புதன், மார்ச் 06, 2013

தோனி – மிகச் சிறந்த அணித்தலைவரா?



கடந்த ஹைதராபாத் ஐந்து நாள் கிரிக்கெட் போட்டியை வென்றதன் மூலம் தோனி சௌரவ் கங்குலியின் 21 வெற்றிகளைத் தாண்டி 22 போட்டிகளை வென்று இந்தியாவின் அதிக ஐந்து நாள் போட்டிகளை வென்ற அணித் தலைவர் என்ற பெருமையை எட்டியுள்ளார்.

முதல் முறையாக 20-20 உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கட் கவுன்சில் 2007-ஆம் ஆண்டு முடிவெடுத்த பொழுது அந்த ஆண்டுத் துவக்கத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ’சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்குத் தகுதி பெறாத நிலையில்  அப்பொழுதிருந்த 30 வயதைத் தாண்டிய முதன்மை கிரிக்கெட் வீரர்கள் விமர்சிக்கப்பட்டு அவர்கள் விலகி/விலக்கி வைக்கப் பட்டு இளைஞர்களைக் கொண்ட ஒரு அணியின் தலைமையை தோனியிடம் கொடுக்க, அவர் சற்றும் சளைக்காமல் அணியை வழி நடத்திச் சென்று முதல் 20-20 உலகக் கோப்பை வென்று வந்த பிறகு ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து நாள் போட்டிகளிலும் தலைமை பதவிக்கு அவர் பெயர் அடிபடத் துவங்கியது.  ஆஸ்த்ரேலியா பயணத் தொடரைத் தொடர்ந்து கும்ப்லே காயத்தினால் ஓய்வை அறிவித்ததும் அணியில் மூத்த சேவாக், லக்ஷ்மண் ஆகியோரையும் மீறி தோனிக்குத் தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டது.

இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றவுடன் தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்கள் அடுத்தப் போட்டியில் தோற்றால் அவரது தலையைத் துண்டிக்கவும் தலைபடுவார்கள்.

துவக்கத்தில் வெற்றிகளைத் தொடர்ந்து கொடுத்து வந்த தோனி, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறிப்பாக ஐந்து நாள் போட்டிகளில் தொடர் தோல்விகளைக் கொடுத்ததால் ரசிகர்கள் மட்டுமன்றி விமர்சகர்களும் அவரைத் தலைமைப் பதவியிலிருந்து (குறைந்த பட்சம் ஐந்து நாள் போட்டிகளிலிருந்தாவது) நீக்க வேண்டும் என்று கூறிவந்தனர்.

இந்நிலையில் நடப்பு ஆஸ்த்ரேலிய அணியுடனான இரண்டு போட்டிகளில் வென்றதன் மூலம் சௌரவ் கங்குலியின் 21 வெற்றி என்ற சாதனையை முறியடித்து 22 போட்டிகளில் வென்ற அணித்தலைவர் என்ற நிலையை எட்டியவுடன் மீண்டும் ஊடகங்களில் இந்திய கிரிகெட் அணியின் மிகச் சிறந்த அணித்தலைவர் யார் என்ற விவாதம் எழ ஆரம்பித்துள்ளது.

இதில் தோனிதான் மிகச் சிறந்த அணித்தலைவர் என்பதற்கு அவரது ஆதரவாளர்கள் முன் வைப்பவை….

  1. இரண்டு உலகக் கோப்பை வெற்றிகள்;
  2.  புள்ளி விவரத்தின் படி அதிக போட்டிகள் ஜெயித்தது;
  3. அணி தடுமாறும் நிலையிலும் நிதானமாக இருப்பது
  4. விக்கெட் கீப்பிங், பேட்டிங் என்ற இரண்டு மிக முக்கிய பொறுப்பிற்குப் பின்னரும் அணியைச் சிறப்பாக வழி நட்த்திச் செல்வது.

