திங்கள், ஆகஸ்ட் 08, 2011

தமிழ் தொலைக்காட்சிகள் - வாழ்க்கை ஒரு வட்டம்


தமிழ்த் தொலைக்காட்சிகளில் இன்றைய தினம், ஏன் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, முதல் இடம் வகிப்பது சன் தொலைக்காட்சிதான் என்பதில் எவருக்கும் ஐயமிருக்காது.

அவர்கள், அப்பொழுது முன்னணியிலிருந்த தூர்தர்ஷன்”-ஐ வெகு விரைவிலேயே அவ்விடத்திலிருந்து நீக்கி விட்டு முன்னிலைப் பெற்றார்கள். இதற்குக் காரணங்கள்,

தூர்தர்ஷனின் (அல்லது அப்பொழுது மத்திய அரசின்) இந்தி திணிக்கும் அணுகு முறை. ஒரு Monopoly-ஆக இருந்த DD, தேசிய ஒளி பரப்பு என்ற தோல் போர்த்தி, தமிழில் வந்து கொண்டிருந்த  நிகழ்ச்சிகளை நீக்கி விட்டு, இந்தியில் வந்த தொடர்களையும், வட மாநில கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வந்நதனர். சென்னையிலாவது பரவாயில்லை, சென்னை நிலையம் சில/பல நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வந்தது. ஆனால், மற்ற இடங்களில், குறிப்பாக மத்திய , மேற்கு, தென் மாவட்டங்களில் (கொடைகானல் Transmitter வழியாக)  தில்லி நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் ஒளி பரப்பினார்கள். மக்கள் வேறு தொலைகாட்சி இல்லாததால் வேறு எதையுமே பார்க்க முடியாத நிலைமை. (1980-களின் துவக்கத்தில் சென்னைத்தொலைக்காட்சி தான் நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வந்தது. பிறகு, ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்தது போல் 1 மணி நேரமாக இருந்த தேசிய ஒளி பரப்பு முழுவதுமாக ஆக்கிரமித்த்து. 1986-87 க்கு பிறகு தான் நிலைமை படு மோசம்.)  இந்த நிலையில், 1992-இல் தகவல் தொழில் நுட்ப துறையில் தனியாரும் அனுமதிக்கப் பட்டப் பின், முதலில் துவங்கிய சன் தொலைக்காட்சிக்கு மக்களின் அமோக ஆதரவு இருந்ததில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை. தமிழகத்தை விட்டு, எங்களைப் போல, வெளி மாநிலத்தில் இருப்பவர்களுக்கு தமிழில் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும், தமிழக நிகழ்வுகளை அறியவும் சன் தொலைக்காட்சிதான் ஒரே சாதனம்.

பின்னர், வேறு பல “சானல்கள் வந்தாலும் சன், தன் முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக தன் தொலைக்காட்சி தொடர்கள் மூலம், பெண்களிடம் இன்னமும் சன் தொலைக்காட்சி தான் முதல் விருப்பமாக இருக்கிறது.

ஆனால், விஜய், ராஜ் போன்றவர்கள் இந்தியில் எடுக்கும் தொடர்களை தமிழ் படுத்தி (தமிழையும் படுத்தி!!!) தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

தமிழ் தொடர்களையே பார்க்க முடியவில்லை (எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டோம்; ஆனாலும் நண்பர்கள் வீட்டிலோ சென்னை வரும் போதோ சென்னையிலிருந்து உறவினர்கள் வந்தாலோ பார்க்க வேண்டியிருக்கிறதே). இதில் இந்தி dubbing தொடர்களை எப்படிப் பார்க்கிறார்களோ?

இந்நிலையில், நேற்று, “கலைஞர்தொலைக்காட்சியிலும் ஒரு இந்தி தொடரை (சீதா) ஒளிபரப்பப் போகின்றார்களாம்.

இன்னமும் சன் தான் மிஞ்சியிருக்கிறது. அவர்களும் ஏதாவது ஒளி பரப்பினால் இந்த வட்டம் நிறைவு பெறும்.

எவ்வளவோ பார்த்து விட்டோம். இதையும் பார்ப்போம்.

6 கருத்துகள்:

  1. ம்.... எனக்கு இந்தப் பிரச்சனையே இல்லை... நான் தொலைக்காட்சியில் ஒரு சீரியலும் பார்ப்பது இல்லை... அதனால் நான் தப்பித்தேன்... :)))

    பதிலளிநீக்கு
  2. ஆச்சரியப் பட எதுவும் இல்லை. தமிழகத்தை விட்டு, எங்களைப் போல, வெளி மாநிலத்தில் இருப்பவர்களுக்கு தமிழில் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும், தமிழக நிகழ்வுகளை அறியவும் ”சன் தொலைக்காட்சி”தான் ஒரே சாதனம்.
    வணக்கம் சகோதரரே இன்றுதான் உங்கள் தளத்திற்க்கு வந்துள்ளேன்
    தங்களின் ஆக்கங்கள் அருமையாக உள்ளது.இந்த ஆக்கத்தில் நீங்கள்
    குறிப்பிட்டுள்ள விசயம் முற்றிலும் உண்மையானது.என்னைப் பொறுத்தவரை
    சன்தொலைக்காட்சியே எனக்கும் பயனளிக்கின்றது. மிக்க நன்றி சகோதரரே
    அருமையான தகவலைப் பகிர்ந்துகண்டமைக்கு.

    பதிலளிநீக்கு
  3. சமுத்ரா,வெங்கட், அம்பாளடியாள்,

    அனைவரின் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சீரியலே தாங்கமுடியாத போது இந்த மொழிமாற்று சீரியல்கல் கொடுமையிலும் கொடுமை தான்..:(

    பதிலளிநீக்கு
  5. சகோ. முத்துலெட்சுமி,

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு