சென்ற
வார
முக்கிய் நிகழ்வு கூடன்குளம் அணுமின் உலையை எதிரித்து 127 பேர் கடந்த 10 நாட்களாக
நடத்திவரும் உண்ணாவிரதம் தான். நம் நாட்டைப் போன்ற அலட்சிய மனநிலை கொண்ட
நாட்டிற்கு அணுமின் உலை போன்றவை பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது
போன்றது தான்.
அணு உலைகளைப்
பொறுத்தவரை பெரிய விபத்து நடந்தால் தான் ஆபத்து என்பதில்லை. ஏற்கனவே, கல்பாக்கம்
அணு மின்நிலையத்தில் இருமுறை (1987, 2002) சிறிய விபத்துகள் நடந்துள்ளன. அதிலும்
1987-ல் நடந்த விபத்தின் காரணமாக இரண்டு வருடம் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்
பட்டது. அதில் நடந்த பாதிப்பும் அதன் தாக்கமும் எவ்வளவு என்று இன்று வரை சரியான தகவல்கள்
இல்லை. மேலும் இந்தியாவில் இதுவரை 125 சிறிய அணு விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இவற்றில் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர் அவர்களின் நிலை என்ன என்பது கூட
தகவலில்லை.
தில்லி குண்டு
வெடிப்பில் உளவுத்துறை தகவலை மாநில அரசுக்கு கொடுத்தும் அவர்கள் சரியாக நடவடிக்கை
எடுக்கவில்லை என உள்துறை அமைச்சர் கூறியுள்ளது; இதுவே அரசின் பொறுப்பற்றத்
தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அணு உலைகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இது
போன்ற ஒரு பொறுப்புத் துறப்பே நடக்கும். போபால் விஷ வாயு விபத்தில் நடந்த்து போல்
அதன் தலைமை பொறுப்பில் உள்ளவர் தப்பித்து வெளியேறி விடுவார். பாதிக்கப் படுபவர்கள்
அதற்கு ஏற்றார் போல் ஒரு அணு ஒப்பந்தமும் சம்மந்தப் பட்ட நாட்டுடன் அரசு
ஏற்படுத்திக்கொள்ளும். தலைமுறை தலைமுறையாக துயரப்பட வேண்டியதுதான்.
இந்த போராட்டத்தைப்
பொறுத்தவரை நேற்று பிரதமருக்கு ஜெ, அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவை
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டு, ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் இந்த வாரம் ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க செல்வதால் அடுத்த வாரம்
குழுவை சந்திப்பதாகவும் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர்
நாராயணசாமியை அனுப்புவதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இது பற்றி நேற்று ”புதிய தலைமுறை” நிருபர் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்
மணிசங்கர ஐயரை காங்கிரஸ் கட்சியின் நிலை பற்றி அறிய அவரை பேட்டி கண்டனர். ஆனால்,
அவரோ இது பற்றி கட்சியின் நிலையைத் தான் கூற இயலாது என்றும் தான் தன்னுடைய கருத்தை
மட்டுமே கூறுவதாகவும் கூறினார். அதில், மக்கள் கூடன்குள அணுமின் நிலையத்தின்
பாதுகாப்பு பற்றி அதிகாரிகளின் விளக்கத்தை மக்கள் ஏற்கவில்லை, மக்களின் எதிர்ப்பை
அரசுக்குத் தெரிவித்த்தாக்க் கூறினார். அவரின் கருத்தைக் கூறுமாறு வினவிய போது தன்
கருத்தை அரசுக்குத் தெரிவித்த்தாக்க் கூறினார். அரசு அவரின் கருத்துக்கு என்ன நடவடிக்கை
எடுக்கும் என கேட்ட பொழுது அது அரசுக்குத் தான் தெரியும் என்றும் தன் கடமை அரசுக்கு
கருத்து தெரிவித்ததுடன் முடிந்து விட்டதாகவும் கூறினார். அதை என்னால் ஏற்க
முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட (என்ன தான் மாநிலங்கள் அவை
உறுப்பினர்ரக இருந்தாலும்) மக்களுக்குத் தன் நிலையை விளக்க்க் கூட தயாராக இல்லை.
காங்கிரஸ் உறுப்பினர்கள் எப்பொழுதுமே தலைமைக்கு அடிமை தானா. இத்தனைக்கும் அவருக்கு
அரசின் நிலைபாடும் என்ன என்று தெரியாது என்றால் அவர் என்ன அரசியல் செய்கிறார்
என்று புரியவில்லை.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு இதில் அன்னா ஹசாரே விடம் நடந்தது போல் தான் நடக்கும் என்று நினைக்கிறேன். முதலில் போராட்டததை எதிர்ப்பது/ஒடுக்க முடிந்தால் ஒடுக்குவது. போராட்டம் வலுத்தால் பேச்சு வார்த்தை நடத்துவது. அதிலும் தீர்வில்லாவிட்டால் பணிவது என்பது தான். இதில் மணிசங்கர் இப்பொழுது கபில் சிபல், திக் விஜய் சிங் போல நடக்கிறார். அது சரியில்லாவிட்டால், நாராயணசாமி பிரணாப் முகர்ஜி போல பேசுவார். பிறகு, போராட்டம் வலுத்தால் அதிக பாதுகாப்பு அமைப்புகள் நிறுவவதாகக் காட்டுவார்கள். எதுவுமே சரிபடாவிட்டால் தான் பணிவார்கள்.
ஆக வலுவான போராட்டமே இதற்குத் தீர்வு.
பின் குறிப்பு: மின்சாரத்திற்கு
சூரிய சக்தியைப் பயன்படுத்த தீவிரமான ஆராய்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியத் தேவை.
ஆனால், அரசு இந்த முயற்சியில் முனைப்பாக உள்ளதா என்பது கேள்விக்குறி. மரபு சாரா
ஆற்றலை தயாரிப்பதில்/பயன் படுத்துவதில் தமிழகம் இன்று மற்ற மாநிலங்களைப்
பொறுத்தவரை ஓரளவு முன்னனியில் தான் (குறிப்பாக காற்றாலை மின் உற்பத்தியில்)
இருக்கிறது. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடிந்து விட்ட நிலையில், கோடிக்கணக்கான ரூபாய்கள் கொட்டிவிட்ட நிலையில் இந்தத் திட்டத்தை அரசு முடக்குமா என்பது கேள்விக்குறியே!
பதிலளிநீக்குஇப்போது நடக்கும் போராட்டம் காலம் கடந்து விட்டதோ என்று தோன்றுகிறது. ஆயினும் போராட்டம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியே.
நல்ல அலசல்... பார்க்கலாம் என்ன நடக்கிறது என.
பதிலளிநீக்குஆமாம் பத்து. இதன் கட்டுமானப் பணிகள் (முதல் உலை துவக்குவதற்கு) கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் - அதுவும் வெளி நாட்டு முதலீடு - இதை அரசு அவ்வளவு எளிதாகக் கை விடாது என்பது புரிகிறது. மக்களுக்கும் இப்பொழுது தான் - ஜப்பான் நிகழ்வுகளுக்குப் பின் - இதன் தீவிரம் தெரிகிறது. எங்களைப் போல் வட/மத்திய தமிழக்கத்தை சேர்ந்தவர்களுக்கு இதன் தீவிரம் தெரியாது. ஆனால் உங்களைப் போன்ற தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் அங்குள்ள நிலைமைத் தெரியும்.
பதிலளிநீக்குவெங்கட் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு