வியாழன், ஜூலை 04, 2013

வாழ்க்கை



அப்பாவின் முகம் வாங்கி
அம்மாவின் உதிரம் வாங்கி
ஆசிரியரின் அறிவு வாங்கி
இல்லாளின் இதயம் வாங்கி
உடன் பிறந்தோர் உரிமை வாங்கி
ஊராரின் உறவை வாங்கி
உறவுகளின் பரிவை வாங்கி
பிள்ளைகளின் ஆசை வாங்கி
நண்பர்களின் தோள்வலி வாங்கி
எதிரிகளின் ஏமாற்றம் வாங்கி…

நான் வாழ்கிறேன் என் ‘சொந்த’ வாழ்க்கை!

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  2. எதை வாங்கினாலும் சொந்த வாழ்க்கை வாழ்வதில் இருக்கும் சுகம் தான் அலாதியானது :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையாவது அடுத்தவரிடமிருந்து வாங்கிக் கொண்டே இருக்கிறோம். பின் அது எப்பது ‘சொந்த’ வாழ்க்கையாக இருக்க முடியும்?

      வருகைக்கு நன்றிகள் சீனு!

      நீக்கு
  3. மொத்தத்தில் வாழ்க்கை ஒரு ’ரசவாங்கி’ ன்னு சொல்றீங்க!

    (அத விடுங்க! ‘ஒப்புதலுக்கு பின்னர் உங்கள் கருத்துரை காண்பிக்கப்படும்’ ன்னு போடறீங்களே! இதுக்கெல்லாமா வீட்டுல ஒப்புதல் வாங்கறீங்க!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏதோ கவிதை ’கத்திரிக்காய்’னு எழுதினா அதையும் ரசவாங்கி ஆக்கிட்டீங்களே!

      [‘ஒப்புதல்’ வாங்கவில்லை என்றால் வேறு ஏதாவது வாங்கி ’உப்புதல்’ ஆகிவிடும்]

      நீக்கு
  4. நல்ல கவிதை சீனு.... தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருந்தால் தான் வாழ்க்கையும் ஓடுகிறது!

    பதிலளிநீக்கு
  5. கவிதையும் உங்களுக்கு கை கூடுகிறது. சொந்தக் கால்ல நிக்கறேன்னு சொல்றது எவ்வளவு மடத் தனம் அழகாக சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  6. மனிதன் தீவல்லவே! எல்லோருடனும் வாழும் வாழ்க்கையே அர்த்தம் உள்ளது. உங்களுக்கும் இது தெரிந்திருக்கும். கவிதைக்காக இதை எழுதி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருடனும் வாழ்ந்தாலும் எல்லாம் நடப்பது தன்னாலே என்றும் எல்லாம் தன்க்குத் தான் ‘சொந்தம்’ என்று எண்ணுவதும் உள்ளதே!

      ....அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு