திங்கள், செப்டம்பர் 24, 2012

பறவைகள் பலவிதம்


’பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்றார் கவியரசர்.

சமீபத்தில் இங்கிலாந்தில் க்லாஸ்கோ பல்கலைக் கழகமும் மேற்கு ஸ்காட்லாண்ட் பல்கலை கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளில் மனிதர்கள் இ-மெயிலைக் கையாள்வதை ஆராய்ந்து அவற்றை 12 பறவைகளின் பழக்கவழக்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.

அவை….

1.   கட்டாய மரங்கொத்தி (Compulsive Woodpecker): இவர்களால் மரங்கொத்திப் பறவை எப்படி மரங்கொத்துகிறதோ அதேப் போல் கட்டாயம் எப்பொழுதும், இரவு பகல் என்று நேரங்காலம் பார்க்காமல் மெயிலைத் திறந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இல்லையென்றால் இவர்களின் தலை உடைந்து சிதறிவிடும்.
2. ஒடுங்கிய கோட்டான் (Hibernating Poor-will) : இவர்கள் கோட்டானைப் போல அசைவில்லாமல் ஒடுங்கியே எப்பொழுதாவது அவர்களின் மெயில்களைப் படிப்பார்கள். இவர்களிடமிருந்து பதில் தகவல்கள் எதுவுமில்லாததால் இவர்களுக்கு வரும் மெயில்கள் குறைவாகத்தான் இருக்கும்.
3.  அகவும்/கூக்குரலிடும் மயில்கள் (Caterwauling Peacock) : இவர்கள் மயில்களைப் போல் மிகவும் அவசியம் என்று சாதாரண தகவலைக் கூட பெரிதாக அனைவரின் கவனத்தைக் கவரும் படி அனுப்புவார்கள்.
4. எதிர்கால ஈமுக்கள் (Back-covering Emu): இவர்கள் எதிர்காலத்தில் இந்தத் தகவல்களை நான் ஏற்கனவே உனக்குத் தெரியப் படுத்தி விட்டேன் என்று நிரூபிப்பதற்காகச் செய்திகளை (ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருந்தாலும்) அடுத்தவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
5.    எதிரொலிக்கும் மைனாக்கள் (Echoing Mynah) : எந்த மெயில் வந்தாலும் உடனே அது தனக்குக் கிட்டிவிட்டதென்று பதிலளிப்பார்கள்.
6. வெறுப்பேற்றும் கிளிகள் (Boorish Parrot) : தேவையற்ற மெயில்களையும் தகவல்களையும் அனுப்பி வெறுப்பேற்றுபவர்கள்.
7. இருட்டு ஆந்தை (Night Owl) : மற்றவர்கள் நேரத்தை மதிக்காமல் அவர்களுக்கு நேரங்கெட்ட நேரத்தில் தகவல் அனுப்புபவர்கள்.
8.    கலவரக் காக்கை (Pesky Crow):         இவர்கள் ஒரே தகவலை வேறு வேறு வடிவில் அனுப்பிப் பார்ப்பவர்களைக் கலவரப்படுத்துவார்கள்.
9.    கடத்தல் குயில்கள் (Buck-passing Cuckoo): இவர்கள் தங்கள் வேலையை மற்றவர்களுக்குக் கடத்திவிடும் சோம்பேறிகள்.
10. மறைந்த கோழிகள் (Camouflaging Woodcock) : இவர்கள் மற்றவர்கள் அனுப்பிய தகவலைத் தாங்களே அனுப்பியது போல மறைத்து அவர்கள் பெயரை நீக்கி அனுப்புவார்கள்.
11.பதுக்கும் குருவிகள் (Hoarding Magpie) : தங்கள் மெயில்களில் ஆயிரக்கணக்காக அப்படியே வைத்துக் கொண்டு எது தேவையானது எது தேவையற்றது என்பது புரியாமல் தவிப்பவர்கள்.
12.மின்னல் குருவிகள் (Lightening-Response Hummingbird): இவர்கள் மெயில் வந்த அடுத்த நொடியே பதிலனுப்பும் சூரர்கள்.

இவற்றைத் தவிர கரிச்சான் குருவி என்று ஒரு பிரிவையும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தான் சரியான நேரத்தில் சரியாக மெயில்களை அனுப்புபவர்கள்; அல்லது அவற்றைப் பார்ப்பவர்கள்.

இவற்றில் நாம் எந்த பிரிவைச் சார்ந்தவர் என்பது நமக்கே தெரியும் [திருவிளையாடல் தருமி!!!]…..

12 கருத்துகள்:

  1. இ-மெயிலைக் கையாள்வதில் நான் எந்த பறவை வகை என்று தெரிஞ்சுப் போச்சு. அதை வெளியில சொல்லி... சரி வேண்டாம், விடுங்க.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் இந்த இடுகை மூலம் அவரவர்கள் எந்தப் பறவை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

    வேறு பறவை இனமாக மாறலாமா என்றும் யோசிக்க வைத்திருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.

    ranjaninarayanan.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. இப்படிக்கூட இருக்கா....!!!!

    நல்ல ஆராய்ச்சி தான்.

    பதிலளிநீக்கு
  4. பறவைகள் ஆராய்ச்சி சிந்திக்கவைத்தது..

    பதிலளிநீக்கு

  5. ரசிக்கும்படியான ஒரு பதிவு.
    மெயிலைத் திறப்பதில் மட்டுமே நமது இன்னேட் இன்ஸ்டிங்க்ட் வெளிப்படுகிறது எனச்சொல்ல இயலாது.
    அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளிலுமே நாம் ஏதாவதொரு மிருகத்தின் அல்லது
    பறவை அல்லது பூச்சியின் அடிப்படை குணாதீசியங்களைப் பிரதிபலிக்கிறோம்.

    ஒரே உணர்வை அடிக்கடி பிரதிபலிக்கையில் அதுவே நமது இயல்பாகவும் மாறிவிடுகிறது.
    எதுக்கெடுத்தாலும் கோபப்படுகிறவன், எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பவன், எதற்கும்
    யாரைக்கண்டாலும் பொறாமைப்படுகிறவன், தனக்குத் தேவையில்லாததையும் பிறர் அனுபவிக்கத்
    தர மறுப்பவன், தந்திரமாக மற்றவர்களை ஏமாற்றுபவன், சின்ன ஓசை கேட்டாலே நடுங்குபவன்,
    ஓடுபவன் எல்லாமே ஒரு வகையில் ஏதேனும் விலங்கினத்தின் பிரதான குணங்களே.

    மனித மூளையில் சுரக்கும் ஹார்மோன்கள் ஆக்சிடோசின், டோபமைன், அசிட கொயலின், அட்ரினலின்
    ஆகியவற்றின் விகிதச்சாரக் கலவை ஒவ்வொரு மனிதனுக்கும் யுனீக். சராசரி அளவை விட ஒரு
    ஹார்மோன் மற்ற ஹார்மோன அல்லது ஹார்மோன்ஸ் காட்டிலும் கூடுதலோ குறைவாகவோ
    இருக்கும்பொது ஏற்படும் கெமிகல் ரீ ஆக்ஷன் இதுபோன்று மனித செய்ல்பாட்டில் வேற்றுமைகளை
    காட்டுகிறது.

    உங்களது பதிவு ஆழமான அழுத்தமான அறிவு பூர்வமான கருத்துடைத்து.
    இந்த வேதியப்பொருள்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள். அதனைப் பற்றி விவரங்களை அவ்வப்பொழுது
    எடுத்து சொல்லுங்கள்.

    பாராட்டுக்கள்.

    சுப்பு ரத்தினம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனே ஒரு சமூக மிருகம் தானே (Socialized animal). பரிணாம வளர்ச்சியில் பழைய பழக்கவழக்கங்களின் பதிவுகள் ஜீன்-இல் பதிந்துதானே இருக்கும்.

      வருகைக்கும் சிறந்த சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

      நீக்கு