புதன், மார்ச் 20, 2013

சிட்டுக்குருவி தினம்


இன்று உலக சிட்டுக்குருவி தினம்.

மெல்ல மெல்ல அழிந்து வரும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது. சிட்டுக்குருவி இனத்தின் அழிவைப் பற்றி - நகரங்களில் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையே உருவாகி விட்டது - பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி, ’உலக சிட்டுக்குருவிகள் தினம்’-ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சிட்டுக்குருவி இனத்தைக் காத்து முன் போல மீண்டும் வானில் வட்டமிட வைக்க விட பல முயற்சிகள் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு தில்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக சென்ற அக்டோபர் மாதம் அறிவித்தது. [இதைப் பற்றி ஏற்கனவே
இங்கே எழுதியுள்ளேன்].

சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வாழ விரும்புகின்றன. தற்போது, கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து வெளியேறி விட்டன. செல்போன் அலைவரிசை கோபுரங்கள் சிட்டுக் குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் கருத்து நிலவுகிறது. குருவிகளின் உணவான கம்பு, வரகு, சோளம், தினை, சாமை போன்றச் சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், தானியப் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம் அதிகரித்ததும் கூட முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. செல்போன் டவர்களின் பாதிப்புகளை விட இத்தகைய காரணங்களே சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம்.

இன்று தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் வைக்க ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டக் கூடுகளை (கம்பங்களில் மேல் வைக்கப்படும் வகையில்) கொடுக்க இருக்கிறார். இவை 2000 தனியார் பள்ளிகளில் வைத்துக் கண்காணிக்கப்படும். தவிர, தில்லியில் 170 குருவிக் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன (இந்தியாவிலேயே தில்லி நகரில் தான் இதன் எண்ணிக்கை அதிகம்).

அதே நேரத்தில், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தில்லி அரசின் இந்த நடவடிக்கைகள் தேவைக்கும் மிகக் குறைவே என்று கூறுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் மக்கள் நலச் சங்கங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இது போல கூடுகளை வழங்கவும் அங்குக் கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்தப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் மரம் நடுவிழாக்கள் போல பெயரளவில் இல்லாமல் உண்மையிலேயே நன்மைத் தரும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பட்டும் வந்தால் நல்லது!

11 கருத்துகள்:

 1. எங்கள் ஊரில் இல்லை...

  எழுத்தில் தான் பார்க்க முடிகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னமும் இங்கு அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை அங்கொன்றும் இங்கொன்றும் அவ்வப்போதுத் தென்படவேச் செய்கின்றன; என்றாலும் மெல்ல அந்த நிலைக்குச் சென்று கொண்டுதான் இருக்கிறது. இதை மாற்ற தில்லி அரசு எடுத்துள்ளது ஒரு சிறு முயற்சி தான். இதன் பலனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

   வருகைக்கு நன்றிகள் தனபாலன்!

   நீக்கு
 2. மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்ரீனி!
  தில்லி முதல்வரின் நடவடிக்கை சிட்டுக்குருவிகளை மீட்டுத் தரட்டும்.
  என்னுடைய பதிவு இணைப்பு:
  http://wp.me/p244Wx-40

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டிற்கு நன்றிகள்!

   சிட்டுக்குருவிகள் மீண்டுவர வேண்டுமென்பதே விருப்பம்...

   வருகைக்கு நன்றிகள்!

   நீக்கு
 3. உண்மையில் இது அவசியமான ஒன்றுதான். இது போன்று பறவையினங்கள் அழிந்து வருவது விவசாயத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.பரவையினங்களை ரசிக்கவும் நேசிக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்
  நல்ல பதிவு ஸ்ரீனிவாசன்.

  பதிலளிநீக்கு
 4. வருங்காலத்தில் படங்களாக மட்டும் சிட்டுக் குருவிகளை அடுத்த தலைமுறைக்குக் காட்ட வேண்டி வருமோ என்ற கவலை மனதில் இருக்க்த்தான் செய்கிறது. அழகான, எல்லாரும் ரசிக்கும் அந்தப் பறவையினத்தை அழியாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகக் கூறியுள்ளீர்கள் கணேஷ்!

   வருகைக்கு நன்றிகள்!

   நீக்கு
 5. சாலிம் அலி எழுதிய The Fall of a Sparrow படித்தீர்களா...

  பதிலளிநீக்கு
 6. சுதந்திரமாய் வாழ உதாரணமாக சிட்டுக்குருவியைத்தான் சொல்லுவோம். இப்போது அவற்றின் வாழ்வுரிமைக்கும் எவ்வளவு தடங்கல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ’விட்டு விடுதலையாகி நிற்பாய் ஒரு சிட்டுக்குருவியைப் போலே’ என்று மஹாகவியே தளைகள் அற்று இருப்பதைச் சிட்டுக்குருவியைக் கொண்டுதானே உதாரணம் காட்டுகிறார். நம் சுயநலத்தின் காரணமான இயந்திரமய வாழ்க்கை இதுபோல் இன்னும் எத்தனை உயிர்களை பாதிக்கின்றதோ?

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பத்து!

   நீக்கு