வியாழன், ஜனவரி 26, 2012

குடியரசு தினம்

நேற்று  நமது நாட்டின்  63வது குடியரசு நாள். மக்களாட்சித்  துவங்கி  62 ஆண்டுகள்  நிறைவு பெற்றுள்ளது.  நாம் விதவிதமான ஆட்சி முறைகளையும் அவற்றின் ஆங்கிலப் பெயர்களையும் பார்ப்போம். 
மக்களாட்சி
Republic Government / Democracy
ஒற்றையாட்சி
Unitary Government
கூட்டாட்சி
Federal Government
நாடாளுமன்ற ஆட்சி
Parliamentary Government
செங்கோலாட்சி
Benign Government
கொடுங்கோலாட்சி
Despotic Government
நாடாளுமன்றமற்ற ஆட்சி
Non-Parliamentary Government
முதாலாளித்துவ ஆட்சி
Capitalistic Government
தொழிலாளியர் ஆட்சி
Proletarian Government
அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி
Constitutionalism
கூட்டுடமை
Socialism
பொதுவுடமை
Communism
பேரரசாட்சி
Imperialism
சிற்றரசாட்சி
Feudalism
கட்டுடைமை
Fascism
அரசாங்கம் அற்ற நிலைமை

Anarchism / Nihilism
[Nihilism பொதுவாக மாயை போன்ற நிலையைக் குறித்தாலும் சில இடங்களில் கட்டுபாடு அற்ற நிலைமை என்ற பொருளிலும் வழங்கப்படும்]
உழைப்பாளராட்சி
Ergatocracy
மன்னராட்சி / ஏகாதிபத்யம்
Monocracy
கும்பலின் ஆட்சி
Mobocracy / Ochlocracy
தனி மனித ஆட்சி
Autocracy / autarchy
சர்வாதிகார ஆட்சி
Dictatorship / Absolutism  / Shogunate / Totalitarianism / Despotism / Authoritarianism
அறிவியல் தொழில் நுட்பவியலியரின் ஆட்சி
Technocracy
தேவ (தேவதூதர்களின்) ஆட்சி / மதகுருக்களின் ஆட்சி
Theocracy
அனைவரின் ஆட்சி
Pant-isocracy
குருக்களாட்சி
Hierocracy
உயர்ந்தோர்/சீரியோர் ஆட்சி
Aristocracy
பணக்காரர்கள் ஆட்சி / செல்வராட்சி
Plutocracy
அறிஞராட்சி
Meritocracy
படை ஆட்சி
Stratocracy
அன்னிய ஆட்சி
Xeno-cracy
ஆண்கள் ஆட்சி
Androcracy
பெண்கள் ஆட்சி
Gynecocracy / Gynarchy
தந்தை ஆட்சி
Patriarchy
தாய் ஆட்சி
Matriarchy
சிலர் ஆட்சி
Oligarchy
இருவர் ஆட்சி
Diarchy / Dyarchy
கிழவராட்சி
Gernotocracy
பலர் ஆட்சி
Polyarchy
கள்வர்கள் ஆட்சி
Kleptocracy
அமைச்சரவை அரசு 
Limited Monarchy
நாடுளுமன்ற மன்னராட்சி
Parliamentary Monarchy
நாட்டாண்மை
City State
எதேச்சாதிகாரம்
[ஒரு நாடோ அல்லது ஒரு இனமோ மற்றதை அடிமைப் படுத்துதல்]
Hegemony / Super-power
[Domination of one nation or one social group over other]
காமன்-வெல்த் நாடுகள்
[ஐக்கிய நாடுகளைத் தலைமையாகக் கொண்டு பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்தை மதிக்கும், தற்போது சுயாட்சி பெற்ற, பிரிட்டனின் முன்னாள் காலணிகளின் கூட்டமைப்பு ]
Commonwealth Nations
[Association of nations consisting of United Kingdom and several former British colonies that are now sovereign states but still pay allegiance to the British Crown]


இப்போது representative republican monarchy (under foreign guidence) என்ற புதிதான ஒன்றை இந்தியாவில் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள்!!!.

இந்திய அரசியல் வரலாற்றில் மாபெரும் அரசாங்கங்களைத் தந்த பீகாரில் spousocracy முயற்சி செய்தாகிவிட்டது.

தமிழகமும் இதில் சளைத்த்தல்ல;  kinsocracy (குடும்ப ஆட்சி), companianocracy (உடனிருப்பவர் ஆட்சி) என்று புதிது புதிதான முயற்சிகளைச் செய்த வண்ணம் இருக்கிறது.

இருந்தாலும், மக்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, இந்த ஆட்சி அமைப்பை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுக்க (இவற்றைத் தவிர வேறு வழியும் இல்லாததால்) வாய்ப்பு கொடுக்கிறார்கள். அதனால், பெயரளவிலாவது, மக்களாட்சி தான் நடந்து கொண்டு இருப்பதாக நாமும் சொல்லிக் கொள்ளலாம்.


8 கருத்துகள்:

  1. பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது பகிர்வுக்கு நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்கள் சீனு.... தில்லி திரும்பி வந்தாச்சா?

    பதிலளிநீக்கு
  3. ம்ம். வியாழக் கிழமைக் காலையில் திரும்பினேன்.

    பதிலளிநீக்கு
  4. ஏற்கனவே நாட்டு அரசியலைப் பார்த்து குழம்பிப் போயிருக்கோம். இதுல நீங்க வேற Ergatocracy, Pant-isocracy,Plutocracy - ன்னு என்னென்னவோ சொல்கிறீர்கள். மொத்ததில் நம்ம நாட்டுல என்ன ஆட்சி நடக்குதுன்னு சொல்றீங்க? Democracy-யா Demo-crazy-யா!

    பதிலளிநீக்கு
  5. இப்பொழுது நடப்பது Democracy-யின் demo. உண்மையான Democracy மலர, மக்களுக்கு நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தேவையான கல்வியறிவு தேவை; அந்த கல்வியறிவு மக்களைச் சென்றடைய நல்ல ஆட்சியாளர்கள் தேவை. இது, ஒரு மாயச் சுற்று [vicious circle]. நாடு சுத்ந்திரம் அடைந்து இன்னமும் மக்களாட்சியைத் தக்க வைத்திருப்பதே ஒரு நல்ல அறிகுறிதான். இது படிப்படியாகத் தான் வளர்ந்து ஒரு நல்ல நிலையை அடைய முடியும். இந்த transition நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாததே. இது வேறு திசையை நோக்கித் திரும்பிவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள், அப்பாவி தங்கமணி.

    பதிலளிநீக்கு