரச்சனை எழுந்ததும், இதில் ஈடுபட்டால் தான் தன்நாடு திரும்ப வெகு
வருடங்கள் ஆகும் என்ற தன் ராஜகுரு ஹலிதெரஸ்ஸின் தீர்க்கதரிசன (oracle) வார்த்தையைக்
கேட்ட ஓடிஸியஸ், தன் மனைவியையும் குழந்தையையும் பிரிய மனமின்றி, இச்சண்டையில்
ஈடுபட விருப்பமின்றி பைத்தியம் போல நடித்தான். ஆனால் இதை, மெனலஸின் சகோதரனான
அகமெம்னோன், அவருடைய நண்பனான பாலமெடாஸ் என்பவன் மூலம், கண்டு பிடித்து விடுட்டார்.
[போரின் இடையில் தன்னைக் காட்டிக் கொடுத்த பாலமெடாஸ்-ஐ சதித்திட்டம் தீட்டி, அவன்
தங்களின் துரோகி என்று காட்டி, அவனை ஓடிஸியஸ் கொன்றது தனி கதை.]
இருந்தும், பின்னர்
போரில் ஒடிஸியஸ் முக்கிய பங்கு வகித்தான். அவனது ஆலோசனை, முயற்சியால் புத்திசாலியான
நெஸ்டர், அகில்லெஸ் (யாராலும் வெல்ல முடியாதவன்), டீசர் (பெரிய வில்லாளி)
ஆகியாரும் படையெடுப்பில் கலந்து கொள்கின்றனர். பல நேரங்களில், க்ரேக்க வீரர்கள்
சோர்வுற்ற பொழுது அவர்களை ஊக்குவிப்பதிலும் ஓடிஸியஸே முக்கிய பங்கு வகித்தான்.
அகமென்னின் கர்வ போக்கினால் க்ரேக்க வீர்ர்களிடம் ஏற்படும் சலசலப்பை நீக்குவதிலும்
அவனே முக்கிய பங்கு வகித்தான். ஒரு படை வீரனாகவும் அவன் பங்கு மிக முக்கியமானதாக
இருந்தது. ஒருமுறை அகமென்ன்னுக்கும் அகில்லெஸிக்கும் இடையில் இருந்த விரிசல்
அதிகமாகி அகில்லெஸ் சண்டையிலிருந்து விலகுவதாக அறிவிக்க, ஓடிஸியல் அகில்லெஸின்
நண்பன் (அவனுடைய ஓரினச் சேர்க்கைக் காதலன் என்றும் சில கதைகளில் கூறுவது உண்டு)
பெட்ரோக்லஸ்-ஐ அவன் இல்லாத பொழுது அவனுக்கு பதிலாக அவனுடைய கவசங்களை அணிவித்து
அவனை களமிறக்கினான். அதனால், அகில்லெஸின் வீரர்கள் உற்சாகமாகப் போரிட்டனர். [அந்த
போரில் பெட்ரோக்லஸ், ட்ராயின் இளவரசன் ஹெக்டரால் கொல்லப்பட அந்த கோபத்தால் தான்
அகில்லெஸ் ஹெக்டரை வீழ்த்தினான் என்பதுதான் ஹோமரின் இலியாட்-இன் மூலக்கதை].
இவற்றைத் தவிர ஒரு வீரனாகவும் போரில் ஓடிஸியஸுக்கு முக்கிய பங்கு இருந்தது. ட்ராய்க்கு
உதவிய ரீசஸ் என்ற த்ராஸ் நாட்டின் மன்ன்னை போரில் கொன்று அவனுடைய குதிரைகளை
எடுத்து வந்த்தும் ஓடிஸியஸ் தான்,
10 ஆண்டுகள்
முற்றுகையிட்ட பின்னரும் க்ரேக்க படையால் ட்ராயின் கோட்டைகளைத் தகர்க்கவோ உள்
நுழையவோ முடியவில்லை. அப்போதும் ஓடிஸியஸ் தான், ட்ராஜன்களை ஏமாற்ற ஒரு திட்டம்
வகுத்துக் கொடுத்தான். முதலில், க்ரேக்கர்கள், தங்களின் நீண்ட நாள் முற்றுகையால்
சோர்வுற்று பொறுமையிழந்து தங்கள் நாட்டிற்குத் திரும்புவதாக ஒரு வதந்தியை
உண்டாக்கினான். பின்னர் ஒருநாள் நள்ளிரவில் ஒரு பிரம்மாண்டமான மரக்குதிரையை
க்ரேக்கக் கடவுள் ஏதென்னாவிற்குக் காணிக்கையாக்க் கொடுத்துவிட்டுச்
சென்றுவிட்டனர். மறுநாள், ட்ராய் மக்கள், கோட்டைக்கு வெளியே, ஆள் அரவமின்றி,
படைகள் எதுவுமில்லாமல், க்ரேக்கர்கள் விட்டுச் சென்ற மரக்குதிரையை தங்களின்
வெற்றிச் சின்னமாக நகரத்திற்குள் எடுத்துச் சென்று தங்களின் வெற்றியைக்
கொண்டாடினர். ஆனால், ஓடிஸியஸின் திட்டப்படி, இரவில் அந்த மரக்குதிரையின் உள்ளே
ஒளிந்து கொண்டிருந்த க்ரேக்க வீர்ர்கள், கோட்டைக் காவலர்களைக் கொன்று, கோட்டைக்
கதவைத் திறந்து விட, கடலில் சற்று தூரத்தில் இருந்த க்ரேக்க வீர்ரகள் மீண்டும்
திரும்பி வந்து, கோட்டைக்குள் நுழைந்து, ட்ராய் நகரத்தை வீழ்த்தினர்.
இந்த போர்
முடிந்தவுடன் ஓடிஸியஸ் தன் வீர்ர்களுடன் மீண்டும் தன் தாய் நாடான இதாகாவிற்குத்
திரும்பிய கதையே ஒடிஸி என்று கூறப்படும்.
இப்பொழுது, இந்தப்
பயணத்தில் நடந்த சம்பவங்களைச் சற்று பார்ப்போம்.
ஓடிஸியஸும் அவரது
படையினரும் ட்ராய் நகரிலிருந்து 12 கப்பல்களில் பயணித்தனர். சில நாட்கள் பயணித்தப் பின் அவர்கள் ஒரு
நிலப்பரப்பைப் பார்த்தனர். அது சிகானியன் தீவு. ஓடிஸியஸ், உபதளபதி, யூரிலொகஸின்
தூண்டுதலால் கப்பலை நங்கூரமிட்டு நகரத்தைத் தாக்க விழைந்தான். அத்தீவு மக்கள்
ட்ராய்க்கு நெருக்கமானவர்கள் என்பது ஒரு காரணம். படையினரைக் கண்ட தீவின் பெண்கள்,
குழந்தைகள் அனைவரையும் நகரத்தை விட்டு அருகிலுள்ள மலைகளுக்குச் சென்று தப்ப படையினர்
நகரத்தை சூறையாடி கொள்ளையிட்டனர். அதில் தீவின் ஆண்கள் அனைவரையும் படையினர்
கொன்றுவிட ஓடிஸியஸ், அப்பல்லோ கோவிலின் காப்பாளரான மரோன் என்பவரைக்
காப்பாற்றினான். படையினரையும் உடனடியாக கப்பலுக்குத் திரும்ப கட்டளையிட்டான். அப்போழுது
மரோன் அவனுக்கு 12 ஜாடி மதுக்களை அவனுக்கு வழங்கினார். படையினர் கிடைத்த மதுவை
உண்டு அங்கு கரையிலேயேத் தூங்கிவிட்டனர்.
மறுநாள்
விடிவதற்குள், சிகானியர்கள் தங்களின் நன்பர்களான மலைவாழ் மக்களுடன் சேர்ந்து படை
வீர்ர்களைத் தாக்க ஆரம்பித்தனர். தாக்குப் பிடிக்க முடியாமல் பாதிக்கும்
மேற்பட்டவர்கள் இறக்க, மீதமிருந்த வீர்ர்களுடன் கப்பலுக்கு அவசரமாகப் பின்வாங்கினர்.
கப்பலில் ஓடிஸியஸும் யூரிலோகஸும் பெரும் வாக்குவாத்த்துடன் சண்டையிட மற்ற
வீர்ர்கள் அவர்களைச் சமாதானப் படுத்திப் பிரித்தனர்.
அவசரத்தில்
தீவிலிருந்துத் தப்பிக்க திசையைமாற்றி, தென் திசையை நோக்கி, கப்பல்
செலுத்தப்பட்டது. அங்கே அவரகள் லோடஸ் ஈட்டர்ஸ் எனப்படும் தாமரை-உண்ணிகள்
என்பவர்கள் வசிக்கும் தீவிற்கு வந்து சேர்ந்தனர். முதலில் அவர்களுடன் சேராமல்
தனித்து தங்கியிருந்த வீர்ர்கள் பின்னர் அவர்களுடன் சேர ஆரம்பித்து அவர்களுடன்
அங்குள்ள தாமரை மலர்களை உண்ண ஆரம்பித்தனர். அதன் போதையால் அவர்கள் தங்கள் நாடு, வீடு,
குடும்பம் ஆகியவற்றை மறந்து அங்கேயேத் தங்கிவிட்டனர்.
வேறு வழியில்லாமல்,
ஓடிஸியஸ் மீதமுள்ளவர்களுடன் சேர்ந்து போதைக்கு அடிமையானவர்களில் முக்கியமான வீரகளை
அவர்கள் மயக்கம் தெளிவதற்குள் தூக்கி கப்பலில் போட்டு, மற்றவர்களை அத்தீவிலேயே
விட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
சில நாட்கள் பயணம்
செய்த பின்னர் அவர்கள் ஒரு விசித்திரமான தீவுக்கு வந்து சேர்ந்தனர். ஓடிஸியஸும் படைவீர்ர்களில்
சிலரும் தீவைப் பற்றி அறிய தீவிற்கு உள்ளேச் சென்றனர். சில தூரம் சென்ற பின்
அவர்கள் ஒரு பெரிய குகையை அடைந்தனர். அது மிகப் பெரிய வாழ்விடமாகவும் அதில் ஆட்டு
மந்தைகள் இருப்பதையும் கண்டனர். அதில் சில ஆடுகளை வெட்டி அதன் மாமிசத்தை உண்டனர்.
அது பாலிஃபீமஸ் என்ற சைக்ளோப்ஸின் (மிகப் பெரிய ஒற்றைக் கண் அரக்கர்கள்) குகை.
இதற்குள் குகைத் திரும்பிய பாலிஃபீமஸ், ஒரு பெரிய பாறையால் மூடி அடைத்து அவர்களை
விசாரிக்க ஆரம்பித்தான். ஓடிஸியஸ் தாங்கள் அடையாளங்களைக் கூறாமல் தாங்கள் கடல்
பயணிகள் என்றும் வழி தவறி அங்கு வந்த்தாகவும் கூறினான்.
ஆனால், தன் ஆட்டு
மந்தையிலிருந்து ஆடுகளைக் கொன்று அவற்றைத் தன்னைக் கேட்காமல் உண்டது தெரிந்ததும்
பாலிபீமஸுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர்களை வெளியேற அனுமதிக்காமல் தடுத்து, படை
வீர்ர்களில் இருவரைச் சுவற்றில் அடித்துக் கொன்றுத் திங்கத் துவங்கினான்.
ஒடிஸியஸ், பாலிபீமஸைச் சமாதானம் செய்ய தான் கொண்டு வந்திருந்த பலமான மதுபானத்தை
அவனுக்கு வழங்கினான். போதையில் மயங்கிய பாலிபீமஸின் கண்ணில், ஓடிபியஸ் அங்கிருந்த
கொள்ளிக் கட்டையால் குத்தி குட்ருடாகினான். வலி தாங்காமல் கத்திய பாலிஃபீமஸ் யார்
குத்தியது என்று கத்த, பெயர் சொன்னால் ஏதோ விபரீதம் நடக்கும் என்பதை ஓடிபியஸ்
புரிந்து கொண்டான். எனவே, கண்ணைக் குத்தியது “யாரும் இல்லை” (Nobody) என்று கூறினான்.
ஆனால், வலியில் துடித்த பாலிஃபீமஸின் கூக்குரலைக் கேட்ட அவனது சக சைக்லோப்ஸ்கள்
குகைக்கு வெளியே நின்று என்ன நடந்தது என்று கேட்டனர். பாலிஃபீமஸ் தன் கண்ணைக்
குத்தியது யாரும் இல்லை என்று கூற, மற்ற சைக்லோப்ஸ்கள் பாலிஃபீமஸை முட்டாள் என்று
கூறி சென்று விட்டனர்.
அடுத்த நாள்
காலையில், ஓடிபியஸும் அவன் படையினரும் ஆடுகளின் வயிற்றில் தங்களைக் கட்டிக்
கொண்டு, பாலிபீமஸ் அவற்றை மேய்க்கச் செல்லும் பொழுது குகையிலிருந்துத் தப்பித்தனர். ஆனால்,
அங்கிருந்து வெளியேரும் பொழுது பாலிஃபீமஸை கேலி செய்யும் விதமாக ஓடிஸியஸ் கண்ணைக்
குத்தியது தான் தான் என்று தற்பெருமையாக்க் கூற அவனிருந்த திசையில் ஒரு பெரிய
பாறையை பாலிபீமஸ் தூக்கி எறிந்தான். அதிர்ஷ்ட வசமாக அது ஓடிஸியஸ் மேல் விழாமல்
அவன் தப்பினான். அவமானத்தைத் தாங்காத பாலிஃபீமஸ், தன் தந்தையான போஸிடானிடம்
(Poseidon – அவர் 12 ஒலிம்பியன் கடவுள்களில் ஒருவர்; கடல், புயல், நிலஅதிர்வு,
குதிரைகள் ஆகியவற்றுக்கு அதிபதி) முறையிட்டான். இதனால், ஒடிஸியஸ் போஸிடானின்
கோபத்திற்கு உள்ளானான்.
சைக்லோப்ஸிடமிருந்து
தப்பிய ஓடிஸியஸ், காற்றுக் கடவுள் ஏயோலஸின் தீவான ஏயோலியாவை வந்தடைந்தான். அங்கு,
ஏயோலஸ் அவனுக்கு காற்று நிறைந்த பையைக் (ox-hid bag என்ற bag of winds) கொடுத்தார். அதில் மேற்கு
திசையைத் தவிர அனைத்து திசைகளிலும் வீசும் காற்று அடைக்கப் பட்டிருந்தது. அதன்
மூலம் காற்றைக் கட்டுப்படுத்தி தன் நாட்டை எளிதில் அடைந்து விட ஓடிஸியஸ் தேவையான
ஏற்பாடுகளைச் செய்தான். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது.