'ஜான்
ஏறினால் முழம் சறுக்குவது' என்று கூறுவதைக் கேள்வி பட்டிருக்கிறோம். அதற்கு ஒரு உதாரணத்தைப்
பார்ப்போம்.
நேற்று
தில்லி அமைச்சரவை சாலைப் போக்குவரத்து விதிகளை திருத்தி விதி மீறுபவர்களுக்கு விதிக்கப்
படும் அபராதத் தொகையையும் தண்டனையையும் அதிகரிக்க ஒப்புதல் தந்துள்ளது.
அவ்வாறு
திறுத்தப் பட இருக்கும் அபராதத் தொகையும் தண்டனையும் –
குடி போதையில் ஓட்டுதல்
`.2000 மற்றும்/
அல்லது 6 மாதச் சிறை என்பதிலிருந்து `.2000 - 5000
மற்றும்/ அல்லது 6 மாதம்
– 2 ஆண்டுகள் சிறை (முதல் முறைக்கும்); `.10000 மற்றும்/
அல்லது 4 வருடச் சிறை (தொடர்ந்த தவறுகளுக்கும்)
அதி வேகம்
`.400(முதல்
முறை) `.1000 (தொடர்ந்த
தவறுகளுக்கும்) என்பதிலிருந்து `.1000 (முதல்
முறை) `.2000-5000
(தொடர்ந்த தவறுகளுக்கும்)
கைபேசி உபயோகம்
`.500 என்பதிலிருந்து
`.500 (முதல் முறைக்கும்); `.5000 (தொடர்ந்த
தவறுகளுக்கும்)
அபாயகரமாக ஓட்டுதல்
`.1000 மற்றும்/
அல்லது 6 மாதச் சிறை என்பதிலிருந்து `.1000 மற்றும்/
அல்லது 6 மாதச் சிறை (முதல் முறைக்கும்); `.2000-5000
மற்றும்/ அல்லது 6 வருடச் சிறை (தொடர்ந்த தவறுகளுக்கும்)
போக்குவரத்து விளக்குகளை மதியாமை, தலைக்கவசம்-இருக்கைப்
பட்டைகள் அணியாமை,
`.100(முதல்
முறை) `.300 (தொடர்ந்த
தவறுகளுக்கும்) என்பதிலிருந்து `.500 (முதல்
முறை) `.1000-1500
(தொடர்ந்த தவறுகளுக்கும்)
தில்லி-யில்
வசிப்பவர்களுக்கு இங்குள்ள போக்குவரத்து விதி மீறல்களும் அதனால் ஏற்படும் இன்னல்களும்
புரிந்திருக்கும். காவலர்கள் (சில இடங்களில் சற்று மீறப்பட்டாலும்) விதிகளை ஒழுங்காகச் செயல் படுத்துவதால் நிலைமை ஓரளவு
சீரடைந்துள்ளது.
[தில்லியே
ஓரளவு பரவாயில்லை என்று உத்திரபிரதேசத்தின் போக்குவரத்து சீரற்ற நிலைமை உணர்த்தும்.
தில்லியில் போக்குவரத்து விதிகளின் படி நடக்கும் அதே வாகன ஓட்டுனர், உத்திரப் பிரதேசத்தைத்
தொட்டவுடன் அவ்விதிகளைத் தூக்கி எறிந்துவிடுவார்.]
எனவே,
இந்த விதிகளைச் சற்று கடுமைப் படுத்துவது இன்றைய நிலையில் தேவையான ஒன்றே.
இது
மட்டுமே நடந்திருந்தால் இந்த பதிவே இருந்திருக்காது வேறு ஒரு நிகழ்வும் நடந்தது தான்
இதை எழுதக் காரணம்.
அது
தான் அந்த ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விஷயம்…
உயர்நீதிமன்றத்தில்
ஒரு வழக்கில், பெண்கள் அமைப்புகள் கொடுத்தல் அழுத்தத்தில், பெண்கள் தலையில் எதுவும்
(தப்பா நினைச்சுக்காதீங்க, தலைக்கவசம் தான்) இருக்கத் தேவையில்லை என்று தில்லி அரசு
கூறியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் தலைக்காயத்தினால் மரணங்கள் ஏற்படுவதாகவும்
அதில் 70 சதவிகிதம் இருசக்கர வாகன்ங்களில் பயணிப்பவர்கள் என்று ஒருத் தகவல் கூறுகிறது.
சென்ற ஜனவரி 29-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் திருமதி.ஷீலா தீக்ஷித் அவர்கள்
தலைக்கவசம் அணியாமையே பெரும்பாலான சாலை விபத்து மரணங்களுக்கும் காரணம் என்று பேசியுள்ளார்.
ஆனால், அவரது அரசோ பெண்களைப் பாதிக்கும் இது போன்ற ஒரு கருத்தைக் கூறியுள்ளது. ஏற்கனவே
சீக்கியர்களுக்குத் தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இப்போது, பெண்களுக்கும்
விலக்களிக்கப்படும் போலிருக்கிறது.
ஆகப்
பெண்களிடம், “உங்கள் தலைவிதி உங்கள் கைகளில் தான்” என்று அரசு சொல்லாமல் சொல்கிறதோ?
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஏதாவது நடந்தால் தான் தலைக்கவசத்தின் அவசியம் புரியுமோ?
நன்றிகள் ஆதி,
பதிலளிநீக்குபெண்கள் உயிரைப் பாதுகாக்கும் தலைக்கவசத்திற்கு எதிராக பெண்கள் அமைப்புகள் சில இருப்பது தான் இதில் வருத்தம் தருகிறது.
நல்ல பகிர்வு சீனு...
பதிலளிநீக்குஅவர்கள் உயிர் அவர்கள் கையில்... :(
ஆண்களே கூட ஏதோ சட்டத்தினை ஏமாற்றுவதாக நினைத்து 50 ரூபாய் ஹெல்மெட் போட்டுக்கொண்டு போகிறார்கள்... என்ன சொல்வது இது போன்றவர்களை....
//50 ரூபாய் ஹெல்மெட் போட்டுக்கொண்டு//
பதிலளிநீக்குஆம், ஒரு விளம்பரத்தில் வரும் தர்பூசணி பழத்தைத் தலையில் கவிழ்த்தது போன்றத் தலைகவசங்கள் நிறைய இருக்கின்றன.
சரியாச் சொன்னீங்க. நல்ல ஹெல்மெட் போடாவிட்டால் ஹெல்(Hell)ஐ மீட் பண்ணவேண்டியிருக்கும்னு நிறையப் பேரு யோசிக்கிறதில்லை.
பதிலளிநீக்குபத்து, ஹெல்மெட் போட்டாலும் அதைப் பற்றி யோசித்தாலும் தலை வழுக்கையாகிவிடும் என்பதுதான் மக்களின் கவலை.
பதிலளிநீக்குதலையில் மேலே என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம்; உள்ளே என்ன இருக்கிறது என்பது பற்றி கவலையில்லை.