திங்கள், ஜனவரி 06, 2020

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை 
[வல்லமை இதழின் 237-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


ஆதாரம் தேடித் தேடி 
ஆண்டாண்டு அலையும் கொடிகள்! 
சேதாரம் கிட்டாமல் 
செழித்துக் காய்ந்த நிலங்கள்! 
நீராதாரம் பொய்த்துப் போய் 
காய்ந்த நிலமடந்தை! 
ஏர்முனைத் தேய்ந்து போய் 
மழுங்கிய மண்ணின் மைந்தர்! 
ஒட்டிய தேகம் பட்டினி வயிறு 
எலும்பு தெரியும் வெற்றுடம்பு 
கந்தல் நிறை வேட்டி - என 
உன்நிலைப் பார்த்தபின்பு 
நூற்றாண்டு பல கண்டாலும் 
காந்திக்கும் உடை மாறாது!  
கண்ணில் கனவுகள் வண்ணம் இழந்து போனாலும் 
கண்ணீர் வற்றிக் காய்ந்து போனாலும் 
சுழலும் சக்கரம் சுற்றுவது நிற்பதில்லை - இவர் 
வாழ்க்கைத் துயரங்கள் முடிவிற்கு வருவதில்லை!  
இங்குப் பொய்த்தது பருவம் மட்டுமல்ல 
பதவியிலிருப்போர் வாக்கும் தான்

2 கருத்துகள்:

  1. நல்ல கவிதை. வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும் சீனு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்

      நீக்கு