செவ்வாய், அக்டோபர் 11, 2011

கோஜாக்ரி விரதம்


கோஜாக்ரி விரதம்

என் முந்தைய மஹாலய பட்சம் பதிவில் நான், நாம் கொண்டாடும் பண்டிகைகள் இந்த சந்திர மாத அடிப்படையிலானவைஎன்று குறிப்பிட்டிருந்தேன். மேலும் தமிழ்நாட்டில் நாம் சூரிய அடிப்படையிலான “சௌரமாதங்களைப் பின்பற்றினாலும், மாதப் பெயர்களை பௌர்ணமியின் பெயரில் வழங்குவதையும் குறிப்பிடிருந்தேன்.

இதில் இன்னுமொரு குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், இந்த பௌர்ணமிகளை நாம் பண்டிகைகளாக்க் கொண்ட்டாடுவதுதான்.

1.   சித்திரை       -     சித்ரா பௌர்ணமி
2.   வைகாசி       -     வைகாசி விசாகம்
3.   ஆனி           -     ஆனி மூலம்
4.   ஆடி           -     ஆடிப் பூரம்
5.   ஆவணி        -     ஆவணி அவிட்டம்
6.   புரட்டாசி       -     பூரட்டாதி
7.   ஐப்பசி         -     அஸ்வினி
8.   கார்த்திகை      -     கார்த்திகை
9.   மார்கழி         -     மிருக சீர்ஷம்
[திருவாதிரையாகக் கொண்டாடுகிறோம்]
10. தை            -     தை பூசம்
11.  மாசி           -     மாசி மகம்
12.  பங்குனி        -     பங்குனி உத்திரம்

நமக்கு இவற்றில், மற்ற மாதங்களைப் போல அல்லாமல் ஆனி, ஆடி, புரட்டாசி, ஐப்பசி மாத பௌர்ணமிகளைப் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை.

இன்று, வட இந்தியாவைப் பொருத்தவரை, ஐப்பசி பௌர்ணமி [நமக்கு இன்னும் புரட்டாசியே முடிவடையவில்லை; அவர்களுக்கு ஐப்பசி முடிந்துவிட்டது]. இதை சரத் பூர்ணிமா என்று விமர்சையாகக் கொண்டாடுவர் [குறிப்பாக மராட்டிய, குஜராத், கலிங்க வங்க மாநிலங்களில்]. சரத் காலம் பூர்த்தி அடைவதை ஒட்டிக் கொண்ட்டாடப் படுவது இது. விசாரித்ததில் இதை மழைக்கால அறுவடை விழாவாகக் கொண்டாடுவதாகக் கூறுகின்றனர்.

இந்நாளில், இரவு முழுதும் விழித்திருந்து பொதுவெளியில், நிலா வெளிச்சத்தில், ஆடி பாடி கொண்டாடுவர்; அவல் பாயசம் செய்து லக்ஷ்மி தேவிக்கு படைத்து உண்டு மகிழ்வர். லக்ஷ்மி தேவி “கோ-ஜாக்ரி[கோ என்றால் யார்; ஜாக்ரி என்றால் விழித்திருப்பவர் (ஜாக்ரத் என்றால் விழிப்பு; ஜாக்கிரதை என்றால் விழிப்புடன் இருப்பது என்று வரிசையாகத் தொடரலாம்)] என்று கேட்டு அவர்களுக்கு அருள் செய்வாள்.

மற்ற மாநில மக்களைப் போலல்லாமல், கலிங்க மக்கள் (ஒரிசாவில்) இதை குமார பூர்ணிமா [அவர்களைப் பொறுத்தவரை குமரனுக்கு இன்று பிறந்த நாள்] என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், அவர்கள் முருகனை வணங்காமல், சூரிய சந்திரர்களை வணங்குகிறார்கள்.

பொதுவாகத் தமிழர்களாகிய பௌர்ணமிகளில் விழா கொண்டாடுவோம் எனப் படித்துள்ளேன். ஆனால், இந்த பண்டிகைகள் ஏன் இங்கு கொண்டாடப் படுவதில்லை; ஒருவேளை முன்னர் கொண்டாடியிருந்து இப்பொழுது வழக்கொழிந்து விட்டதா?

பொதுவாக, இந்த மாதத்தில் பகலில் வெப்பம் அதிகமாகவும், இரவில் அதற்கு மாறாக குளிர் அதிகமாகவும் இருக்கும். இதை சமன் செய்யவே இரவில் சூடான் பானம் பருக வேண்டி இதுபோல் பண்டிகை கொண்டாடி இருக்கலாம் என்று என் மராட்டிய நண்பர் ஒருவர் கூறுகிறார். இந்த வெப்பநிலை மாற்றம் நம் தமிழ்நாட்டில் கார்த்திகை/மார்கழி மாதத்தில் தான் தெரியும். ஒருவேளை அது கூட காரணமாக இருக்கலாம்.

10 கருத்துகள்:

  1. பௌர்ணமிகளை நாம் பண்டிகைகளாக்க் கொண்ட்டாடுவதுதான்.

    அருமையாய் பகிர்ந்த
    அற்புதமான தகவல்களுக்கு
    நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  2. இராஜராஜேஸ்வரி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆமா உங்க வலைப்பதிவில் ஃபாளோயர்ஸ்களை காணும்.ஆப்சன் செலக்ட் செய்யலையா?

    பதிலளிநீக்கு
  4. //ஃபாளோயர்ஸ்களை காணும்.ஆப்சன் செலக்ட் செய்யலையா?//

    அந்த Gadget ஏனோ வேளை செய்யவில்லை. அதைத் தேர்ந்தெடுத்த பின்னும் அது “சோதனை முய்ற்சி” என்றே காட்டி “சோதனை” செய்கிறது.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் வருகைக்கு நன்றி வைகோ(!!) ஐயா.

    பதிலளிநீக்கு
  6. வித்யாசமான தகவல் நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன்:)

    பதிலளிநீக்கு
  7. தேனம்மை மேடம், தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கோஜாக்ரி விரதம் பற்றிய நல்ல தகவல்கள் டா.... பகிர்வுக்கு நன்றி.

    உனது பக்கத்திலும் ஹிட்ஸ் அதிகமாக ஆரம்பித்து இருக்கிறது பார்த்து மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  9. //உனது பக்கத்திலும் ஹிட்ஸ் அதிகமாக ஆரம்பித்து இருக்கிறது பார்த்து மகிழ்ச்சி.... //

    வலைச்சரத்தில் உன் தங்கமணி அறிமுகப் படுத்தியதன் விளைவு. நன்றிகள்.

    பதிலளிநீக்கு