வெள்ளி, ஜூன் 15, 2012

நவரத்தினங்கள் (பாகம்-1)


உலகில் பலவகையான கற்கள் இருந்தாலும் ஒன்பது கற்கள் சிறப்பாக நவரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படும். அவை...

1.                  மாணிக்கம்:

இது ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்றும், ஹிந்தியில் மாணிக் என்றும் அழைக்கப்படும். புராண நூல்களில் இதற்கு குருவிந்தம், பதுமராகம், ரவிமணி, ஹாரநாயகம் என்ற பெயர்களும் உண்டு. இது பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் கல். ரோஸ் அல்லது சிகப்பு நிறமாக ஒளி ஊடுறவும் தன்மையுடனும் அதே நேரம் முழு சிவப்பு நிறத்தில் ஒளி ஊடுறவா கல்லாக இரு விதமாகவும் கிடைக்கும்.

உயர் தர மாணிக்கங்கள் சாதரண வெளிச்சத்தில் சிகப்பு நிறத்தையும் அதிக வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரத்த சிவப்பையும் காட்டும். உலகிலேயே மிகவும் தரமான மாணிக்கம் பர்மாவிலும் அதற்கு அடுத்த நிலையில் இலங்கையிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் ’மைசூர் ரூபி’ என்றத் தரத்தில் சற்று குறைந்த மாணிக்கமும் கிடைக்கிறது.

மாணிக்கத்தில் உள்ள ரசாயனப் பொருள் அமோனியம்-ட்ரை-ஆக்ஸைடு ஆகும்.வை கொரண்டம் (corundum) என்கிற வகையைச் சார்ந்தவை.

மாணிக்கம், போலியாக / செயற்கையாகத் தொழிற்சாலையிலும் தயார் செய்யப் படுகிறது. ஆனால் இதில் காற்றுக் குமிழ்கள் காணப்படும். இது பொதுவாக ஒளி ஊடுறுவக் கூடியதாகவே இருக்கிறது. அமெரிக்கன் டையமண்ட் கற்களில் சிகப்பு நிறத்திலும் கற்கள் வரும். அவையும் மாணிக்கம் போலவே இருக்கும்; இவற்றை சிகப்பு ஸ்பைனல் கற்கள் என்று கூறுவர். இதை Dichroscope என்ற கருவியின் மூலம் அறியலாம்.

புற ஊதா கதிர் விளக்குச் சோதனையிலும் மாணிக்கத்தைக் கண்டறிகிறார்கள். மாணிக்கத்திற்கு நிறம் தரும் குரோமியம், குறிப்பாக பர்மா மாணிக்கங்களில் அதிகமாக, உள்ளதால் அவை புற ஊதா கதிர் விளக்குகளில் அதிகமாக ஒளிர்கின்றன.

2.                  முத்து

இதன் ஆங்கிலப் பெயர் பியர்ல் (Pearl); இந்தியில் இதன் பெயர் மோத்தி (मोति). இதன் புராதனப் பெயர் ப்ரமௌக்திகம் என்பதாகும். உலகிலேயே பட்டைத் தீட்டப் படாத அல்லது பட்டைத் தீட்ட வேண்டிய அவசியமில்லாத ரத்தின வகை ஒன்ரு உண்டெண்றால் அது முத்து தான். மற்ற ரத்தினங்கள் பட்டைத் தீட்டத் தீட்ட ஜொலிக்கும். ஆனால், முத்து ஒன்றுதான் இயற்கையிலேயே ஜொலிப்பவை. முத்து வானவில்லின் ஏழு நிறங்களையும் காட்டி ஜொலிப்பிற்கு ‘ஷீன்’ என்று பெயர். அதே நேரம் மற்ற ரத்தினங்களைப் போலல்லாமல் முத்துக்கள் சில காலத்திற்குப் பின் நிறம் மங்கத் தொடங்கி விடுகின்றன.

இதில் உள்ள ரசாயனப் பொருள் கால்சியம் கார்பனேட். இது ஆர்கானிக் ஜெம்ஸ் என்ற வகையைச் சார்ந்தது. சாதாரணமாக சிப்பிகள் அவற்றின் உள்ளே அழுக்குகள் படிந்திருந்தால் அவை தாக்காமலிருக்க வேதிப்பொருளைச் சுரந்து அந்த அழுக்கைச் சுற்றி அடுக்குகளாகப் படிந்துவிடுகின்றன. இந்த அடுக்குகள் மேலும் மேலும் இறுகி திரண்டு முத்துக்களாக மாறிவிடுகின்றன.  

செயற்கை முத்துக்களைப் பொறுத்தவரை, இந்த சிப்பிகளில் துளை செய்து அதில் வேறு சிப்பிகளின் தசைகளை வைத்து விடுவார்கள் அவற்றைச் சுற்றி இந்த வேதிப் பொருள் படிந்து அதன் மூலம் முத்துக்கள் உருவாகின்றன. ஆனாலும் இவற்றின் அடுக்குகள் இயற்கை முத்துக்களைப் போல அல்லாமல் வெங்காயத்தைப் போல ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காக இருக்கின்றன.

3.                  புஷ்பராகம்

சாதாரணமாக இதை கனக புஷ்பராகம் அதாவது ஆங்கிலத்தில் Yellow Sapphire என்று அழைக்கப்படுகின்றன; சிலர் இதை மஞ்சள் டோபாஸ் என்றும் அழைப்பர். இதன் புராதனப் பெயர் பதுமராகம், பதுபராஜ் என்பவை ஆகும். இந்தியில் இதன் பெயர் புக்ராஜ். கொரண்டம் வகையைச் சார்ந்த இவற்றில் உள்ள வேதிப் பொருளும் அமோனியம்-ட்ரை-ஆக்ஸைடு தான். இது நிறமற்றது. ஆனால், இதனுடம் வேறு தாதுப் பொருட்கள் சேர அவற்றின்  தாக்கத்தால் இவை மாணிக்கமாக அல்லது நீலம் என்று மாற்றம் பெருகின்றன. நிறம் எதுவும் சேராதது வெண்புஷ்பராகம் என்றழைக்கப் படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா மாநிலத்திலும், இலங்கை, ஆஸ்த்ரேலியாவிலும் கிடைக்கின்றன. புஷ்பராகத்தைப் போலவே மஞ்சள் டோபாஸ், மஞ்சள் பெரில் அல்லது ஹெலியோடோர் ஆகியவையும் இருக்கும்; ஆனால், இவையும் அபூர்வக் கற்களே. புஷ்பராகத்தின் போலியாகக் கருதப் படுவது சைட்ரைன் குவார்ட்ஸ் என்ற கல்லே. ஆனால், இது புஷ்பராகத்தைவிட எடைக் குறைவாக இருக்கும்.


4.                  கோமேதகம்

கோமேதகத்தின் ஆங்கில பெயர் ஹெஸோநைட் (Hessonite). ஹிந்தியிலும் இதன் பெயர் கோமேதக் தான். இதன் நிறம் பசுவின் சிறுநீரின் நிறத்தில் இருப்பதால், புராதன காலத்தின் இதை கோமூத்திரம் என்றும் அழைப்பர். இது கார்னெட் வகையைச் சார்ந்தது. இதிலுள்ள ரசாயனப் பொருள் கால்சியம் அலுமினியம் சிலிகேட். ஆரஞ்சு நிறமுடைய அமெரிக்கன் டைமண்ட் கோமேதகம் போலத்தான் இருக்கும். தேன் நிற ஜிர்க்கானைக் கோமேதகத்திற்கு போலியாகக் கூறுவர்.

7 கருத்துகள்:

 1. ம்ம்ம்ம். நவரத்தினப் பகிர்வு ஜொலிக்கிறது - விவரங்களுடன்....

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. ம்ம். போட்டிருக்கலாம் தான். ஒருவேளை, எனக்கே இந்த ராசிக்கற்களில் நம்பிக்கை இல்லை என்ற காரணத்தினாலேயோ என்னவோ போடவில்லை. தலைப்பு கூட ’நவரத்தினங்கள்’ என்று தான் இருக்கிறதே தவிர ’ராசிக்கற்கள்’ என்று இல்லை

   நீக்கு
 3. டோபாஸ் என்பது வேறு,புஷ்பராகம் வேறு.
  முன்னது நவரத்தின வகை இல்லை;பின்னது நவரத்தின வகை.
  நிறைய தகவல் பிழைகள் இந்தப் பதிவில் இருக்கின்றன.

  மாணிக்கமும் உயர்தரத்திலானது பர்மாவில் கிடைத்தது அந்தக் காலம்.சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்..இப்போது இலங்கை,தாய்லாந்து, போன்ற பல இடங்களில் கிடைக்கிறது...

  மாணிக்கம் சூரிய ஆதிக்கம் சிறந்திருப்பவர்களுக்கும்,புஷ்பராகம் குரு ஆதிக்கம் சிறந்திருப்பவர்களுக்கும்,முத்து சந்திர ஆதிக்கம் சிறந்திருப்பவர்களுக்கும் பொருந்தும்..

  பிறந்த தேதிப் படி 1 ம் தேதி பிறந்தவர்கள் மாணிக்கமும்,புஷ்பராகமும் அணியலாம்;முத்து 2 ம் தேதி பிறந்தவர்களுக்கு நல்ல பலனளிக்கும்.பிறந்த தேதியை வைத்துப் பார்க்கும் போது கிரக ஆதிக்கத்தையும் பார்த்து நவரத்தினங்களைத் தெரிவு செய்ய வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள்

   Topaz-ம் புஷ்பராகமும் வெவ்வேறானவை. ஆனாலும், சிலர் புஷ்பராகத்தை மஞ்சள் டோபாஸ் என்று நினைத்து அவ்வாறே அழைகின்றனர். அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

   தயவு செய்து, தகவல் பிழைகளைச் சுட்டிக் காட்டவும். அவற்றைத் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

   பர்மா அரசியல் ரீதியாகத் தனிமைப் பட்டிருப்பதால் அங்கிருந்து மாணிக்கங்கள் கிடைப்பதில்லையோ என்னவோ?

   நீக்கு
 4. கோமேதகம் எந்த கையில்(வலது or இடது கையிலா)எந்த விரலில் எந்த நாளில் அணிய வேண்டும்.

  பதிலளிநீக்கு