நேற்று நமது நாட்டின் 63வது குடியரசு நாள். மக்களாட்சித் துவங்கி 62 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. நாம் விதவிதமான ஆட்சி முறைகளையும் அவற்றின் ஆங்கிலப் பெயர்களையும் பார்ப்போம்.
மக்களாட்சி
|
Republic Government / Democracy
|
ஒற்றையாட்சி
|
Unitary Government
|
கூட்டாட்சி
|
Federal Government
|
நாடாளுமன்ற ஆட்சி
|
Parliamentary Government
|
செங்கோலாட்சி
|
Benign Government
|
கொடுங்கோலாட்சி
|
Despotic Government
|
நாடாளுமன்றமற்ற ஆட்சி
|
Non-Parliamentary Government
|
முதாலாளித்துவ ஆட்சி
|
Capitalistic Government
|
தொழிலாளியர் ஆட்சி
|
Proletarian Government
|
அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி
|
Constitutionalism
|
கூட்டுடமை
|
Socialism
|
பொதுவுடமை
|
Communism
|
பேரரசாட்சி
|
Imperialism
|
சிற்றரசாட்சி
|
Feudalism
|
கட்டுடைமை
|
Fascism
|
அரசாங்கம் அற்ற நிலைமை
|
Anarchism / Nihilism
[Nihilism பொதுவாக மாயை போன்ற நிலையைக் குறித்தாலும் சில இடங்களில் கட்டுபாடு அற்ற நிலைமை என்ற பொருளிலும் வழங்கப்படும்]
|
உழைப்பாளராட்சி
|
Ergatocracy
|
மன்னராட்சி / ஏகாதிபத்யம்
|
Monocracy
|
கும்பலின் ஆட்சி
|
Mobocracy / Ochlocracy
|
தனி மனித ஆட்சி
|
Autocracy / autarchy
|
சர்வாதிகார ஆட்சி
|
Dictatorship / Absolutism / Shogunate / Totalitarianism / Despotism / Authoritarianism
|
அறிவியல் தொழில் நுட்பவியலியரின் ஆட்சி
|
Technocracy
|
தேவ (தேவதூதர்களின்) ஆட்சி / மதகுருக்களின் ஆட்சி
|
Theocracy
|
அனைவரின் ஆட்சி
|
Pant-isocracy
|
குருக்களாட்சி
|
Hierocracy
|
உயர்ந்தோர்/சீரியோர் ஆட்சி
|
Aristocracy
|
பணக்காரர்கள் ஆட்சி / செல்வராட்சி
|
Plutocracy
|
அறிஞராட்சி
|
Meritocracy
|
படை ஆட்சி
|
Stratocracy
|
அன்னிய ஆட்சி
|
Xeno-cracy
|
ஆண்கள் ஆட்சி
|
Androcracy
|
பெண்கள் ஆட்சி
|
Gynecocracy / Gynarchy
|
தந்தை ஆட்சி
|
Patriarchy
|
தாய் ஆட்சி
|
Matriarchy
|
சிலர் ஆட்சி
|
Oligarchy
|
இருவர் ஆட்சி
|
Diarchy / Dyarchy
|
கிழவராட்சி
|
Gernotocracy
|
பலர் ஆட்சி
|
Polyarchy
|
கள்வர்கள் ஆட்சி
|
Kleptocracy
|
அமைச்சரவை அரசு
|
Limited Monarchy
|
நாடுளுமன்ற மன்னராட்சி
|
Parliamentary Monarchy
|
நாட்டாண்மை
|
City
|
எதேச்சாதிகாரம்
[ஒரு நாடோ அல்லது ஒரு இனமோ மற்றதை அடிமைப் படுத்துதல்]
|
Hegemony / Super-power
[Domination of one nation or one social group over other]
|
காமன்-வெல்த் நாடுகள்
[ஐக்கிய நாடுகளைத் தலைமையாகக் கொண்டு பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்தை மதிக்கும், தற்போது சுயாட்சி பெற்ற, பிரிட்டனின் முன்னாள் காலணிகளின் கூட்டமைப்பு ]
|
Commonwealth Nations
[Association of nations consisting of
|
இப்போது representative republican monarchy (under foreign guidence) என்ற புதிதான ஒன்றை இந்தியாவில் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள்!!!.
இந்திய அரசியல் வரலாற்றில் மாபெரும் அரசாங்கங்களைத் தந்த பீகாரில் spousocracy முயற்சி செய்தாகிவிட்டது.
தமிழகமும் இதில் சளைத்த்தல்ல; kinsocracy (குடும்ப ஆட்சி), companianocracy (உடனிருப்பவர் ஆட்சி) என்று புதிது புதிதான முயற்சிகளைச் செய்த வண்ணம் இருக்கிறது.
இருந்தாலும், மக்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, இந்த ஆட்சி அமைப்பை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுக்க (இவற்றைத் தவிர வேறு வழியும் இல்லாததால்) வாய்ப்பு கொடுக்கிறார்கள். அதனால், பெயரளவிலாவது, மக்களாட்சி தான் நடந்து கொண்டு இருப்பதாக நாமும் சொல்லிக் கொள்ளலாம்.
பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது பகிர்வுக்கு நன்றி பாஸ்
பதிலளிநீக்குநன்றி ராஜா.
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் சீனு.... தில்லி திரும்பி வந்தாச்சா?
பதிலளிநீக்கும்ம். வியாழக் கிழமைக் காலையில் திரும்பினேன்.
பதிலளிநீக்குஏற்கனவே நாட்டு அரசியலைப் பார்த்து குழம்பிப் போயிருக்கோம். இதுல நீங்க வேற Ergatocracy, Pant-isocracy,Plutocracy - ன்னு என்னென்னவோ சொல்கிறீர்கள். மொத்ததில் நம்ம நாட்டுல என்ன ஆட்சி நடக்குதுன்னு சொல்றீங்க? Democracy-யா Demo-crazy-யா!
பதிலளிநீக்குஇப்பொழுது நடப்பது Democracy-யின் demo. உண்மையான Democracy மலர, மக்களுக்கு நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தேவையான கல்வியறிவு தேவை; அந்த கல்வியறிவு மக்களைச் சென்றடைய நல்ல ஆட்சியாளர்கள் தேவை. இது, ஒரு மாயச் சுற்று [vicious circle]. நாடு சுத்ந்திரம் அடைந்து இன்னமும் மக்களாட்சியைத் தக்க வைத்திருப்பதே ஒரு நல்ல அறிகுறிதான். இது படிப்படியாகத் தான் வளர்ந்து ஒரு நல்ல நிலையை அடைய முடியும். இந்த transition நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாததே. இது வேறு திசையை நோக்கித் திரும்பிவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்.
பதிலளிநீக்குHappy Republic Day
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள், அப்பாவி தங்கமணி.
பதிலளிநீக்கு