வெள்ளி, செப்டம்பர் 18, 2015

இருபத்தைந்து வருடம்


இருபத்தைந்து வருடம்




[தில்லி வந்து சேர்ந்து இன்றோடு 25 வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் பழைய நினைவுகளும் தொடர்புகளும் மனதைவிட்டு அகலவில்லை]


தலைநகரின் திசைநோக்கித்

தடம் வைத்தத் துவக்கம் அது.



அறியாத தேசம்

புரியாத மொழி

தெரியாத ஊர்

புகலில்லா இடம்

திசையறியா வழி

திக்கற்ற வாசம்

பெயரறியா மனிதர்கள்

நிலையறியா உறவு



இடையே…

பாலைவனச் சோலையென

கிட்டியதோர் நண்பர் குழாம்

பரிவும் பாசமும் கலந்த நட்பில்

பறந்ததோர் பத்து வருடம்



பின்னர்…

மணவாழ்க்கை

மக்கட் செல்வம்

ஒதுங்க ஓர் இடம்

ஓங்கிய மகிழ்ச்சி



என்ன இருந்து என்ன?

சொர்கம் என்றால்

சொந்த ஊர் என்று

சும்மாவா சொன்னார்கள்



வீடு திரும்பும் ஏக்கம்

விட்டு விட்டு போகவில்லை

ஆவி விட்டு போனாலும் – அந்த

ஆவல் விட்டு போகாது.

5 கருத்துகள்:

  1. 25 வருடங்கள்..... இப்போது தான் வந்த மாதிரி இருக்கிறது.... காலம் தான் எத்தனை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வெங்கட்!
      திரும்பிப் பார்ப்பதற்குள் கால் நூற்றாண்டு கடந்துவிட்டது!

      வருகைக்கு நன்றிகள்

      நீக்கு
  2. நிறைவான வாழ்வும் வசதிகளும் இன்னோர் இடத்தில் கிடைத்தாலும் பிறந்த இடமும் நினைவுகளும் ஏக்கத்தை நிச்சயம் உருவாக்கும் என்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு


  3. அருமை தோழர்
    ஒரே ஊரில் இருப்பதால் இந்த வலி தெரியவில்லை

    ஆனால் உங்கள் கவிதை விம்முகிறதே வலியில்

    தொடருங்கள் தோழர்
    வெங்கட் ஜி மூலம் வந்தேன்

    பதிலளிநீக்கு