வெள்ளி, ஜூன் 08, 2012

கருந்துளை வெளியேற்றம்

வான்வெளியில் நமது பால்வெளி உட்பட பல கேலக்ஸிகளில் கருந்துளைகள் இருப்பது அவை அருகிலுள்ள நட்சந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களைத் தம் வசம் இழுத்து நொறுக்கி விடுகின்றன என்று தான் இதுவரைக் கண்டறியப் பட்டு வந்துள்ளது. பொதுவாக இந்த கருந்துளைகள் என்பவை பெரிய நட்சத்திரங்கள் எரிந்து முடிந்தபின் அவற்றின் எரிசக்தி குறைந்து அவை தன்னுள் வேகமாகச் சுருங்கத் துவங்கி உள்வாங்குகின்றன. அப்படி சுருங்கும் பொழுது அவற்றின் ஈர்ப்பு சக்தியால் அருகில் உள்ள நட்சத்திரங்களைக் கூட இழுத்து விழுங்கிவிடும்.

ஆனால் சென்றவாரம், வானவியல் ஆராய்சி நிபுணர்கள் வான்வெளியில் பூமியிலிருந்து சுமார் 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு கேலக்ஸியிலிருந்து புதிதாக ஒரு கருந்துளை வெளியேற்றப் பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். கனடா, ஃப்ரெஞ்ச், ஹவாய் தொலை நோக்கிகளின் அடிப்படையில் நாசா இதை உறுதிப் படுத்தியுள்ளது. நாசாவின் சந்தரா எக்ஸ்-ரே விண் நோக்கி விண்வெளியில் CID-42 என்ற இடத்தில் இந்த நிகழ்வைப் பதிவு செய்துள்ளது.

பொதுவாக இவற்றின் ஈர்ப்பின் காரணமாக, இவை ஒரு இடத்திலேயே நிலைத்திருப்பதாகத் தான் எண்ணப்பட்டுவந்துள்ளது. ஆனால், இவை ஒரு கேலக்ஸியிலிருந்து வெளியேற்றப்பட்டது இந்த ஆராய்ச்சியின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் சூரியனைப் போல பல்லாயிரக் கண்க்கு பருமனுள்ள இவை மிகவும் வேகமாக வெளியேற்ற பட / தூக்கியெறியப் பட மிகுந்த எதிர் சக்தி தேவை என்பது தான் விஞ்ஞானிகளை மிகவும் ஆச்சரியபட வைத்துள்ளது.

விஞ்ஞானிகள் இது இரண்டு கருந்துளைகளோ அல்லது இரண்டு கேலக்ஸிகளோ ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கலாம் என்றும் எண்ணுகிறார்கள். சிலர் வேறு விதமாக ஒரு பெரிய கருந்துளை சக்தி குறைந்த மற்றொரு கருந்துளையை விழுங்கும் முகமாகக் கூட இந்நிகழ்வு இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக