புதன், செப்டம்பர் 26, 2012

உடலுறுப்பு தானம்



பொதுவாக மக்கள் கண் தானம், ரத்த தானம் பற்றித் தெரிந்த அளவு கூட உடல் உறுப்பு தானம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இந்த உடல் உறுப்பு தானத்தின் தேவை மற்றும் அதன் கிடைப்பு பற்றி அரசு தரும் தகவலைப் பார்ப்போம்…

சாதாரணமாக ஒரு நாளில் சுமார் 10 நோயாளிகள் உடலுறுப்புகள் மாற்றப்படாததால் இறக்கின்றனர். அதே நேரம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு நோயாளி உடலுறுப்பு மாற்ற வேண்டியத் தேவைக்காக காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்.

தற்பொழுது, சுமார் 10 லட்சம் நோயாளிகள் உடலுறுப்புத் தேவைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் வருடத்தில் சுமார் 3500 உடலுறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் தான் செய்யப்படுகின்றன.

அரசாங்கக் கணக்கின்படி இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 80000 உடறுப்பு தானம் செய்ய இணைகிறார்கள். ஆனால், வருடத்திற்கு 100 பேர் மட்டுமே தானம் செய்கிறார்கள்.

இதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில…

1.            தகுந்த பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவச் சாதனங்களின் பற்றாக்குறை
2.            உறுப்புகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயனர்களைச் சென்றடையாமை
3.            சட்டச் சிக்கல்கள் [சென்ற 2011 சட்டத் திருத்தத்திற்கு முன் வரை மூளைச் சாவு என்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை]
4.            தானம் செய்தவர்களின் குடும்பத்தினரின் உதவியின்மை
5.            விழிப்புணர்வு இல்லாமை

விழிப்புணர்வு என்ற இட்த்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மூளைச் சாவு என்பதை இந்தியர்கள் இன்னமும் மனதளவில் ஏற்கவில்லை. இதயத் துடிப்பு அடங்கும் வரை உயிர் இருப்பதாகவும் எப்படியாவது காப்பாற்றிவிட முடியும் என்று காத்திருப்பதால் சில மணி நேரம் வீணாகி விடுகிறது. இதயத் துடிப்பு நின்று இறந்த மணிதரின் 10-15 உறுப்புகள் தான் மற்றவருக்குப் பொறுத்த முடியும். மூளைச் சாவு ஆகிவிட்ட  மனிதரின் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உடல் உறுப்புகள் மாற்று உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் 35-40 உறுப்புகளை மாற்றுச் சிகிச்சைக்கு உபயொகப்படுத்த முடியும்.

இந்த சிக்கல்களைக் களையும் நோக்கத்தில் தில்லி அரசு கடந்த மூன்று நாட்களாக தில்லியின் முக்கிய மருத்துவ மனைகளைச் சேர்ந்த 36 மருத்துவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சான்றிதழ் பயிற்சி அளிக்கிறது. இதில் மருத்துவப் பயிற்சியைத் தவிர மருத்துவர்களுக்கு தான் செய்தவர்களின் குடும்பங்களை தானத்திற்குத் தயார்படுத்துவதிலும் பயிற்சி அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவமனைகளில் இந்த தானம் ஏற்பதற்கும் உறுப்புகள் பயனர்களைத் தகுந்த நேரத்தில் சென்றடைவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் பயிற்சியைப் பற்றி மேலும் குறிப்பிடுகையில், சாதாரணமாக மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர்கள் மிகவும் அவசியம் என்றும் அதற்கானப் பயிற்சிக்காணத் திட்டமும்  செயல்முறைப் படுத்தப் பட இருப்பதாகவும் கூறியுள்ளது

இது பற்றி மக்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

20 கருத்துகள்:

  1. மிக அவசியமாக அனைவரும் உணர வேண்டிய கருத்துக்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  2. தில்லி அரசு செய்வது நல்ல விஷயம்.

    வயதான சிலர் தாங்களே முன் வந்து இத்தகய தானத்துக்கு தயாராய் உள்ளனர். உறவினர் செய்யவேண்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மோகன், அதற்கான தகுந்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவும் வேண்டும்.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  3. சிறப்பான ஆக்கம் இது பலரையும் சென்றடைந்தால்
    நற் பயன் தரும் !..மிக்க நன்றி பகிர்வுக்கு .மேலும்
    தொடர என் இனிய வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது தான் நோக்கம்.

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி்கள்

      நீக்கு
  4. சிறப்பான பகிர்வு சீனு. பலருக்கு பலன் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலன் கிடைத்தால் நல்லது தான்.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  5. நல்ல பதிவு. தில்லி அரசின் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பத்து, நிச்சயமாகப் பாராட்டிற்குரியது தான்.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  6. நல்ல விழிப்புணர்வு. பாராட்டப்பட வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  7. மிகவும் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    மக்களிடையே விழிப்புணர்வு வந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. நான் என் உடல் உறுப்புகளை தனம் செய்ய விரும்புகிறேன் அதை நான் எங்கு எப்படி செய்வது தயவு செய்து கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மத்திய சுகாதார அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இதற்கான விதிமுறைகளும் விண்ணப்பங்களும் கிடைக்கின்றன. (http://mohfw.nic.in/WriteReadData/l892s/S12011122007MS-18018705.pdf)

      இதைத் தவிர சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ‘கொடையாளிகள் அட்டை’ யை வழங்குகின்றன. இந்த அட்டைகளை வைத்திருப்பதை விட முக்கிய்மானது குடும்பத்தினரின் ஒத்துழைப்பே. அதற்கு குடும்பத்திலுள்ளவர்களை இதற்குத் தயார் படுத்துவதுதான் முதல் நிலை.

      நீக்கு
  9. அன்புள்ள வெங்கட்,
    உங்களின் இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து உள்ளேன்.
    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html

    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வலைத் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் ரஞ்சனியம்மா.

      நீக்கு