புதன், டிசம்பர் 21, 2011

கலவை – 12

தில்லியில் தற்ப்பொழுது மாலையில் கடுமையான பனிமூட்டமும் காலையில் குளிர் காற்றும் வீசத் துவங்கி குளிர்காலம் முழு வீச்சுடன் ஆரம்பமாகிவிட்டது. முன் போலில்லாமல் கடந்த மூன்று நான்கு வருடங்களாக குளிர் திடீரென அதிகமாகி பின் திடீரென குறைவது என்பது நடக்கிறது. இருக்கும் 15-20 நாட்களில் முன் வருடங்களை விட அதிக குளிர் அளவை எட்டுவதும் வழக்கமாகியுள்ளது.

அதன் தாக்கமோ என்னவோ அரசியலிலும் சற்று சூடு குறைந்துள்ளது. ஆரம்பத்தில்  முரண்(டு) பிடித்த எதிர்கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தை நடத்த விடும் அளவிற்காவது இறங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தின் இந்தக் குளிர்காலத் தொடர் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு நாட்கள் வேலையே நடக்கவில்லை என்பதை நினைக்கும் பொழுது இது அந்த இழப்பை ஓரளவிற்காவது ஈடு செய்தால் சரிதான்.

மத்திய மந்திரி சபை சென்ற வாரம் உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 60 கோடி மக்களுக்கு (75 சதவீத கிராம மக்களுக்கும் மீதி நகர்புறத்தினரும்) மாதம் குறைந்தபட்சம் 7 கிலோ உணவு தானியம் வழங்கப் படும்). இதனால் உணவுக்கான அரசு மானியம் `65000 கோடி யிலிருந்து `12000 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்திருக்கிறார்கள். இது மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஏழைகளுக்கான நல்லத் திட்டம் போல் தெரிந்தாலும், இது மறைமுகமாக விலையேற்றத்திற்கு தான் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் நாம் ஏற்கனவேப் பார்த்து வருவது போல் அரிசி ஒரு ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டாலும் மற்ற பொருட்கள் விலை வெகுவாக ஏறுவதற்கே அது வழி வகுத்தது. மேலும் அதற்கான வருவாய்டாஸ்மாக்மூலம் ஈடுகட்டப்பட்டு வருகிறது. மேலும், இது தமிழ்நாட்டில் உள்ளது போல் போலி ரேஷன் அட்டைகளை உருவாக்கி ஊழலை  வளர்க்கவும் உதவும். ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டம் என்று சட்டம் இயற்றிவிட்டாலும், இன்றளவில் அது ஏட்டில் தான் உள்ளது. இதன் நிலையும் சற்றேறக்குறைய அது மாதிரி தான் ஆகும். ஆனால், அரசியல் ரீதியாக இது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சாதனையாகச் சொல்லிக் கொள்ள உதவும்.

லோக்பால் மசோதா நேற்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் என்று எதிர்பார்க்கலாம். லோக்பாலின் கீழ் பிரதமரைச் சேர்த்துள்ளனர். C-D பிரிவு அரசு ஊழியர்கள் (Clerks, Peons), சி.பி.ஐ. ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் லோக்பாலின் கீழ் சேர்க்கப் படவில்லை. C-D பிரிவு ஊழியர்களின் மீதானக் குற்றச்சாட்டுகளை மத்திய விஜிலென்ஸ் ஆணையமே விசாரிக்கும். சி.பி.ஐ. சேர்ப்பது பற்றி தான் நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடக்கும் என்று நினைக்கிறேன். சி.பி.ஐ, தேர்தல் ஆணையத்தைப் போல அரசு தலையீடு இல்லாமல் இருப்பது தான் நல்லது. சி.பி.ஐ.யின் விசாரணையில் லோக்பாலின் தலையீடும் இருக்கக் கூடாது. நாளை லோக்பாலின் உறுப்பினர்கள் மீதான ஊழலை விசாரிப்பதில் அவர்கள் தலையீடும் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதனிடையில் அரசின் இந்த மசோதாவை அன்னா குழுவினர் வலுவற்றது என்று விமரிசித்துள்ளனர். அவர்களின் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர். காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் சிங்வி, அரசு அன்னா குழுவினருக்கு பதிலளிக்கப் போவதில்லை என்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் என்றும் கூறியுள்ளார். பாஜக-வும் இந்த மசோதா வலுவற்றது என்று கூறியுள்ளது. நாடாளுமன்ற விவாதத்தில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மீண்டும், அம்மா மன்னார்குடி குடும்பத்தைத் தள்ளி வைத்துள்ளார். 1996-ல் தேர்தல் தோல்வியின் எதிரொலி. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. சாதாரணமாக இதன் பின்ன்ணி வெளிவராது. இப்பொழுதும், பெரும்பாலும் அப்படித்தான் நடக்கும். அதிமுக –வின் தொண்டர்கள் இதனால் உற்சாகமடைந்திருந்தாலும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் (அப்படி யாராவது இருக்கிறார்களா?) இதைப் பற்றி கருத்து வெளியிடவில்லை. இது ஊழல் வழக்கைச் சமாளிக்க நீதிமன்றத்தில் தனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று கூற உதவும் என்பதற்கான நாடகமாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அம்மாவிடம் எதையும் எதிர்பார்க்கலாம். அண்ணா கூறியதைப் போல் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் அதிமுகவினர்.

