தாழ் திறவாய்!
[வல்லமை இதழின் 233-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
வானுயர் கோவிலில் தொழுதுநிற்போம்
பள்ளிவாசல்கள் தோறும் ஓதிநிற்போம்
தேவ ஆலயம் தேடி ஓடிடுவோம்
ஆதிமூலத்தை காண ஏங்கிடுவோம்!
காட்டினில் இறையைத் தேடிடுவோம் - மந்திர
பாட்டினில் அவன்தாள் நாடிடுவோம் - வெற்று
ஏட்டினில் சொல்லிய வழியேல்லாம்
போட்டிப் போட்டு செய்திடுவோம்!
ஆண்டுகள் பல தவஞ்செய்து நின்று
கண்டிடும் வழியென்னி காத்துநிற்போம்
கண்டவர் விண்டிலர் என்று சொல்லி
கண்டிட தினந்தினம் ஏங்கிடுவோம்!
நல்லுரை சொல்லிடும் வேதமெல்லாம் - பிறர்
வெந்துயர் தீர்த்திடும் அன்பர்தனை
முந்திய தெய்வமாய் வைத்தையுணர்ந்து - நம்
உள்ளுரை பரம்பொருள் மீட்டிடுவோம்!
ஈட்டிடும்பொருள் பிறர்க்கீழ்ந்திடுவோம்!
வாட்டிடும் பிறர்பிணித் தீர்த்திடுவோம்!
நாட்டினில் வறியவர் வாழ்ந்திடவே
பூட்டிய மனத்தாழ் திறந்திடுவோம்!
ஆஹா ! அற்புதமான கவிதை. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண சொல்லும் அற்புத கருத்துக்கள் !! ... மகிழ்ச்சி !!! My Web mlog "கிளிக்"குங்க
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்
நீக்கு