எதிர்காலப் பொங்கல்
[வல்லமை இதழின் 240-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
விளை நிலங்கள்
தனையெல்லாம்
விலைக் கொடுத்து வாங்கி,வீடுகட்டிப் பார்க்க எண்ணும் ஒரு
வித்தகரின் கூட்டம்…
சோறு போடும் நிலங்களையே
கூறுபோட்டுப் பார்த்து
- எரிவேதிபொருள் தேட தினம்
விழைந்திடுமோர் அரசு…
பாடுபட்டு உழைத்து
செங்கதிர்
பயிர்வளர்த்து வந்த
மண்ணில் – வேறுநாட்டதனின் கூட்டம் தினம்
செய்யும் பல ஆய்வு…
நிலைதிருத்தி விதிமாற்ற
வழியேதும் எண்ணிடாமல்வெள்ளித்திரை வழியே தலைவனைத்
தேடும் மக்கள் கூட்டம்…
மகிழ்ச்சி கொண்டு
குடும்பத்துடன் கொண்டாட
கதிர், கரும்பு எழிற்கோலம் ஏதுமின்றிநெகிழிப் பானையில் பஞ்சு பொங்கல் வைத்து
கொண்டாடும் நம் எதிர்காலச் சமுதாயம்!
நல்லதொரு கவிதை. பாராட்டுகள் சீனு.
பதிலளிநீக்குநன்றிகள் வெங்கட்!
நீக்கு