ஆகியவையே. இளம் வீர்ர்களைக் கொண்டு இரண்டு உலகக் கோப்பைகளை அவர் வெற்றி பெற செய்த்து என்றுமெ பெரிய அளவில் பேசப் பட்டுக் கொண்டுதான் இருக்கும். உதாரணத்திற்கு, கபில் தேவ் புள்ளி விவரக் கணக்கின் படி மிகச் சிறந்த அணித் தலைவராக இல்லாத போதும் 1983 உலக்க் கோப்பை வெற்றி அவரது தலைமையை என்றும் சிறப்பித்தே கூறும். அடுத்து இன்றைய நிலையில் ஒருநாள் போட்டிகளிலும் (77 வெற்றிகள்) சரி டெஸ்ட் போட்டிகளிலும் (22 வெற்றிகள்) அதிக வெற்றியைப் பெற்றுத் தந்த அணித்தலைவர் தோனிதான். பொதுவாக விக்கெட் கீப்பர்கள் அணித்தலைவராக செயல் பட முடியாது என்று கூறுவதுண்டு. காரணம், ஒரு விக்கெட் கீப்பர் மற்ற ஆட்டக்காரர்களை போலன்றி  எல்லா நேரமும் கவனமுடன் இருக்க வேண்டும் இது உடலளவிலும் மன அளவிலும் நிறைய அயர்ச்சியை உண்டு செய்யும். அதிலும் குறிப்பாக போட்டியில் எதிரணியின் கை சற்று ஓங்கி இருக்கும் பொழுது அதைச் சமாளிக்க மிகுந்த மன தைரியமும் திடமான உடளுருதியும் தேவைப்படும். அது தோனியிடம் நிறையவே இருக்கிறது.

அவர் சிறந்தத் தலைவர் எண்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் ’மிகச்’ சிறந்த தலைவரா என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறது என்று அவரை விமர்சிப்பவர்கள் முன்வைப்பவை…

1.    எதிரணியை அடக்கும் ஆக்ரோஷமான தலைமைப் பண்பு;
2.    வெற்றியைத் தொடர்ந்து தக்கவைக்கும் திறன்;
3.    புதிய முயற்சி எதுவும் எடுக்காமல் நிலைமை மாறும் வரைக் காத்திருப்பது;
4.    முன்முடிவுகளுடன் ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுப்பது;
5.    பெரும்பாலான மேற்கூறிய வெற்றிகள் இந்தியாவிலேயே ஈட்டியது.

தோனி ஒரு அதிரடி மட்டையாடுபவர் என்றாலும் பெரும்பாலும் நிலைமை கை மீறும் வரை அதிரடியாக ஆடாமல் நிதானமாக ஆடி கடைசியில் தன் அதிரடியைக் காட்டுவார். ஒருநாள் போட்டிகளில் இது பெரும்பாலும் நல்லது செய்யும். ஆனால், ஐந்து நாள் போட்டிகளைப் பொறுத்தவரை எதிரணியைத் தவறு செய்யத் தூண்டுவது மிகவும் அவசியம். மேலும், ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் முன் முடிவுடன்  ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ஜடேஜா, விஜய், இஷாந்த் என்று குறிப்பிட்ட ஆட்டக் காரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு தந்து மனோஜ் திவாரி, ஓஜா, ரஹானே போன்றவர்களுக்கு வாய்பளிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். 22 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றாலும் அதில் 5 தான் வெளிநாடுகளில் பெற்றது. (சவுரவ் கங்குலி 11 வெற்றிகளை வெளிநாட்டில் பெற்றுள்ளார்). அதிலும் குறிப்பாக கடந்த இங்கிலாந்து, ஆஸ்த்ரேலிய பயணத்தில் 8-0 என்ற கணக்கில் தோல்வி என்ற குற்றச் சாட்டையும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் அடுத்த தென்னாப்பிரிக பயணம் தோனியின் தலைமைப் பண்பின்பிற்கு பெறும் சவாலாக அமையும். அதில் பெறப்போகும் வெற்றி/தோல்வி தோனி ’சிறந்த’ அணித் தலைவரா அல்லது ’மிகச்சிறந்த’ அணித்தலைவரா என்பதைத் தீர்மாணிக்கும். 

14 கருத்துகள்:

  1. பார்க்கலாம்... சாதிப்பார் என்றே நம்புவோமே...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியாது/நடக்காது என்று நினைப்பது நடக்கும் பொழுது அதை defying odds என்று கூறுவார்கள். தோனியின் விஷயத்தில் அது நிறையவே நடந்திருக்கிறது. அவர் மட்டையாட்டக் கலைஞர் அல்ல வெறும் அதிரடி வெடி தான் என்ற விமர்சனம் இருந்தது. ஆனாலும் தேவையான பொழுது பொறுப்புடன் விளையாடி அதை சமன் செய்துள்ளார். அதேபோல் விக்கெட் கீப்பிங் முறையில் சில குறைபாடுகள் இருந்தாலும் அது வெளித் தெரியா வண்ணம் விளையாடுகிறார். இதிலும் அதேபோல சாதிப்பார் என்றே நம்புவோம்!

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  2. sila kuraigal irukka thaan seiginrana..aanal adhai niraigal maraikkum alavirku perithaai irukkindrana.... kadantha orandu kaalam 5 naal pottigalin mudivugalai thalli vaiththal dhoni yin thalamai nandru endre koora thondrum....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த வருடங்களில் தான் முக்கிய வெளிநாட்டுப் (5 நாள்) போட்டிகள் நடந்துள்ளன. அதற்கு முன்னர் வெறும் பங்களாதேஷ், இலங்கை, மே.இந்திய வெற்றிகள் மட்டுமே (விதிவிலக்காக ஒரு தெனாப்பிரிக வெற்றி உண்டு). இதுதான் விமர்சகர்களின் குற்றச்சாட்டு.

      வருகைகும் கருத்துக்களுக்கும் நன்றிகள் சுகுமார்!

      நீக்கு
  3. தோனிக்கு ஒரு பெரிய ஊதலைப் போடுவோம்! உய்ய்ய்ய்! (ஊதல் - வார்த்தை உபயம் - திரு. வேங்கட சீனிவாசன் அவர்கள்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐபிஎல் வந்து விட்டாலே இந்த உய்ய்... சத்தம் ஆரம்பமாகிவிடுமே!

      நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. ராம் குமார் font சரியாக இல்லாததால் ஒன்றும் புடியவில்லை அதனால் நீக்கிவிட்டேன். சரியாக முயற்சிக்கவும். (Google transliteration-இல் தட்டச்சு செய்து ஓட்டலாம்)

    பதிலளிநீக்கு
  6. Adu vera Leap 2000 la pannadu adan saria varla. Ganguly's success record outside India as Captain is 11 wins out of which 6 are in Bangladesh and Zimbabwe. That's why they say stas can sometimes be deceptive. A Captain is as good as a team is what true and of course there are some exceptions like Mike Brearly, Martin Crowe etc. It is the contribution of the individual as captain to the success of the team is what matters. In this case, I do not remember how many test matches Ganguly won India as a player and captain. He rather rode on success of players like Sachin, Dravid and Laxman.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்குலி சில நேரம் aggressive-க்கும் violent-க்கும் வேறுபாடு தெரியாமல் எல்லை மீறுவார்.

      தோனியின் வெளிநாட்டு வெற்றிகளில் தென்னாப்பிரிக (1 டெஸ்ட்) வெற்றியைத் தவிர மற்ற எல்லாம் சாதாரண அணிகளுடனேயே என்பதால் தான் அடுத்த தென்னாப்பிரிக்க பயணம் crucial-ஆக இருக்கும்.

      நீக்கு
  7. Please see link http://en.wikipedia.org/wiki/List_of_India_national_cricket_captains

    பதிலளிநீக்கு