மனக்கண்ணாடி
வீண் படாடோபம் கொண்டு
வெற்று வார்த்தைப் பேசி
நல்லவனாய்
வல்லவனாய்
நாலும் தெரிந்த துயவனாய்
நித்தம் நூறு வேடம் கொண்டு
சுயநலப் பச்சோந்தியாய்
பிணந்தின்னும் சாத்திரம் சொல்லி
தன்னுருவே தனை வெறுக்க
உள் ஒன்று வைத்து புறமொன்று பேசி
வயிறு வளர்க்கும் நாடகத்தை
உயிர் வாழ்க்கை எனக்கூறி
உழன்று நாளும் திரிவதனை
எடுத்திங்கே காட்டுதம்மா
என் மனக்கண்ணாடி
வெற்று வார்த்தைப் பேசி
நல்லவனாய்
வல்லவனாய்
நாலும் தெரிந்த துயவனாய்
நித்தம் நூறு வேடம் கொண்டு
சுயநலப் பச்சோந்தியாய்
பிணந்தின்னும் சாத்திரம் சொல்லி
தன்னுருவே தனை வெறுக்க
உள் ஒன்று வைத்து புறமொன்று பேசி
வயிறு வளர்க்கும் நாடகத்தை
உயிர் வாழ்க்கை எனக்கூறி
உழன்று நாளும் திரிவதனை
எடுத்திங்கே காட்டுதம்மா
என் மனக்கண்ணாடி
அரிதாரம் தனை நீக்கி
தன்மானம் கொண்டு
சுயபிம்பம் எதுவென்று
தெளியும் நாள் எந்நாளோ?
தன்மானம் கொண்டு
சுயபிம்பம் எதுவென்று
தெளியும் நாள் எந்நாளோ?
சுயபிம்பம் எதுவென்று தெளியும் நாள் எந்நாளோ?
பதிலளிநீக்குதெளிவது தான் கடினமே! தெளிந்து விட்டால் சுகமே.
நல்ல கவிதை சீனு. பாராட்டுகள்.
வருகைக்கு நன்றிகள்
நீக்கு