செவ்வாய், நவம்பர் 01, 2011

கலவை – 7


நேற்று உலக மக்கள் தொகை 7 பில்லியன்களை (அதாவது 700 கோடி) எட்டியுள்ளதாக ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கிடு துறை குறிப்பிட்டுள்ளது.  இதில் இந்திய மக்கள் தொகை 120 கோடிகள் அதாவது 17%; ஆசிய நாடுகளின் பங்கு 60%. ஆனால், உலக மொத்த நிலப்பரப்பில் வெறும் 29.5% தான் ஆசியாவில் உள்ளது. அதிலும், இந்தியாவின் நிலப்பரப்பு வெறும் 2.3% தான்.  இந்த வேகத்தில் உலக மக்கள் தொகை உயர்ந்தால், 2050 ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடியை எட்டும் என்றும், இந்தியா 165 கோடியை எட்டும் என்றும் கணக்கிட்டுள்ளார்கள். இவ்வளவு மக்களுக்கான உணவு, உறைவிடம், நீர் ஆகிய தேவைகளை நிறைவேற்றுவது எதிர்கால அரசாங்கங்களுக்குப் பெரும் சவாலாகவே அமையும். இந்நிலையில் எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யக் கூடியது, நம் தேவைகளைக் குறைத்து வாழ்வாதாரங்களை வீணாக்காமல் இருப்பதுதான். அதைச் செய்வோமா?

இன்று, மொழி அடிப்படையில் ஆந்திர மாநிலம் உருவான நாள். ஆனால், தெலுங்கான குழு மற்றும் தலைவர்கள் இதை “ஏமாற்று தினம்”-ஆகக் கொண்டாட முடிவெடுத்து சற்று ஓய்ந்திருந்த போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஈத் முடிந்தவுடன் தெலுங்கானா பற்றி முடிவெடுக்கப் படும் என்று அறிவித்துள்ளார்.

நேற்று, விப்ரோ அதிபர் அசிம் ப்ரேம்ஜி இப்பொழுதுள்ள காங்கிரஸ் அரசு முடிவெடுக்க லாயக்கில்லாத அரசு என்று விமரிசித்துள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி இதை வன்மையாகக் கண்டித்து, இப்படி பொதுவாகக் குற்றம் சாட்டுதல் கூடாது என்றும் எந்த பிரச்சனையில் அவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுக் குற்றம் சாட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அப்படி ஒவ்வொன்றாக ப்ரேம்ஜி கூற வேண்டும் என்றால் அவருக்கு அதை கணக்கிட்டு ஒவ்வொனறாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு விப்ரோ கணிணியே பத்தாது என்றுதான் நினைக்கிறேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆகட்டும் (2008-ல் முதல் குற்றச்சாட்டு எழுந்து 2010-ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட்து), தெலுங்கானா பிரச்சனை ஆகட்டும், லோக்பால் ஆகட்டும் இன்றுவரை காங்கிரஸ் உடனுக்கு உடனே தீர்த்துவிட்டதே! இல்லையா.
இந்தியா ஐந்து ஒரு நாள் போட்டிகளையும் வென்றுள்ளது. ஆனால், கடைசியில் டி20 போட்டியில் அவர்களிடம் தோற்றுள்ளது. காரணம், அலட்சியம் தான். எந்த வீர்ரும் ஒரு முனையைத் தக்க வைத்துக் கொள்ள  நினைக்கவில்லை. தொடர்ந்து விக்கெட் வீழ்ந்து கொண்டேயிருந்த்து. அதிலும் 10 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட் விழுந்த பின்னும் எந்த மட்டை வீர்ரும் நின்று விளையாடாமல் இருந்ததே. சாதாரணமாக கம்பீர், த்ராவிட்  போன்றவர்கள் அதைச் செய்வார்கள், இதில், கோஹ்லி அதைச் செய்திருக்க வேண்டும். அதிலும் நல்ல ஃபார்மில் இருந்த அவர் அப்பொழுது ஆட்டமிழந்த்துதான் திருப்பு முனை. மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் இளம் வேகப் பந்தாளர்களுக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது நல்ல முடிவுதான், முக்கியமாக பிரவீன் குமாரை எடுக்கவில்லை. அது ஓரளவு சரிதான் என்று தோன்றுகிறது. ஏனென்றால் 5 நாள் போட்டிகளில் சிவப்பு உபயோகிப்பர். அது புதிதாக் இருக்கும் பொழுதோ அல்லது பிட்ச் சாதகமாக இருக்கும் பொழுதோதான் மிலிட்ரி மீடியம் என்று கூறப்படும் மிதவேக பந்தாளர்களுக்கு உதவும். மற்ற சமயத்தில் அவரது accuracy தான் அவருக்கு பலம். இந்த ஒரு போட்டியில் அவர் சரியாக வீசவில்லை என்றால் அது ஆஸ்த்ரேலியாவில் அவரது மனதிடத்தைப் பாதிக்கும். எனவே அவருக்கு ஓய்வு அளித்திருப்பது நல்லது. ஹர்பஜனை சேர்காததும் நல்லதுதான். இது அவருக்கு crucial நேரம். Make or Break என்று கூறுவார்கள். பஞ்சாப் அணியில் விளையாட இருக்கிறார். ஹர்பஜன் அணியில் சேர்ந்த பொழுது கிட்டத்தட்ட கும்ப்ளேவும் இந்த நிலையில் தான் இருந்தார். அதன் பின் தன் திறமையை அவர் இன்னமும் மெருகேற்றினார். ஹர்பஜன் இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார் என்று பார்ப்போம்.

4 கருத்துகள்:

  1. தகவல்கள் அருமை...ஹர்பஜன் சிங்...தனது திறனை மீண்டும் நிரூப்பிக்க வேண்டும்..அப்போதுதான் அணியில் அவரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. 700 கோடி மக்கள் தொகை.... :(

    ஒன்றும் சொல்வதற்கில்லை... இது ஒரு பெரிய விஷயம்... நிறைய அரசியலும் விளையாடும் விஷயம்....

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றிகள் ராஜா. கிரிக்கெட் விமர்சனத்தில் பிதாமகனான நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஹர்பஜன் Domestic போட்டிகளில் விளையாடுவது நல்ல அறிகுறிதான். முதலில் அவர் தன் leg & middle line-ஐ மாற்றி off & middle line-க்கு வர வேண்டும். இரண்டாவது Off spinners-க்கு பொருமை மிக அவசியம். எல்லா பந்துகளிலும் விக்கெட் கிடைக்காது. முதலில் உள்ளூர் போட்டிகளில அதைச் செய்ய முடிகிறதா என்பதைப் பொறுத்துதான் எதுவும் கூறமுடியும்.

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் வெங்கட் இதில் அரசியலும் இருக்கிறது. ஆனால் ஏதோ நம்மால் முடிந்தது resources wastage-ஐ நம் அளவில் குறைப்பதுதான்.

    பதிலளிநீக்கு