ஆஸ்த்ரேலியத் தொடர் ஆரம்பமாகும் நிலையில் கங்குலி, நெஹ்ரா போன்றவர்கள் க்ரேக் சேப்பலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக ஆஸி ஊடகங்கள் வந்திருக்கும் அணியின் மன வலிமையை குலைப்பதற்காக இது போன்ற விஷயங்களை வெளியிடுவர். இம்முறை இந்திய ஊடகங்களும் இதைச் செய்ய முயல்கின்றனவா?

இலங்கை, தென் ஆப்பிரிக்காவில் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. சென்ற வருடம் இதே சமயத்தில் இந்தியாவும் அவர்களிடம் முதல் போட்டியை இழந்தது (முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள்; எனவே, இரண்டாம் இன்னிங்ஸில் சச்சினின் சதமும் அணியின் தோல்வியை தடுக்க முடியவில்லை). ஆனால், இரண்டாம் போட்டியில் (boxing day) இந்தியா வென்றது. இலங்கையால் அது முடியுமா என்பது சந்தேகமாத்தான் இருக்கிறது. காரணம், துவக்க ஆட்டக்காரர்கள்.  தில்ஷான் அடித்து ஆடுபவர் என்றாலும் அவர் சேவாக் இல்லை. உபுல் தரங்கா அவரை விட consistent-ஆக ஆடுவார். அதே போல் பந்து வீச்சும் சுமார் தான். அல்விகதலா களமிறக்கப் படலாம். தென் ஆப்பிரிகா, சுசுபே-வை மார்கெலுக்கு பதிலாக களமிறக்கலாம்.

12 கருத்துகள்:

  1. இலங்கை டெஸ்ட் அணியில் தரங்கவுக்கு வாய்ப்பு வழங்கபப்டுவதில்லை பரணவிதாரனதான் டெஸ்ட்போட்டிகளில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களம் இறங்குகின்றார்.

    இலங்கை அணி தோல்வியில் இருந்து மீளவேண்டும்

    பதிலளிநீக்கு
  2. அருமையான தொகுப்புக்கள் பாஸ்

    பதிலளிநீக்கு
  3. நன்றி ராஜா!

    தரங்கா நல்ல வீரர். அவருக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப் படுவதில்லை (அரசியலா? உங்களுக்குத் தெரிந்திருக்குமே!). பந்து வீச்சு பலமாக இல்லை போலிருக்கிறது. திடீரென ஏன் இந்த பஞ்சம். நடுவில் நல்ல இளம் வீரர்கள் தெரிந்தார்கள். இப்போது என்ன ஆயிற்று.

    பதிலளிநீக்கு
  4. சென்ற ஒரு வாரமாக குளிர் திடீரென அதிகமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  5. ஆம். திடீரென்று குளிர் அதிகமானதால் அதிகமாகவே தெரிகிறது. குளிர்காலத் துவக்கத்தில் இருக்கும் மழை, இந்த வருடம் இல்லாததால் சுற்றுப்புர மாசு காற்றில் கலந்து பனிமூட்டத்தை வேறு அதிகப் படுத்தி விட்டது.

    பதிலளிநீக்கு
  6. நல்ல கலவை.... குளிர் - மழையில்லாமல் ஆரம்பித்தது தான் கவலை.... காலையில் எத்தனை பனிமூட்டம்....

    பதிலளிநீக்கு
  7. செய்திகள்.. அதற்கான சிந்தனைகள் .... அருமை தோழரே..

    பதிலளிநீக்கு
  8. நாலு நாளாக தில்லி முழுக்க A.C. ஐ ரொம்ப high-ஆ வச்சுட்டாங்க. பா.மே.அ.கு. வந்தாச்சு!

    பதிலளிநீக்கு
  9. வழ.P.R.ஜெயராஜன்,
    நன்றிகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  10. வாங்க பத்து,
    இன்றைக்கு அவ்வளவு பனி இல்லை. [பனி இருந்தால் அலுவலகத்தில் பணி இல்லை]. ஆனால், குளிர் இருக்கிறது.
    //தில்லி முழுக்க A.C. ஐ ரொம்ப high-ஆ வச்சுட்டாங்க//
    centralized AC!

    பதிலளிநீக்கு