செவ்வாய், அக்டோபர் 11, 2011

கலவை – 5கூடங்குள அணு ஆலை திறப்பிற்க்கு எதிராக ஞாயிறன்று இருந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்துள்ளனர். இதில், போராட்டக் குழுவினர் பிரதமரை சந்தித்தப் பின், பிரதமர் உயர் மட்டக் குழுவிடம் குழுவினரின் கோரிக்கைகளை பரிசீலிக்க உயர்மட்ட குழுவிடம் கூறியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அக்குழு இந்த கோரிக்கைக்கு எதிராக எதுவும் இதுவரைக் கூறவில்லை. ஆதலால், பரிசீலனையை விரைவு படுத்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் என்பதே போதுமானது என்பது என் கருத்து. பரிசீலனைக்குழு போராட்டத்திற்கு எதிரான நிலையை எடுத்தால் அப்பொழுது மீண்டும் இம்மாதிரி போராட்டம் நடத்த வேண்டியது அவசியம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேட்டி ஒன்றில், மரண தண்டனை அவசியம் இல்லை; ஆனால் மிகவும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் - extreme cases -க்கு  மட்டுமே தேவைப்பட்டால் அதை கொடுக்கலாம் என்று கருத்து கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று, உச்ச நீதி மன்றம், கசாபின் வழக்கில் தற்காலிகமாக மரண தண்டனையை நிறுத்திவைத்துள்ளது.

சென்ற வாரம், காஷ்மீர் சட்ட மன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்காதவர்கள், ஒரு நல்ல அதிரடி திரைப்படத்தைத் தவற விட்டுவிட்டார்கள். முதல்வர் உமருக்கு எதிராக அவருடைய (நேஷனல் காங்கிரஸ்) கட்சியை சேர்ந்த (ஹாஜி) முகமத் சையத் யூசஃப் குற்றம் சாட்டியதும் அதைத் தொடர்ந்த அவர் காவலிலேயே இறந்த்தைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் உமரை பதவி விலகக் கோரி சட்ட மன்றத்தை முடக்கினர். இதில் அவைத்தலைவர் நீங்கள் என்னைத் திட்டினால் நானும் திட்டுவேன்என்று மேலும் எண்ணெய் ஊற்ற எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர் மேசை மீதிருந்த மின்விசிறியை வீச ஒரே அமளி.

இருந்தாலும், மார்ச், 1989 தமிழக சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்த்துள்ள நமக்கு இது ஒரு காமெடி காட்சிதான்.

மத்திய தொலை தொடர்பு ஆணையம் “Roaming” கட்டணத்தை நீக்கத் தீர்மானித்துள்ளது. இன்றைய நிலையில் இந்தியாவில் மட்டும் தான் நாட்டிற்க்குள்ளேயே வேறு இடதிற்குச் சென்று பேசக் கட்டணம். வேறு எந்த நாட்டிலும் இது இல்லை. இந்நிலையில் இது வரவேற்கத்தக்கதே. அதிலும் எங்களைப் போல வேறு மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

சென்ற வாரம் ஆப்பெல்நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். கான்சர்!!! அவருடைய ஆப்பெல் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்கள் தான் இன்றைய திறந்த வெளி கணிகளின் ஆரம்பம். பின்னர், ஐபாட் ஐபோன் என்று டிஜிடல் புரட்சியும் அவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டு. அவருடைய வார்த்தையான “பசித்திரு; பைத்தியமாய் இரு (Stay Hungry; Stay Foolish)” கணிணித் துறையில் மிகவும் பிரபலம். இன்றும் கணிணித் துறையினர் இரவு பகல் பாராமல் உழைப்பதற்க்கு இந்த attitude தான் காரணம்.

நேற்று, இந்தியாவின் மிகச் சிறந்த கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் காலமானார் அர்த்(தமிழில் ”மறுபடியும்” என்ற பெயரில் பாலு மகேந்தைராவால் remake செய்யப்பட்டு அர்விந்த் சாமி நடித்த  படம்) படத்தில், இந்தி நடிகர் ராஜ்கிரனுகாக தும் இத்னா ஜோ முஸ்குரா ரஹே ஹோ க்யா கம் ஹோ இஸ் பர் சுபாரஹே ஹோஎன்று அவர் பாடிய கஜல் எப்பொழுதும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எத்தனைப் பாடல்கள்!!. மென்மையான குரலும் உயர்ந்த சங்கீதமும் என்றும் அவர் பெயர் கூறும்.

2-ஜி ஒதுக்கீட்டு வழக்கிலும், ஏர்செல் நிறுவன வழக்கிலும் நேற்று சிபிஐ மாறன் சகோதர்ர்களின் வீட்டிலும் நிறுவன்ங்களிலும் சோதனை நட்த்தியுள்ளனர். சென்ற இரு வாரங்களாகவே வழ்க்கு நீர்க்கப் பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில் இது சற்று மாற்றமே, ஆனாலும், மாறன் இப்போது சற்று தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவேத் தெரிகிறது.

அக்டோபர் 10 தேதி -  உலக மனநோய் நாள். இந்தியாவில் ஒவ்வொறு மணி நேரத்திலும் 4 பேர் மனப்பிறழ்வினால் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். அதில் மூவர் 15-லிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த வயதினர் இறப்பதற்கு முக்கிய காரணம் போதிய அன்பும் வழிகாட்டலும் இல்லாத்தே. பெற்றோர் பணம் காய்க்கும் மரங்களாக மட்டுமே இல்லாமல் அன்பும் அக்கறையும் காட்டினால் இதில் பாதியாவது குறையும். செய்வோமா.

2 கருத்துகள்:

  1. மிக நல்ல கலவை.. பல்சுவை செய்திகள் பகிர்வுக்கு நன்றி.

    ஜக்ஜீத் சிங் மரணம்.... :( அவர் மறைந்தாலும் அவரின் கஜல் பாடல்கள் என்றும் மறையாது...

    பதிலளிநீக்கு