[வல்லமை இதழின் 237-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
ஆண்டாண்டு அலையும் கொடிகள்!
சேதாரம் கிட்டாமல்
செழித்துக் காய்ந்த நிலங்கள்!
நீராதாரம் பொய்த்துப் போய்
காய்ந்த நிலமடந்தை!
ஏர்முனைத் தேய்ந்து போய்
மழுங்கிய மண்ணின் மைந்தர்!
எலும்பு தெரியும் வெற்றுடம்பு
கந்தல் நிறை வேட்டி - என
உன்நிலைப் பார்த்தபின்பு
நூற்றாண்டு பல கண்டாலும்
காந்திக்கும் உடை மாறாது!
கண்ணீர் வற்றிக் காய்ந்து போனாலும்
சுழலும் சக்கரம் சுற்றுவது நிற்பதில்லை - இவர்
வாழ்க்கைத் துயரங்கள் முடிவிற்கு வருவதில்லை!
பதவியிலிருப்போர் வாக்கும் தான்…
நல்ல கவிதை. வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும் சீனு.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்
நீக்கு