வியாழன், பிப்ரவரி 16, 2012

விருதுகள்


கோவை2தில்லி, ஆதி தன்னுடைய இந்த பதிவில் எனக்கு Versatile Blogger என்ற விருதைத் தந்துள்ளார்.

முதலில் அதற்கு நன்றிகள்.

வலைப்பூ ஆரம்பித்து நான் வாங்கும் முதல் விருது என்பதால் மகிழ்ச்சி. முதலில் versatile என்பதற்கு பல பொருள்கள் உண்டு. போதுவாக எல்லோராருலும் அவதானிக்கப்படுவது ’பல்துறை வல்லுநர்’ (All Rounder) என்பதுதான். நான் பல்துறை வல்லுனனா என்பதுத் தெரியாது.

ஆனால், இந்த versatile-க்கு வேறு பல பொருளும் உண்டு அதில் Adaptable, flexible போன்றவை பெருமளவில் எனக்குப் பொருந்தும். சாதாரணமாக, நான் என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் இருக்கும் மனிதர்களையும் அனுசரித்துதான் சென்று வந்துள்ளேன். அந்த அளவில் இந்த விருதை ஏற்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

விருதை ஏற்கும் சமயத்தில் தனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவை..

1. படிப்பது – இது சிறுவயதிலிருந்தேத் துவங்கியது. எங்கள் வீட்டில் இரண்டு நூலகங்களிலிருந்து நான்கு நான்கு அட்டைகளாக எட்டு அட்டைகள் இருந்தன.  
2.    குறுக்கெழுத்து
3.    கணிதப் புதிர்கள்.
4.    இசை
5.    கிரிக்கெட்
6.    வரலாற்று, வானவியல் (Astronomy), புராணங்கள்
7.    மழையில் நனைவது. இப்பொழுது என் மகளுக்கும் அது பிடிக்கும். [என்ன, கூடவே ’சளியும்’ பிடிக்கும்!!]

 இந்த விருதுகளை எனக்குப் பிடித்த ஐந்து பதிவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

          நண்பர்கள் என்று அனைவரிடமும் நட்பு பாராட்டும் K.S.S.Rajah. சிறிய வயதிலும் நல்லத் தேர்ந்த எழுத்தும் கருத்தும் கொண்டவர்.
         சமுத்ரா -  மௌனத்தைப் போன்ற மென்மையான வார்த்தைகளால், அணுவிலிருந்து அண்டம் என்று அறிவியலை சுஜாதாவிற்குப் பின் இத்தனை எளிமையாக யாராலும் எழுத முடியாமா என்பதுத் தெரியவில்லை; கலைடாஸ்கோபில் இவரின் பன்முகத் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது.
           புதுகைத் தென்றல் – ஹைதை ஆவக்காய் பிரியாணி என்று ஹைதராபாத் பற்றி அவ்வப்போது எழுதுவதுடன் பயணக் கட்டுரை, அனுபவ பகிர்வு, ஆன்மீகம் என்று பல்துறையிலும் (வணிகப் பத்திரிகைகளில் வெளியிடும் அளவு) தேர்ச்சியாக எழுதுபவர்.
அப்பாவி தங்கமணி – நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட பதிவர். புனைவுகளில் நகைச்சுவை இழையோடும்.
           கவிதைவீதி சௌந்தர் பெயரிலேயே கவிதை இருப்பதால் வெறும் கவிதைகள் மட்டுமே எழுதாமல் பப்பரமிட்டாய் போல பல்சுவையும் தருவார்

9 கருத்துகள்:

  1. விருதினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா. தங்கள் மூலம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும் விருது வென்ற மற்ற பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்காக எனது பக்கத்தில் ஒரு இன்னுமொரு விருது காத்திருக்கிறது...

    http://venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_16.html

    பதிலளிநீக்கு