செவ்வாய், டிசம்பர் 11, 2012

பாரதி! நீ மீண்டும் வா!


பாரதி…
எங்கு நீ சென்றாய் பாரதி…
இன்னும் உன் தேவை இருந்திடும் போதும்
எங்கு நீ சென்றாய் பாரதி…

பாட்டினில் பல்பொருளுரைத்தாய் – அதைக்
கேட்டிங்கு நடக்க யாருமில்லை!
நாட்டின் நிலைமையைச் சொல்வேன் – இதைக்
கேட்டு நீ ஆவனச் செய்வாய்…

பாருக்குள்ளே நல்ல நாடென்றாய் – மது
ஆறுக்குள்ளே தினம் மூழ்க வைத்தார்…

சாதிகள் இல்லையடி யென்றாய்
வீதிகள் தேறும் சங்கம் வைத்துச்
சாதிக்கொரு கொடி ஏற்றி வைத்தார்…

தனியொரு மனிதனுக்குணவில்லையேல்
ஜகத்தினையே நீ அழித்திடச் சொன்னாய் – ஆயின்
தாலியை விற்றும் உணவின்றி
பட்டினியால் தினம் உழவனைச் சாகவைத்தார்
தானியம் விளைவிக்கும் விளை நிலத்தைக்
காலி மனையெனக் கூறி விற்றுவிட்டார்…

மாமுனியோர் பலர் வாழ்ந்த நாடென்றாய்
காமுறுவோர் எலாம் சாமியாய் மாறி – அவர்
பேயென மாறிப் பொல்லாங்கு செய்துப்
பிணந்தின்னிச் சாத்திரம் ஓதுகின்றார்…

பஞ்சை மகளிரவர் தஞ்சமின்றி
மிஞ்சவிட மாட்டோமென்றாய் – அவர்
பிஞ்சென்றுப் பூமியில் பிறக்குமுன்பே
நஞ்சைக் கருவினில் வைத்துவிடும் – கடும்
நெஞ்சைக் கொண்டிங்கு வாழ்ந்து நின்றார்…

செந்தமிழ் நாட்டைச் சொல்கையிலே
செவிதனிலின்பம் பாயுமென்றாய் – இங்கோ
பைந்தமிழ் உயிரெனப் பொய்யுரைத்துப்
பள்ளிப் பாடத்திலேத் தமிழ் நீக்கிவிட்டார்….

மன்னும் இமயமென் மலையென்றாய் – நதி
மண்ணையும் விற்றுப் பொருள் – வெளி
மண்ணிலே அதைத் தேக்கி வைத்தார்…

சொந்த நாட்டிலேப் பரர்க்கடிமைச்
செய்திடமாட்டோமென்றே சூளுரைத்தாய் – இவர்
அந்நிய நிறுவனம் வளர்த்திடவேத் தினம்
அடிமை சாசனம் தந்து நிற்பார்…

காட்டும் இந்நிலை மாற்றிடவே
பாட்டுச் சாட்டையைத் தான் சுழற்றி
நாட்டைத் திருத்துமோர் சாரதி
மீண்டும் நீ வருவாய்! பாரதி!!!

16 கருத்துகள்:

  1. பாரதி மீண்டும் வந்தாலும் இருக்கிற குழப்பங்களைக் கண்டு மீண்டு வருவாரா!

    (அப்பு! தமிழ்நாட்டுக்கு சமீபத்தில் போயிருந்தீர்களா என்ன! ரொம்ப சூடா இருக்கீங்க. காவிரித் தண்ணி வந்திடுச்சாம்ல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் பத்து!

      [சீசன் டிக்கெட் வைத்துள்ள நீங்க பாக்கலயா! ஓ!! நாங்கதான் காவேரிகரை ஆளுங்க, உங்களுக்கு தாம்ரபரணில் தண்ணி வந்தாதான் தெரியுமோ?]

      நீக்கு
  2. சூடான வரிகள். பாரதி மீண்டும் வந்தாலும் இந்தப் பாரை திருத்திட முடியமா என்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  3. ஏற்க முடியாத கற்பனை.

    ஒரு மனிதனை அவன் காலம் உருவாக்குகிறது. அதாவது அவனின் எண்ணங்களும் அவ்வெண்ணங்களில் பிரதிபலிப்பாக அவனின் செயல்களும் அவனின் காலம், இடம், சூழல் போன்றகாரணிகளால் உருவாக்கப்படுபவை. தப்பவே முடியாது.

