திங்கள், ஜூலை 11, 2011

மேற்கு இந்தியா & இங்கிலாந்து தொடர்

நேற்று  மேற்கிந்திய அணியுடன் நடந்த தொடர் முடிந்தது. 

தொடரை வென்ற போதிலும், வெற்றி கணக்கு 1 - 0  என்ற அளவிலேயே இருந்தது பொதுவாகவே அணைவரையும் ஏமாற்றம் அடையவேச் செய்தது என்று கூறலாம். சற்று, லாவகத்துடன் பந்து வீசியிருந்தால், 2 - 0  என்ற கணக்கில் வென்றிருக்கலாம்.

சாதாரணமாக, மே.இ. அணியுடன் தொடரை வென்றாலே மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஆனால், இப்பொழுது, தகுதி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாலும், சமீபத்திய உலகக் கோப்பையும், பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியும் சற்று அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. ஆனால், பந்து வீச்சில் ஜாகிர் இல்லாததும் பஜ்ஜீ சரியான ஃபார்மில் இல்லாததும், மட்டையில் புதிய வீரர்கள் சரிவர பரிமளிக்காததும் வெற்றிக் கணக்கை மட்டுப் படுத்தியுள்ளது என்றே நினைக்கிறேன்.

தொடரில் என்னைப் பொருத்தவரை ஜொலித்தவர்கள்:      
                   இஷாந்த், முனாஃப், ப்ரவீன், லக்‌ஷ்மண், த்ராவிட்
நிலைமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள்:
                  ரெய்னா, தோனி
சொதப்பியவர்கள் : 
                  விஜய், கோஹ்லி, பஜ்ஜி (பந்து வீச்சு;  பின்னே அது தானே அவர் வேலை)


இங்கிலாந்து தொடரைப் பொருத்தவரை பெரும்பாலான பெரிய தலைகள் அணிக்குள் திரும்புவதால் அணி சற்று வலுவடைந்திருப்பதாகவே தெரிகிறது. 5 நாள் போட்டியை பொருத்தவரை 4 வேக பந்தாளர்களூடன் களம் இறங்குவதே நல்லது என நினைக்கிறேன் (பஜ்ஜி வந்தால் lower order சற்று வலுப்படும் என்றாலும் கூட). தற்போதைய 3 வேகப் பந்தாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஜாகிரும் சேர்ந்தால் நல்ல attack கிடைக்கும். மட்டையை பொருத்தவரை, கம்பீர், ஷேவாக்/முகுந்த், மும்மூர்திகள், தோனியுடன், யுவராஜ்-க்கும் வாய்ப்பு கொடுக்கலாம். யுவராஜ் பொதுவாக இங்கிலாந்துடன் நன்றாக விளையாடுபவர் - பாகிஸ்தானில் அகீப் ஜாவெத் போன்றவர்கள் இந்தியாவிடம் நன்றாக விளையாடுவது போல் - , தற்போது நல்ல ஃபார்மிலும் இருந்தார்என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு போட்டியில் சொதப்பினால் ரெய்னா மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.


இங்கிலாந்தும் - அவர்கள் வீட்டிலாவது அதிலும் 5 நாள் போட்டிகளில் - சற்று வலுவான அணிதான். 


பார்ப்போம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக