வெள்ளி, நவம்பர் 02, 2012

கரக சதுர்த்தி


கரக சதுர்த்தி என்பது வட இந்தியாவில் மிகவும் சிறப்பாக்க் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. [நம் தமிழ் பஞ்சாங்கங்களிலே கூட இந்த  கரக சதுர்த்தி இன்று குறிப்பிடப்பட்டு இருக்கும்].

கௌரி விரதம் என்று பெண்களால் கொண்டாடப்படும் ஒரு நோன்பின் வட இந்திய வடிவம் தான் இந்த கரக சதுர்த்தி. இது வட இந்திய மாதமான கார்த்திகை மாதம் நான்காம் நாள் அதாவது சதுர்த்தி-யன்று கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் (சந்திர பூர்ணிமைந்த நாட்காட்டிப் படி) கார்த்திகை மாதம் நவராத்திரி முடிந்தபின் வரும் பௌர்ணமி(அஸ்வினி பூர்ணிமை)க்கு மறுதினம் முதல் துவங்கும். இந்த வருட அஸ்வினி பூர்ணிமை கடந்த திங்களன்று அமைந்தது. செவ்வாய் முதல் வட இந்தியாவில் கார்த்திகை மாதம் துவங்கிவிட்டது. இதன் நான்காம் நாளான இன்று (சதுர்த்தி திதி) இந்தப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் திருமணமான பெண்கள் நாள் முழுவதும் உண்ணாமல் நோன்பிருப்பர். சரியாகக் கூறுவதென்றால் இது முதல் நாளிலேயே துவங்கிவிடுகிறது. முதல் நாளில் விரதம் இருக்கும் பெண்ணின் மாமியார் ’சார்கி’   என்ற சேமியாவில் செய்த பாயசத்தைத் தயார் செய்வார். அடுத்த நாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் அதை உண்ட பெண் அன்று முழு தினமும் சந்திர உதயம் வரைக் காத்திருந்து சந்திரனுக்கு பூஜைகள் செய்த பின் கணவனின் கையால் தண்ணீர், உணவை வாங்கி உண்பர். தேய்பிறையில் சதுர்த்தி சந்திரன் இரவு 9-10 மணியளவில் உதிக்கும்.

சதுர்த்தி புரிகிறது; அது என்ன கரக சதுர்த்தி என்றால் ‘கரக’ என்பது நாம் தமிழில் கூறுகிறோமே அதே கரகம்  தான் (என்ன கிரகமோ என்று என்னைத் திட்டாதீர்கள்). 
மதிய வேளையில் ஒரு பானை (கரகம்) அல்லது கூஜாவில் தண்ணீர் வைத்து அதைச் சுற்றிப் பெண்கள் கூடி அதை கௌரி தேவியாகக் கொண்டு அதற்கு பூஜை செய்து விரத கதைகளைப் படித்து பின் அந்தத் தண்ணீரை இரவில் சந்திரனுக்கு அர்பித்து கணவன் கையால் வாங்கி உண்பர்.

கரக சதுர்த்தி என்றால் இங்கேயே பலருக்கும் புரியாது ஏனென்றால் இதன் வழக்குப் பெயர் ’கர்வா சௌத்’ என்பதே.

90-களின் ஆரம்பங்களில் தில்லியில் இந்த விரதம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தது. ஆனால் 90-களின் இறுதியில் ஷாரூக்-காஜோல் நடித்த ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேகா’ [உள்ளம் (விருப்பம்) இருப்பவன் பெண்ணெடுத்துச் செல்வான்] என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் வந்த பிறகு, இந்த விரதம் ‘அக்ஷய த்ரிதி’யைப் போல் நன்கு வணிகமயமாக்கப் பட்டு இப்பொழுது பெரிய அளவில் கொண்டாடப் படுகிறது.

குறிப்பாக இப்பண்டிகையில் ‘பயா’ என்ற ஒரு பரிசை பெண்ணின் தாயார் பெண்ணுக்கு அளிப்பார். இதில் முன்னெல்லாம் உலர் கனிகளும் (dry fruits), பொட்டு போன்ற மங்களப் பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நாளடைவில் வணிக மயமாக்கப்பட்டு இப்பொழுதெல்லாம் தங்கம் பட்டாடை என்று விரிவடைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் புதிதாகத் திருமணமான (முதல் வருடம்) பெண்களால் கொண்டாடப்பட்டு வந்த இந்த விரதம் இப்பொழுதெல்லாம் மற்றவர்களாலும் கொண்டாடப்படுகிறது.

