செவ்வாய், செப்டம்பர் 11, 2012

அரக்க நட்சத்திரம்


அரக்கர்கள் பலர் உண்டு. ஆனால் அரக்க நட்சத்திரம்……

இந்திய தொன்மங்களில் அரக்கனாக இருந்த ராகு, அமுதம் எடுக்க பாற்கடலைக் கடைந்த பொழுது அவன் தலை அறுபட்டு தலை ராகு-வாகவும் உடல் பகுதி கேது-வாகவும் மாறியதைப் படித்திருப்போம்.

கிரேக்கத் தொன்மத்தில் அதுபோல ஒரு தலை அறுபட்ட சம்பவம் உண்டு. அந்தக் கதையை முதலில் பார்ப்போம்.

கிரேக்கத் தொன்மத்தில் கார்கன்கள் என்ற சகோதரிகள் இருக்கிறார்கள். கார்கன்கள் என்றால் அசுரப் பெண்கள் என்று பொருள். இவர்கள் மூன்று பேர். அவர்களின் பெயர்கள் ஸ்டெனோ [office-ல் இருக்கும் steno-ஐ அரக்கி என்று கூப்பிட்டால் கிடைக்கும் உதைக்கு கம்பெனி பொறுப்பல்ல; இதன் எழுத்துரு Stheno], இயூரல், மெதூஸா.

மன்னன் ‘பாலிடெக்டஸ்’ இந்த அரக்கிகளை அழிக்க நினைத்தான். ஆனால், இதற்கு ஜீயஸ்-இன் மகனான பெர்சூஸ் தான் தகுதியானவன் என்று எண்ணுகிறான் (ஜீயஸ் கிரேக்க இதிகாசத்தில் இந்திரனுக்குச் சமமானவன்). பாலிடெக்டஸ், பெர்சூஸின் தாய் டேனியே-வை அணுகினான். பாலிடெக்டஸ், பெர்சூஸ்-ஐ வளர்த்தவன்; மேலும், அவன் டேனியே-வைத் திருமணம் செய்யும் விருப்பத்தை பலமுறைத் தெரிவித்து அவள் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருப்பவன். ஆனால், அவனைத் திருமணம் செய்ய விரும்பாத டேனியே இந்த பிரதி உபகாரத்தைச் செய்தால் அவன் தன்னை மீண்டும் அணுகக் கூடாது என்ற நிபந்தனையுடன் தன் மகனைப் போருக்கு அனுப்பினாள்.

பெர்சூஸ், க்ரேக்கக் கடவுள் ஹெர்மிஸ்-ஐ (ரோம தொன்மத்தில் வீனஸுக்கு இணை; இந்திய தொன்மத்தில் சுக்கிரன்) வேண்டி அவர் வாள்-ஐ பெற்றான். பின் ஏதென்னா-விடமிருந்து கண்ணாடியை வாங்கி அதைத் தன் கேடயமாகக் கொண்டான்.

ஸ்டெனோ, இயூரல், மெதூஸா – இந்த மூன்று பேரில் முதல் இருவரும் சாகாவரம் பெற்றவர்கள். ஸ்டெனோ-பாம்புகளின் தலைவி; இயூரல் வெண்கலக்கையும் உரத்தக் குரலும் கொண்டவள். இந்த மூவரில் மிகவும் கொடியவள் மெதூஸா-தான் அவளிடம் சாகாவரம் இல்லை; ஆனால், அவள் பார்த்த மாத்திரத்திலேயே யாரையும் கல்லாக மாற்றக் கூடியவள்; இவள் தான் மற்ற இருவருக்கும் தீய செய்கைகளைச் செய்யத் தூண்டுபவள்.

போரில் மூவருடனும் சண்டையிட்ட பெர்சூஸ், மெதூஸா அவனைக் கல்லாக மாற்ற சபிக்கும் பொழுதெல்லாம் அவள் முன்பு கண்ணாடிக் கேடையத்தைக் காட்ட அதில் அவள் முகமே தெரிந்த்தால் அவன் கல்லாக மாறவில்லை. முடிவில், அவன் அவள் தலையைக் கொய்தெரிந்தான். ஸ்டெனோ-வை அப்பெலோ கோவிலில் வைத்துக் கற்பழித்தான். [ட்ராய்- படத்திலோ அல்லது ‘ஹெலன் ஆஃப் ட்ராய்’ தொடரிலோ ஒரு வசனத்தில் இதைப் பற்றிக் குறிப்பிருக்கிறது என்று நினைக்கிறேன்.]. இயூரல் கடலுக்குள் ஒடுங்கிக் கொண்டாள். இறக்கும் பொழுது கற்பினியாக இருந்த மெதூஸா-வின் உடலிலிருந்து பெகசஸ் (பறக்கும் குதிரை), கிரிசோர் (தங்க்க் காட்டுப்பன்றி) ஆகியோர் தோன்றினர். இவர்கள் பொஸைடான்-இன் (கடற்கடவுள்) புதல்வர்கள். மெதூஸா-விடம் சிறையிருந்த ஆண்ட்ரமீடோ-வை பெர்சூஸ் திருமணம் செய்து கொண்டு எதியோபியாவை ஆண்டான்.

இப்பொழுது தலைப்பிற்கு வருவோம் அது என்ன அரக்க நட்சத்திரம்…

வான் மண்டலத்தில் ஒரு நட்சத்திரக் கூட்டம் இருக்கிறது அதில் ‘அல்குல்’ [இது அரேபிய வார்த்தை இதன் பொருள் ’தலை’.  இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றும் பொழுது சில நேரங்களில் ஒரு நட்சத்திரமாக ஒன்றன் பின் ஒன்று மறைந்துத் தெரியும். இதிலிருந்துப் பிறந்தது தான் அல்கோல் மாறிலி (algol variable) என்ற கணித வார்த்தை]. இந்த நட்சத்திரம் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்லும் பொழுது அது தலையை வெட்டுவது போல் தெரியும். இதை விஞ்ஞானிகள் 17-ஆம் நூற்றாண்டில் முதலில் கண்டு பதிவு செய்துள்ளனர்.

இந்த வாரம் இந்த நட்சத்திரத்தை வரும் 16-ஆம் தேதிவரை இதை வான்வெளியில் நாம் பார்க்க முடியும். 

6 கருத்துகள்:

  1. எங்கப்பா பிடிக்கறீங்கள இத்தனை தகவல்களை? அருமை! பிரமிப்பு! அதிலயும் ஸ்டெனொ உச்சரிப்பு... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் பால கணேஷ், அங்கங்கே படிப்பது தான். கிரேக்க தொன்மங்கள் மிகவும் பிடிக்கும்; வானவியலிலும் கொஞ்சம் ஆர்வம். கரும்புதின்னக் கூலியாக ஒரு பதிவு...

      நீக்கு
  2. சூப்பர் வேங்கட ஸ்ரீநிவாசன்.கிரேக்க கதையை நம்ம கதையோடு ஒப்பிட்டு சொன்னது அற்புதம்.வானியல் தகவலையும் சொல்லி இருக்கீங்க.தொடர்க
    இதுக்கு ஓட்டு போடாம இருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  3. பெயர்களெல்லாம் வாயில நுழைய வில்லை என்றாலும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. நல்ல தகவல்கள்! வாழ்க!

    (நீங்கள் அல்கோலைப் பார்த்து விட்டீர்களா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல ஆங்கில வார்த்தைகளின் அடிப்படையே இந்த கிரேக்கத் தொன்மங்களில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் தான். Stheno என்றால் ஆங்கிலத்தில் அசாதாரனமான / விதிவிலக்கான (extraordinary/unusual/exceptional) மனிதர் அல்லது சம்பவம் என்று பொருள். இதில் வரும் ஸ்டெனோ-வும் அது போலதான்.

      (உங்கள் குறும்புக்கு அளவில்லையா! நேரில் பார்க்கும் பொழுது (அட உங்களைப் பார்க்கும் பொழுதுதான்!!) கூறுகிறேன்)

      நீக்கு