ஞாயிறு, ஜனவரி 08, 2012

திருவாதிரை - உமா மஹேச்வர ஸ்தோத்ரம்

திருவாதிரை

இன்று திருவாதிரை தரிசனம் ; இது நாம் அனைவரும் அறிந்த்தே. ஆனால், இதற்கு முதல் நாள் மாலை ஆருத்ரா அபிஷேகம் என்று சிவாலயங்களில் நடைபெறும்.

தொன்மம்,  தில்லையில் சேந்தனாருக்கு அருள சிவபெருமான் சிவனடியாராக வந்து களி தின்றதாகக் கூறினாலும், அனைத்து சிவாலயங்களிலும் இது கொண்டாடப் படுகிறது.

தில்லையில் வாழ்ந்த சேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் தினமும் விறகு வெட்டி அதில் ஈட்டும் பொருளில் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்புதான் தன் உணவை உண்ணுவார். அவ்வாறு, தினமும் தடையில்லாமல் நடந்தால் அது கதையாக, தொன்மமாகக் கூறப்பட்டிருகாது.

ஒரு பெருமழைக் காலத்தில் அரிசி கிடைக்காமல், வீட்டில் சிதறியிருந்த குருணையைத் தொகுத்து அதைக் களியாக்கி, மண்ணில் வீழ்ந்திருந்த காய்களைக் கூட்டாக்கி, வெகுநேரம் கழித்து மாலை/இரவில் சிவனடியார் உருவில் வந்த சிவபெருமான் உண்டார். மறுநாள் காலை தில்லையம்பதி கோவில் வழிநடை முழுதும் களி சிதறிக்கிடக்க அதைத் தொடர்ந்து சேந்தனார் வீட்டையடைந்த மன்னன், கோவிலை அசுத்தப் படுத்தியமைக்காக அவரைத் தண்டிக்க, சிவபெருமான் அவன் முன் தோன்றி, சேந்தனாரின் களி உண்டுத் தான் களிநடம் புரிந்ததைக் கூறி அவரைத் தடுதாட்கொண்டார்.

இதனால், சிவாலயங்களில் காலையில் சிவ நடனம் நடப்பதும் உண்டு. எங்கள் அம்மா, திருவாரூரில் நடக்கும் சிவ நடனம் தில்லையைவிடச் சிறப்பாக இருக்கும் என்று சிலாகித்துக் கூறுவார். (என்ன இருந்தாலும் ஊர் பாசம் விடுமா?)

தில்லையில் ஆடுவது ஆனந்த நடனம்.
ஆரூரில் ஆடுவது அஜபா நடனம். பொதுவாக, சிவன் விஷ்ணுவின் இதயத்தில் இருப்பதாக கூறுவர். அதிலும், குறிப்பாக தியாகராஜ ஸ்வாமி (திருவாரூர் சிவபெருமானின் பெயர்) தான் திருமாலின் இதயத்தில் இருப்பதாகக் கூறுவர். அப்படி, விஷ்ணுவின் இதயத்தில் அதன் இயக்கத்திற்கு ஏற்ப தாளகதியில் ஆடுவது அஜபா நடனத்தின் சிறப்பு.

நட்சத்திரங்களில் இரண்டிற்கு மட்டும் தான் திரு என்ற அடைமொழி உண்டு. ஒன்று திருவோனம்; அது விஷ்ணுவுக்கு உகந்தது. மற்றொன்று திருவாதிரை; இது சிவனுக்கு உகந்தது.

இந்நன்னாளில் ஒரு சிவ ஸ்தோத்திரம்

உமா மஹேச்வர ஸ்தோத்ரம்
 
நம: சிவாப்யாம் நவயௌவ நாப்யாம்
பரஸ்பராஸ்லிஷ்ட்ட வபுர்த்தாப்யாம்
நாகேந்த்ர கன்யா வ்ருஷகை தனாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் சரஸோத்வவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வரப்ரதாப்யாம்
நாராயணோனார்ச்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் விருஷவாஹனாப்யாம்
விரிஞ்சி விஷ்ணுவீந்த்ர சுபூஜிதாப்யாம்
விபூதி பாடிர விலேபனாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத் பதீப்யாம் ஜய விக்ரஹாப்யாம்
ஜம்பாரி முக்யை அபிவந்திகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் பரமோஷதீப்யாம்
பஞ்சாக்ஷரி பஞ்சர ரஞ்சி தாப்யாம்
ப்ரபஞ்ச ச்ருஷ்டி ஸ்திதி சம்ஸ்ரதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் அதிசுந்தராப்யாம்
அத்யந்தமாசக்த ஹ்ரதம் புஜாப்யாம்
அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் கலி நாசனாப்யாம்
கங்காள கல்யாண வபுர்தராப்யாம்
கைலாச சைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் சுபாபஹாப்யாம்
அசேஷ லோகைக விசேஷிதாப்யாம்
அகுன்டிதாப்யாம் ஸ்ம்ருதீ சம்பூதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ரதவாகனாப்யாம்
ரவீந்து வைச்வானர லோசனாப்யாம்
ராகா சசாங்காப முகாம் புஜாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்
ஜனார்தன அப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் விமோக்ஷணாப்யாம்
விச்வச் சதா மல்லிகா தாம்ப்ருதுப்யாம்
சோபாவதீ சாந்தவதீஸ்வராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்ரய ரக்ஷண பத்தாஹ்ருதிப்யாம்
சமஸ்த தேவாசுர பூஜிதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

ஸ்தோத்ரம் திரிசந்த்யம் சிவ பார்வதீப்யாம்
பக்த்யா படேத் த்வா தசகம் நரோய
ச சர்வ சௌபாக்ய பலானி புங்க்தே
                        சதாயுரன்தே சிவலோக மேதி.

[சிவ: என்றால் சிவன்;
சிவா என்றால் உமை
இங்கு சிவாப்யாம் என்பது சிவனையும் உமையையும் சேர்த்து வணங்குவதை குறிக்கும்]6 கருத்துகள்:

 1. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பதிவா.... அசத்துற சீனு.... தொடரட்டும் நல்ல பதிவுகள்....

  பதிலளிநீக்கு
 2. //ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பதிவா//

  திட்டமிட்டு ஒன்னும் செய்வதில்லை. மனதில் தோன்றுவதை எழுதுவது தான் ’திட்டம்’.

  பதிலளிநீக்கு
 3. அழகான பதிவு கண்டு
  ஆனந்தமயமானேன்.
  இங்கு இனி வருவேன்.
  ஈசனைக்காண்பேன்.
  உவகை கொள்வேன்.

  சுப்பு ரத்தினம்.
  http://pureaanmeekam.blogspot.com
  பி.கு: மாதவிப்பந்தல் வழி வந்த எனக்கு சிவனின் ஆருத்ரா தரிசனம் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. தங்கள் வருகைகு நன்றிகள் சுப்பு ரத்தினம்.

  தாங்கள் பயனுள்ள பல தொடுப்புகளைக் (links) கொடுத்துள்ளீர்கள் அதற்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. பாடலின் பொருள் சொன்னால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றிகள் சமுத்ரா.
  தற்போது ஒரு பயணத்தில் இருக்கிறேன். முடிந்தால் அதன் மொழி பெயர்ப்பு கிடைத்தால் வெளியிடுகிறேன் அல்லது அதைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்ச்சி செய்துப் பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு