தில்லியில்,
எங்கள் நண்பர்களில் ஒருவர் மிகவும் அதிகமாகக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவர்
விட்ட குறட்டையின் அளவு மிகவும் அதிகம். ஒருமுறை நாங்கள் ரயிலில் பயணம் செய்த
பொழுது, இரவில் பக்கத்து கூபேயில் இருந்து திட்டு கூட கிடைத்தது
பொதுவாக
வார இறுதியில் என் வாசம் அந்த நண்பர்களின் அறையில் தான் இருக்கும். அப்பொழுது,
நான் படுப்பது (கவனிக்கவும் தூங்குவது இல்லை) அவர் அருகில் தான் (மற்றவர்கள்
தப்பித்து விடுவார்கள்).
எங்களால்
அதிக கேலி செய்யப்பட்ட நபர் என்றால் அது அவராகத் தான் இருக்கும். எவ்வளவு கேலி
செய்தாலும் அதைப் பெரும்பாலும் சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார் என்பது வேறு
விஷயம்.
நீண்ட
நாட்களுக்குப் பின் ஒரு
நாள் அவருடைய தந்தையார் தில்லி வந்திருந்த பொழுது அவரைத் திட்டி உடனே மருத்துவரைப்
பார்க்கச் சொன்னார். பின்னர் தான் தெரிந்தது அவருக்கு sinusitis கோளாறு இருப்பது தெரிந்தது.
அதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டார். ஆனாலும், குறட்டை மட்டும் நிற்கவில்லை.
சற்று மாதங்களுக்கு முன் தில்லி வந்திருந்த
அந்த நண்பர் இரவு என் வீட்டில் தங்கிய பொழுது அவரிடமிருந்து குறட்டை சத்தமே இல்லை.
விசாரித்ததில், அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் குறட்டை நின்றுவிட்டதாகவும்
கூறினார்.
சில தினங்களுக்கு முன் ஒரு செய்தியில்
இந்தியாவில் சுமார் 13½ கோடி மக்களுக்கு – அதாவது எட்டு பேரில் ஒருவருக்கு – sinusitis
குறைபாடு இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது ஜப்பானிய மொத்த மக்கள் தொகையை விட
அதிகம். இது சர்கரை நேய், இதய நோய், ஆஸ்துமா ஆகியவற்றை விட அதிகம். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு
இந்த குறைபாடுகள் தொடர்ந்தால், அது பரம்பரை நோயாகும் அபாயமும் இருக்கிறதாம்.
மூக்கு, கன்னம், தொண்டைக்குழாய் ஆகிய
பகுதிகளின் எலும்புகளில் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடைய 5 ஜோடி குழிகள் இருக்கின்றன; இவை
மூக்குக் குழாயில் இணைக்கப்பட்டுள்ளன. நாம் சுவாசிக்கும் பொழுது sinus என்று அழைக்கப்படும்
இக்குழிகளில் பிராணவாயு நிரம்பி வழுவழுப்பான பொருள் உருவாகிறது. இது க்ரீஸ் போல காற்றில்
உள்ள தூசிகளை வழுக்கி வெளியேற்ற உதவுகிறது. குளிர்காலத்தில் இது அதிக அளவில் சளியாக
மாறி வெளியேறும். சில நேரங்களில் அந்த சளி கெட்டியாகி குழியை அடைத்து விடும். அந்த
சளி மேலும் மேலும் சேர்ந்து கெட்டியாகி முகம், கண் ஆகியவற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
தூங்கும் போது மூக்கில் அடைப்பு உண்டாகி வாய் வழியாக மூச்சு விடுவதால் குறட்டைச் சத்தம்
உண்டாகிறது.
இந்தியாவிலேயே பம்பாய் பகுதியில் தான்
இந்த குறைபாடு உள்ளவர்கள் அதிகமாம். அந்த நகரின் ஈரப்பத்துடன் சேர்ந்த சுற்றுச்சூழல்
மாசு தான் இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கிறார்கள்.
சுய மருத்துவம் செய்து சளியை மூக்கிலேயே
தங்கவிடாமலிருந்தால் இதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள்
கூறுகிறார்கள்.
புதிய விஷயங்கள்....
பதிலளிநீக்குஅது சரி, பீதம்புரா ரூம்-ல இருந்ததில் அந்த குறட்டை நண்பர் யாரு! :)
ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது. [குறைந்த பட்சம் பேரை ஊரறியச் சொல்லக் கூடாது. நேரில் பார்க்கும் போது சொல்வேன்].
நீக்குசீனு, நீ குறிப்பிடும் அந்த ந(ண்)பரை வேலூரில் (வெளியே தான்) பார்த்ததாய் தகவல். அவரது தாய் தில்லிக்கு வந்தது நன்றாக ஞாபகம் உள்ளது. தந்தை வந்தது ஞாபகம் இல்லை!! அந்த ந(ண்)பர் ஒரு அருமையான armchair கிரிக்கெட்டர் என்பதை நினைவு கூர்கிறேன். எனக்கும் sinusitis தொல்லை உள்ளது. Operation பற்றி விசாரிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅவங்க அப்பா வரவில்லையா? ஒருவேளை சென்னை சென்ற போது திட்டி அறிவுரைக் கூறினாரோ? உன் தகவல் சரியாகத் தான் இருக்கும்.
நீக்கு//அருமையான armchair கிரிக்கெட்டர்//
Ground-ல கூட நம்முடன் விளையாடியதுண்டு :)
//எனக்கும் sinusitis தொல்லை உள்ளது//
அப்படியா? Take care.
குறட்டைக்கான காரணங்களை சொன்னதுக்கு நன்றி. புது தகவல் தான்.
பதிலளிநீக்குவர்கைக்கு நன்றிகள்
நீக்குஎன்னமோ நல்ல தகவல் சொல்றமாதிரி தெரியுது. ஆனா ஒண்ணுமே கேக்க மாட்டேங்குது பக்கத்தில குறட்டை சத்தத்தில...
பதிலளிநீக்குகுறட்டைச் சத்தம் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். :)
நீக்குவருகைக்கு நன்றிகள்.