20 கருத்துகள்:

 1. நான் அறியாத தகவல்கள். இந்த விரதம் பற்றி முழுமையாக அறியத் தந்ததற்கு நன்றி ஸ்ரீனி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது வட இந்தியாவில் மட்டுமே கொண்ட்டாடப் படுவதால் நமக்குத் தெரிய வாய்ப்புகள் குறைவு.

   வருகைக்கு நன்றிகள் கணேஷ்.

   நீக்கு
 2. உங்கள் இடுகையை படிக்கும் போதே DDLJ படம்தான் நினைவுக்கு வந்தது. நீங்களும் அதே படத்தைத்தான் போட்டிருக்கிறீர்கள்.

  தகவல் சுவாரஸ்யமாக இருந்தன.

  பாராட்டுக்கள் ஸ்ரீனிவாசன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த படம் வந்த பிறகுதானே இந்தப் பண்டிகை இவ்வளவு வணிக மயம் ஆகிவிட்டது. அதனால் அதை எப்படி மற்க்க முடியும்.
   [படத்தில் இதன் காட்சியமைப்பு நன்றாக இருந்தது என்பதும் உண்மை]

   பாராட்டுகளுக்கு நன்றிகள்

   நீக்கு

 3. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  http://jaghamani.blogspot.com/2012/11/blog-post_2.html

  நலம் நல்கும் நிலவு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவையும் படித்தேன் நன்றாக இருந்தது.

   விரதக் கதையையும் சுவையாக எழுதியிருந்தீர்கள்

   வருகைக்கும் பாராட்டுகளூக்கும் நன்றிகள்!

   நீக்கு
 4. உங்கள் பகிர்வு மூலம் அறிகிறேன்... விளக்கம் அருமை...

  நன்றி...
  tm2

  பதிலளிநீக்கு
 5. புதிய தகவல்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 6. இந்த விரதத்தைப் பற்றி அறிந்ததில்லை உங்களின் பதிவின் மூலம் விளக்கமாக சொன்னீர்கள்.நன்றி....

  பதிலளிநீக்கு
 7. கர்வா செளத் பற்றி நிறைய தகவல்கள். ஹம் தில் தே சுகே சனம் படத்திலும் ஒரு பாட்டு வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், பாடலின் ஆரம்பவரிகளும் ஹம் தில் தே சுகே சனம் தான்.

   வருகைக்கு நன்றிகள்!

   நீக்கு
 8. இப்போது வணிக மயமாக மாறிவிட்ட பண்டிகை. மற்ற தோழிகளுக்கு என்ன பரிசு கிடைத்தது என்பதிலும் அதிக நாட்டம் வந்து விட்டது!

  முன்பெல்லாம் பஞ்சாபிகள் அதிகம் கொண்டாடினார்கள், இப்போது பெரும்பாலான வட இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். தில்லியில் பல வருடமாக இருக்கும் சில தமிழ் பெண்கள் கூட கொண்டாடுகிறார்கள்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பெல்லாம் குழ்ந்தைத் திருமணங்கள் நடந்தன. அப்பொழுது, பெண் வீட்டார் பெண்ணையும் பெண்கள் தாய் தந்தையரையும் காண்பதற்கு ஒரு வாய்ப்பாக இது போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும். அதனால் தான் தாய் வீட்டுப் பரிசுப் பொருட்கள் தரப்படுகின்றன.

   இப்பொழுது குழந்தைத் திருமணங்கள் இல்லை என்றாலும் அதன் எச்சமாக இந்தப் பண்டிகைகள் இருக்கின்றன. இவற்றின் கொண்டாட்டங்களும் இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு மாறிவிட்டன.

   நீக்கு
 9. கரக சதுர்த்தி பற்றி தெரிந்துகொண்டேன் நன்றி.

  பதிலளிநீக்கு