    பாரதியார் வாழ்ந்த காலமே அவரை உருவாக்கியது. அக்காலத்தில் மக்களின் எண்ணம் இக்கால மக்களின் எண்ணத்தைவிட வேறானது. அது உங்கள் பாடலில் எதிர்மறையாக‌ விளக்கப்பட்டிருக்கிறது.

    இக்காலத்தில் பாரதியார் போன்ற ஒருவர் உருவாக வாய்ப்பேயில்லை. அப்படியே இருந்தாலும், அவரை ஜெயலலிதா ஆஸ்தான கவிஞராக்கிவிடுவார். பின்னர் பாரதியார் அதிமுக புள்ளிகளோடு நெருங்கிப்பழகி, சென்னையில் கலியாண மண்டபங்கள் கட்டுவார். கடையத்தில் புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு தன் இருமகள்களுக்கும் மஹத்தான வரதட்சிணைபோட்டு நல்ல மாப்பிள்ளைகளைப் பிடித்து ஜெயலலிதா தலைமையில் மணமேடை போடுவார். புரட்சித்தலைவி வாழ்க என நீண்ட கவிதை எழுதுவார்.

    கருநாநிதி ஆட்சியில் இருந்தாலும் அப்படித்தான். வைரமுத்துவைப்பாருங்களேன் புரியும்.

    காலத்தின் சக்தி அப்படிப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்காலத்தின் மக்களின் எண்ணம் மட்டுமே பாரதியை உருவாக்கவில்லை. அவன் வாழ்ந்த காலத்தில் அவனை ஆராதிக்க ஏன் ஆதரிக்கக் கூட ஆளில்லை. பெரும்பான்மையான மக்கள் சுதந்திரச் சிந்தனைக் கொண்டிருக்கவில்லை. (அவன் மறைவு 1921 அப்போது காங்கிரஸ் கூட முழு மூச்சாகச் சுதந்திரப் போராட்டம் நடத்தவில்லை; அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குழுக்கள் குறிப்பாக தீவிர எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே ஈடுபட்டனர்.) சுதந்திரப் போராட்டம் மட்டுமேயும் அவன் பாடு பொருளாக இருக்கவில்லை. அவன் எழுத்துக்களும் சுதந்திரப் போராட்டத்தைத் தாண்டி பல்வேறு புதுச் சிந்தனைகளைக் கொண்டே இருந்தது. அது அக்காலத்தில் பெருவாரியான மக்களின் எண்ணங்களுக்கு எதிராக இருந்து வந்திருக்கிறது.

      அதனால் தான் அவர் இறந்த பொழுது அதில் கலந்து கொண்டவர்கள் வெறும் 12 பேர்.

      வைரமுத்துவையும் பாரதியையும் இணைத்து நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் உங்கள் நகைச்சுவை உணர்வு புரிபடுகிறது!!!

      நீக்கு
  4. ஈடி இணையில்லாத கவிஞன் பாரதி. உங்கள் ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது ஸ்ரீனி! வருவாரா மீண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள் முரளி!

      தங்கள் கவிதை மிகவும் நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

      நீக்கு
  6. யார் வந்தாலும் ஒன்றும் ஆகபோவதில்லை
    அவரவர் பட்டுதான் திருந்தவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. யார் வந்தாலும் ஒன்றும் ஆகபோவதில்லை
    அவரவர் பட்டுதான் திருந்தவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. I thank Pattaabi Raman for a realistic statement.

    Every human being is deeply affected by the time he lives in. No escape. If he tries to overcome the effect of the time, he will be an odd man out and may soon commit suicide.

    Bharatiyaar will not have been an exception : this is what I wrote. But Srinivasan is not bold enough to see the ground realites.

    Take Venkata Srinivasan (I love the name) himself. All that he writes in his blog posts clearly evidence the background he came from. Wherever he goes, he wont be successful to start afresh and to see things in another perspective if that perspective challenges his own long cherished ones, which, as I said, are the products of the culture he was born in and brought up with.

    I am not what I am. I am what I was made out to be. Venkata Srinivasan is not what he is or wants to be. He is what he was made out to be. Bhratiyaar was not what he was or even what he wanted to be. He was what he was made out to be. If you examine his life closely, you will have to observe a burning conflict between what he wanted to be and what he had to be. Poor fellow! Lifelong suffering. His critics charge him with unsuccess in his efforts to be different.

    What we have been makes us what we are.

    பதிலளிநீக்கு