செவ்வாய், நவம்பர் 05, 2019

மனக்கண்ணாடி

மனக்கண்ணாடி

வீண் படாடோபம் கொண்டு
வெற்று வார்த்தைப் பேசி
நல்லவனாய்
வல்லவனாய்
நாலும் தெரிந்த துயவனாய்
நித்தம் நூறு வேடம் கொண்டு
சுயநலப் பச்சோந்தியாய்
பிணந்தின்னும் சாத்திரம் சொல்லி
தன்னுருவே தனை வெறுக்க
உள் ஒன்று வைத்து புறமொன்று பேசி
வயிறு வளர்க்கும் நாடகத்தை
உயிர் வாழ்க்கை எனக்கூறி
உழன்று நாளும் திரிவதனை
எடுத்திங்கே காட்டுதம்மா
என் மனக்கண்ணாடி
அரிதாரம் தனை நீக்கி
தன்மானம் கொண்டு
சுயபிம்பம் எதுவென்று
தெளியும் நாள் எந்நாளோ?

2 கருத்துகள்:

  1. சுயபிம்பம் எதுவென்று தெளியும் நாள் எந்நாளோ?

    தெளிவது தான் கடினமே! தெளிந்து விட்டால் சுகமே.

    நல்ல கவிதை சீனு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு