வியாழன், ஜனவரி 05, 2012

பஞ்சாயுத ஸ்தோத்திரம் (வைகுந்த ஏகாதசி பதிவு)ஸ்புரத் ஸஹஸ்ரார சிகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத் விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென
சுதர்சனம் சொலித்திடும் தீச்சுடராய் - தேவர்தம்
பகைவரை அழித்து நிற்கும் பெருமான்
கைச்சக்க்ரத்தைச் சரணடைவோம்

            விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய
          யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
          தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
          சங்கம் ஸதா(அ)ஹம் ச்ரணம் ப்ரபத்யே

கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான்
கோவைச் செவ்வாய் காற்றொலியால்
தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு
பாஞ்சஜன்யத்தைச் சரணடைவோம்

            ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்
          கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
          வைகுண்ட வாமாக்ர கரா பிம்ருஷ்டாம்
          கதாம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

பொன்னென மின்னும் மேருவைப் போல் - கெட்ட
தைத்யர் தன் குலம் அழித்து நின்று
வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை
கௌமோதகீயைச் சரணடைவோம்

            ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்ட
          சேத க்ஷர சோணித திக்த தாராம்
          தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
          கட்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

தேவர்தம் குடியை காத்திடவே – கொடிய
ராக்கதர் தந்தலை கொய்தவர்தம்
உதிரத்தில் குளித்த செவ்வாளாம்
நந்தகம் தன்னை சரணடைவோம்

யஜ்ஜ்யாநி நாத ஸ்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ
ஸார்ங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

மின்னலாய் பயஇருள் போக்கி நின்றுபகைவர்
பின்னமாய் இடிந்திநாணொலிக்க
சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும்
சாரங்கத்தை என்றும் சரணடைவோம்

இமம் ஹரே பஞ்ச மஹாயுதா நாம்
ஸ்தவம் படேத் யோ (அ)நுதிநம் ப்ரபாதே
ஸமஸ்த து:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

காலையில் அனுதினம் கருத்துடனே – ஆயுத
மாலையிதை ஓதி நின்றால்
துன்பங்கள் அனைத்தும் நீங்கியிங்கு நித்ய
தூயன் அருளில் துய்த்திடலாம்.

வநேரணே சத்ரு ஜலாக்நி மத்யே
யத்ருச்யா பத்ஸு மஹா பயேஸு
இதம் படன் ஸ்தோத்ர நா குலாத்மா
ஸுகி பவேத் தத்க்ருத ஸர்வ ரக்ஷ:

போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் - கெட்ட
பேரிடர் பொழுதின் பயங்களிலும்
தோத்திரம் இதனை ஓதி நின்றால் - சுகம்
மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்.

16 கருத்துகள்:

 1. ராம்குமார், நானே சொந்தமா ஒரு முயற்சி செய்தால் அதை மண்டபத்தில யாராவது எழுதித் தந்ததானு கேட்கிறாயே!!

  பதிலளிநீக்கு
 2. //நானே சொந்தமா ஒரு முயற்சி செய்தால் அதை மண்டபத்தில யாராவது எழுதித் தந்ததானு கேட்கிறாயே!!//

  இவ்வளவு அற்புதமாக தமிழாக்கம் இருக்கும் போது வேறு எப்படி கேட்பதாம்?

  பதிலளிநீக்கு
 3. // Ama sanskrit padichirukiya? //
  regular வகுப்பில் இல்லை. தனியாக கொஞ்ச நாள்.
  (எல்லாவற்றிலும் - நாய் வாய் வைத்தது மாதிரி - கொஞ்ச நாள் ஆர்வமுடம் ஆரம்பிபேன். பிறகு, தானாகவோ அல்லது வேறுவழி இல்லாமலோ விடுபட்டு போய்விடும் )

  பதிலளிநீக்கு
 4. நல்ல தமிழாக்கம் சீனு....

  //நண்பேண்டா!!// ரசித்தேன்...

  பதிலளிநீக்கு