நெடுவாசல் திற!
[வல்லமை இதழின் 113-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடச் சொன்னார்கள்
ஆற்று மணல் தானெடுத்து
அழிவு நோக்கிப் போகின்றோம்
அணைக்கட்டி நீரதனைக்
காக்கும்வழிக் கண்டார்கள்
மனை போட்டு விற்றுவிட
சூழ்ச்சி பல செய்திட்டோம்
சுட்டெறிக்கும் சூரியன்
வெட்டவெளிக் காடு
பட்டுப்போன நிலமென்று-கை
கட்டி தினம் நின்றிருந்தோம்
பட்டினியைப் போக்குமொரு
பயிர் வளர்க்கும் பருவந்தனில்
கொட்டுகிற மழைக்குக்
காத்துக்கண் பூத்திருந்தோம்
கொட்டும் மழைக்காலத்திலோ-நீர்க்
காக்கும்வழி விட்டுவிட்டு
வறட்டு வாதம் பேசி நம்முள்
பிளவுபட்டு நின்றிருந்தோம்
மாரிமழைப் பொழியுமுன்னே
ஏரி குளம் வாவியெனும்
நீராதாரம் தூர்வாரி
சீரமைத்துக் காத்திடுவோம்
வீட்டுமனையாகிவிட்ட நிலம்
மீட்டு, தேன் குடிக்கும் ஊழல் நரி
கொட்டமதை அடக்கிடுவோம்;
நன்நீர் கிட்ட வழிசெய்வோம்.
பயிர் வளர்த்து உயிர்
காக்கும்
அய்யாக்களைக் கண்ணாகக்
காக்க வழிசெய்யும் தலைமைக்கு
நெடுவாசல் திறந்துவைப்போம்!!!
ஆதங்கத்தைப் பதிவு செய்த விதமும்
பதிலளிநீக்குநம்பிக்கையூட்டும்படியாய்
கவிதையை முடித்த விதமும்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் இரமணி!
நீக்குஅருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள் முரளி!
நீக்குபோட்டியின் முடுவுகள் இங்கே:
http://www.vallamai.com/?p=77220