சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டுமே எல்லைப் பிரச்சனை இல்லை.
ஜப்பான், தைவான், வியட்நாம்,
பிலிப்பைன்ஸ், பூடான், தென்கொரியா, மலேசியா, ப்ருனாய், வடகொரியா ஆகிய நாட்டின்
பகுதிகளிலும் உரிமை கோரிவருகிறது. தென் சீனக்கடலில் ஸ்பார்ட்லீ தீவுகள் என்ற
தீவுக் கூட்டம் இருக்கிறது. கிட்டத்தட்ட 30000 தீவுகளை உள்ளடக்கிய மூன்று
பகுதிகளாக இது உள்ளது. இவற்றுக்கு சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா,
ப்ருனாய் ஆகியவை உரிமைக் கொண்டாடுகின்றன. இத்தீவுகளின் உரிமையைக் கொண்டே இக்கடலின்
சர்வதேச எல்லைத் தீர்மானிக்கப் படும் என்பதால் இவற்றின் உரிமையை எந்த நாடும்
விட்டுக் கொடுக்க முடியாது.
சமீபத்தில் இதற்கு எளிதாக ஒரு
தீர்வுகாண சீனா ஒரு குறுக்கு வழியைக் கையாண்டது. அது என்னவென்றால் சீனப் பாஸ்போர்ட்டில்
சீன தேசத்தின் வரைபடத்தை அச்சிட்டது. இதனால் சீனப் பாஸ்போர்ட்டில் தன் நாட்டு விசாவிற்காக
மற்ற நாடுகள் இடும் கையொப்பமும் அச்சும் இந்த வரைபடத்தை அங்கீரித்தது போல் இருக்க
வேண்டும் என்பதே.
இதைக் கண்ட ஜப்பான், இந்தியா,
பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. வியட்நாம்
சீனாவின் நேச நாடு என்றாலும் அதுவும் தன் நாட்டுத் தூதர் மூலம் இதைக் கண்டித்து
குறிப்பு அனுப்பியுள்ளது.
பிலிப்பைன்ஸ் இதற்கு எதிர்வினையாகத்
தன் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு நில்லாமல் தன் நாட்டுப் பகுதியை மற்ற நாட்டின்
பகுதியாகக் காட்டும் பாஸ்போர்ட் தன் நாட்டின் மீதான உரிமை மீறலாகக் கருதப்பட்டு அதை
வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவும்
சீனாவை இவ்விஷத்தில் கண்டித்துள்ளது. சர்வதேச ரீதியில் புதிதாக பிரச்சனை கிளப்ப
வேண்டாம் என்று சீனாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், இதற்கு பதிலளித்த சீன
வெளியுறவுத் துறை இந்த படங்கள் புதிதாக உரிமையைக் கோரவோ அல்லது எந்தத் தனிப்பட்ட
தேசத்திற்கோ எதிரானதல்ல என்றும் எனவே சம்பந்தப்பட்ட நாடுகள் அறிவு பூர்வமான முடிவையே எடுக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
சீனா தன்னிச்சையாக எந்த படம்
வேண்டுமானாலும் போடுமாம் மற்ற நாடுகள் அறிவு பூர்வமான முடிவை எடுக்க வேண்டுமாம்….
இந்தப் பிரச்சனையை கையாள தற்போது இந்தியா
ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் இந்த பாஸ்போர்ட்-களில் விசா
கொடுக்கும் பொழுது அச்சில் இந்தியப் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தை இடுவது என்பது
தான்.
சீனாவும் இந்தியா இடும் இந்த அச்சை
ஏற்கவும் முடியாது; புறக்கணிகவும் முடியாது என்பதால், சீனாவின் தன்னிச்சையானப் போக்கிற்கு
வெறும் பெயரளவு எதிர்ப்பு என்பதை விட, இது சரியானத் தீர்வு என்றேத் தோன்றுகிறது.
//இந்தப் பிரச்சனையை கையாள தற்போது இந்தியா ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் இந்த பாஸ்போர்ட்-களில் விசா கொடுக்கும் பொழுது அச்சில் இந்தியப் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தை இடுவது என்பது தான்.//
பதிலளிநீக்குஅட! இந்தியாவுக்கு அவ்வளவு தைரியம் வந்துடிச்சா! வெரிகுட்! வெரிகுட்!
ஆமாம், tit-for-tat என்று இந்த அளவுக்கு react செய்தது சரியே!
நீக்குவருகைக்கு நன்றிகள்!
தெளிவான தகவல்களுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள் மாசிலா!
நீக்குவரைபடத்தை மட்டும் இடுவது சரியா என்று யோசிக்க வைக்கிறது... தகவலுக்கு நன்றி... tm1
பதிலளிநீக்குஇதற்கு மறுப்புத் தெரிவிப்பது மட்டுமே தீர்வாகாதே!.
நீக்குபிலிப்பைன்ஸ் மாதிரி சீன பாஸ்போர்டைத் தடை செய்வது சற்று extreme நடவடிக்கையாக இருக்கும் (அவர்களும் நமது பாஸ்போர்ட்டைத் தடை செய்வர் என்பதால்).
இது போல வரைபடத்தை stamp-இல் இட்டால், ஆரம்பித்து வைத்தது அவர்கள் என்பதால், அதற்கு சீனா மறுப்பு தெரிவிக்க முடியாது. எனவே இது ஓரளவு சரி என்றேத் தோன்றுகிறது.
வருகைக்கும் த.ம. வாக்கிற்கும் நன்றிகள் தனபாலன்!
ஓஹோ! அப்படி போகுதா விஷயம்....:)
பதிலளிநீக்குகார்த்திகை தீபத்துக்காக ஏன் பதிவு ஒன்றும் எழுதவில்லை?
கடந்த 3-4 நாட்களாக சற்று வேளை அதிகம்! பதிவு இட நேரம் கிட்டவில்லை! அது தான் காரணம்!
நீக்குவருகைக்கு நன்றிகள்!
அடேங்கப்பா சீனா காரங்க இம்புட்டு கில்லாடியா
பதிலளிநீக்குமங்கோலியர்களின் படையெடுப்பைத் தடுக்க சுவர் கட்டியது, திபெதின் உரிமைக் கோர அங்கு தன் இளவரசியை மணமுடித்துப் பின் கல்வியறிவு இல்லத அந்த மலைக் குடி மக்களுக்குக் கல்வி அளித்தது (சீன மொழியை அவர்கள் கற்றால் அவர்களும் சீனர்கள் என்று ஆகிவிடுவரே), ஐநா-வில் சேரும் வரை இந்தியா-வுடன் நட்பாக இருந்து பின் நேரம் பார்த்து இந்தியாவைத் தாக்கியது என்று சீனா ஆரம்பகாலத்திலிருந்தே சற்று கில்லாடியாகத் தான் இருந்திருக்கிறார்கள்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மோகன்!
சரியானத் தீர்வு !!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
நீக்குஅறிந்துகொள்ள வேண்டிய தகவல்..அண்டை நாடுகளைப் பற்றி பல விஷயங்கள் தெரியாமலே போய் விடுகிறது.பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள்!
நீக்கு