வெள்ளி, ஜூன் 28, 2013

கூர்ஜர தேசம்





கூர்ஜர தேசம் என்பது தற்போதைய வட குஜராத் பகுதிகளைக் குறிப்பதாகும்.

கூர்ஜர்கள் வட இந்திய இனங்களில் முக்கியமானவர்கள். சென்ற வருடங்களில் ராஜஸ்தானில் இடஒதுக்கீட்டிற்காக நடத்தியப் போராட்டத்தில் இந்த இடங்களில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனதை நாம் அனைவரும் படித்திருப்போம்.

யார் இந்த கூர்ஜர்கள்?

வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்தவரை இவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவை வட மேற்கிலிருந்து படையெடுத்த ஹூனர்களின் வழித் தோன்றலாக இருக்கலாம் என்று கணிக்கின்றனர். துருக்கியர்களில் கஸ்ஸர் என்ற இனத்தவர் கிழக்கில் ஊடுருவியதாகவும் அவர்களே பின்னர் ஹூனர்களாக இனம் காணப்பட்டதாகவும் கூறுவர்.

கூர்ஜர்கள் என்பதற்கு மேலும் இரண்டு விளக்கங்களையும் கூறுகிறார்கள். அவை..

கோ+ஜர் – பசுக் கூட்டங்களை அழிப்பவர்கள்
கௌர்+ஜர் – எதிர்க்கூட்ட்த்தை அழிப்பவர்கள்                  என்பதே.

பொதுவாக கூர்ஜர்கள் தங்களை சூர்யவம்ச வழிகளாக்க் கூறிக் கொள்கின்றனர்.

பவிஷ்ய புரணத்தில் பரசுராமர் 21 தலைமுறையைச் சேர்ந்த க்ஷத்ரியர்களை அழித்தப் பின்னர், சில காலம் கழித்து, க்ஷத்ரியர்கள் இல்லாமையால் மக்களுக்குள் அமைதியும் கட்டுப்பாடும் இருக்காது என்பதால், வஷிட்டர் ஒரு பெருயாகம் செய்ததாகவும் அந்த யாகத் தீயிலிருந்து ஒரு அரசன் தோன்றியதாகவும் அவர்களின் வம்சம் அக்னிவம்சம் என்ற பெயரில் வழங்கப்படுவதாகவும் கூறுகிறது. பொதுவாக வட இந்திய ராஜ வம்சங்கள் தங்களை சூரிய, சந்திர, அக்னி வம்சங்களில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்களாகவேக் கூறிக் கொள்கின்றனர்.

இந்திய மானுடவியல் கண்கானிப்பு என்ற அரசு சார் அமைப்பு குஜராத், ராஜஸ்தானில் பர்மார், சங்க்லா, சௌஹான், சோலங்கி ஆகியோருடன் கூர்ஜார-பிரதிகாரர்கள் என்ற க்ஷத்ரியவம்சங்கள் அக்னிவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது. (நம் தமிழகத்தின் வன்னியர்களும் அக்னிவம்சத்தைச் சேர்ந்தவர்களாகக் கூறப்படுகின்றனர்.)

இவர்கள் தங்களைச் சூர்ய வம்சத்தவர்களாகவும் கூறிக்கொள்வர். இதற்கு மற்ற புராணங்களைச் சுட்டுகிறார்கள். அதில் வசிஷ்டரின் யாகத்தில் தோன்றிய தேவதூதனின் நீரிலிருந்து சூர்ய வம்ச அரசர்களை உயிர்ப்பித்ததாகவும் அதனால் தாங்கள் சூர்ய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறிக் கொள்கிறார்கள்.

இந்தக் கூர்ஜர தேசம் அனர்தம் என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது. வைவஸ்வத மனுவின் ஐந்தாவது மகன் இஷ்வாகு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரின் ஏழாவது மகனின் பெயர் ஷர்யாதி. ஷர்யாதியின் மகன் அனர்தன். இவர் நந்திபூரை (தற்போதைய நந்தோல் –அஹமதாபாத் அருகில் உள்ளது) தங்கள் தலைநகராகக்  கொண்டு ஆண்ட தேசம் அனர்தம்.  ஷர்யாதியின் மகள் சுகன்யா. இவள் பிருகு முனிவரின் மகன் ச்யவன முனியின் மனைவி (ச்யவன்ப்ராஷ் இந்த முனிவரின் பெயராலேயே வழங்கப்படுகிறது).

பாகவத புராணத்தில் இந்த அனர்த வம்சத்தின் கடைசி அரசனாக அனர்தனின் மகன் குகுத்மி குறிப்பிடப்படுகிறார். இவர் அனைத்து லோகங்களுக்கும் செல்லும் விசேஷ சக்தி படைத்தவர். இவரின் மற்றொரு பெயர் ரைவதன். ரைவதனின் மகள் ரேவதி (ஜனகரின் மகள் ஜானகி என்பது போல்). இவர் பின்னர் குஷஸ்தலி(துவாரகை)யில் ஒரு பெரிய நகரை நிர்மாணித்து அதை தன் தலைநகராக மாற்றிக் கொண்டு அங்கு அரசாண்டார். ஒரு சமயம் இவர் தன் நாட்டை விட்டு பிரம்ம லோகம் சென்று. அங்கு சில காலம் தங்கியிருந்தார். பின்னர், தன் நாடு திரும்பிய போது பல யுகங்கள் கடந்திருதன (இங்கு ஒரு வருடம் என்பது தேவலோகத்தில் ஒரு நாள்; பிரம்ம லோகத்தில் சில நாட்கள் என்பது இங்கு பல யுகங்களைக் கடந்திருக்கும் என்ற கணக்கினால்). அப்பொழுது, அவரின் தலைநகர் குஷஸ்தலி, துவாரகையாகவும் அதன் அரசராக உக்ரசேனரும் மாறியிருந்தனர். தன் மகள் ரேவதியை அதன் இளவரசர் பலராமனுக்கு மணமுடிதார் என்று பாகவத புராணம் கூறுகிறது.

பிற்காலத்தில், கூர்ஜர பிரதிஹாரர்கள் (பிரதிஹாரர்கள் என்றால் மெய்காப்பாளர்கள்; தாங்கள் ராமனின் தம்பி லக்ஷ்மணனின் – அவன் ராமனுக்கு மெய்காப்பாளனாக இருந்ததால் –  வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்.

அக்னிவம்சத்தின் மற்றொரு பிரிவினரான பர்மார்களில் சிலர் தான் பின்னர் இஸ்லாமிய மதத்தைத் தழுவி குஜராத்-இல் (ஸௌராஷ்ட்ரம்) ஜுனகத்-பகுதியை ஆண்டனர் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

இன்று ராஜஸ்தானில் குர்ஜர்கள் (கூர்ஜர்கள் என்பது நாளடைவில் குர்ஜர், குஜ்ஜர் என்று திரிந்தது) அரசியல் ரீதியில் ஒரு முக்கிய இனமாக இருக்கின்றனர். இவர்களிலும் இரண்டு இனத்தவர் உண்டு . அவை லௌர் மற்றும் காரி ஆகியவை. லௌர்கள் தங்களை ராமரின் மகன் லவனின் வழிவந்தவர்களாகவும், காரிகள் தங்களை குசனின் வழிவந்தவர்களாகவும் கூறிக்கொள்கிறார்கள்.

இன்று, குர்ஜர்கள் குஜராத், ராஜஸ்தான் தவிர பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற  பல்வேறு இடங்களில் இருந்தாலும், வட குஜாராத் தான் அவர்கள் முதலில் இருந்த இடமாகக் கருதப்படுகிறது.

கூர்ஜர தேசம் என்பதிலுருந்து மருவியதுதான் இன்றைய குஜராத்.

8 கருத்துகள்:

  1. உங்களின் பகிர்வுகளில் மூலம் பல தகவல்களை அறிய முடிகிறது... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  2. குஜராஜ் விளக்கம் வியக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  3. கூர்ஜர தேசத்தையும் குர்ஜர்களையும் பற்றி நன்றாக அறிந்து கொண்டேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நல்ல விளக்கம்/அலசல்....

    இவர்களது ரயில் மறிப்பு போராட்டம் மிகவும் பிரபலம் ஆச்சே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வெங்கட் ராஜஸ்தானில் இடஒதுக்கீட்டிற்காக (ST பட்டியலில் சேர்க்கக் கோரி) இவர்கள் 2007-இல்/2007 முதல் நடத்திய போராட்டம் மிகவும் பிரபலம். இதற்கு முக்கிய காரணம் அரசியல். ஹிமாசலப் பிரதேசத்தில் 2001-இல் குர்ஜர்கள் எஸ்.டி பட்டியலில் சேர்க்கப்ப்பட்டப் பொழுது ராஜஸ்தானில் ஜாட் இனத்தவர்கள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பிஜேபி ராஜஸ்தானிலும் இவர்களை பட்டியலில் சேர்க்க வாக்குக் கொடுத்தது. தேர்தல் வாக்குறுதி எந்தக் கட்சியினால் உடனே நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ராஜஸ்தானில் இவர்கள் பட்டியலில் சேர்கப்பட்டால், அங்கு அப்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ’மீனா’ சமூகத்தினர் தங்கள் வாய்ப்புகள் பறிக்கப்படும்/பகிரப்படும் என்று அதை எதிர்க்கின்றனர். ’மீனா’க்கள் ராஜஸ்தானின் முக்கிய வாக்கு வங்கி. அவர்களை பகைத்துக் கொள்ள எந்தக் கட்சியுமே விரும்பாது. அதனால் தான் போராட்டம் நடைபெற்றது.

      வருகைக்கு நன்றிகள் வெங்கட்!

      நீக்கு