புதன், நவம்பர் 09, 2011

கலவை – 8


தமிழகத்தை மழை அடித்துத் துவைத்துவரும் இந்த வேளையில் தில்லியிலும் குளிர் மெதுவாக ஆரம்பித்து வருகிறது. நான் 1990 களில் வந்த புதிதில் குளிர் பெரும்பாலும் அக்டோபர் மாதத் துவக்கத்திலேயே ஆரம்பித்துவிடும். குளிர் மார்ச் மாத இறுதிவரை இருக்கும்.. ஆனால், மெதுவாக இந்த நிலைமாறி இப்பொழுதெல்லாம், நவம்பரின் பிற்பாதியில் ஆரம்பித்து பிப்ரவரியிலேயே முடிந்துவிடுகிறது. புவிவெப்பம் தான் காரணம். ஃப்ரிட்ஜும் குளிர்சாதனப் பெட்டியும் வைத்துக் கொண்டு ஓசோன் படலத்தை ஓட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். இவற்றைத் தவிர பிலாஸ்டிக், மருத்துவ, வேதியல் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகள் என்று நாளும் பூமியை மெதுவாக வாழ்வதற்கு ஒன்னாத ஒரு பிரதேசமாக ஆக்கிவருகிறோம்.

பிளாஸ்டிக் கழிவுகள் என்றது ஒரு செய்தி. சபரிமலையையும் அதன் சுற்றுப் புரங்களையும் (பம்பைவரை) ஒரு பெரிய சுத்தம் செய்யும் பணி 6000 தன்னார்வலர்களால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதில் அமிர்தானந்தமயி மடத்திலுருந்து 3000 பேரும் மற்ற சிறிய பெரிய நிறுவனங்களிலிருந்தும் அரசு சாரா அமைப்புகளிலிருந்தும் 3000 பேரும் சேர்ந்து இந்த பணியைச்  செய்கின்றனர். இந்த பகுதியில் zero waste zone ஆக்குவதுதான் அவர்களின் நோக்கமாம். இதைப் பார்த்தவுடன் ’நம்மவர்’ படத்தின் ”சுற்றம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான்” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

’நம்மவர்’ கமலுக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள். ஒரு சில விமர்சனங்கள் இருந்தாலும் எனக்குப் பிடித்த நடிகர். சிவாஜிக்குப் பின் அவரது கலை உலக வாரிசு என்றால் அது கமல் தான். அதே போல் எம்.ஜி.ஆர். போல் சினிமா தொழில் நுட்ப ஆர்வமும் இவருக்கு உண்டு. சிவாஜியின் நடிப்பு இவரிடமும் style ரஜினியிடமும் போனது போல், MGR-ன் தொழில் நுட்ப ஆர்வம் இவரிடமும் மக்கள் கூட்டம் ரஜினியிடமும் சென்றுவிட்டதாகவே கூறலாம். அதே நேரம் MGR-ஐ விட ரஜினி எப்படி நல்ல நடிப்பாரோ அதே போல் அவரைவிட கமலின் சினிமா தொழில் நுட்ப ஆர்வமும் அதிகம். எனக்கு மிகவும் பிடித்த 10 கமல் படங்கள் இவை:-

1.    அன்பே சிவம்
2.    ஹே ராம்
3.    குருதிப்புனல்
4.    சிகப்பு ரோஜாக்கள் [style என்றால் சாதரணமாகப் பார்ப்பது கூட என்பது இந்த படத்தில் புரியும்]
5.    மைக்கேல் மதன காம ராசன்
6.    நாயகன்
7.    மகாநதி
8.    16 வயதினிலே
9.    அபூர்வ சகோதரர்கள்
10.  எல்லாம் இன்ப மயம் [’ஆசை கிளியே பர்லா’வும் ‘மாமன் வூடு’ம் என் fav. பாட்டு]


சென்ற கலவையில் மக்கள் தொகை 7 பில்லியன்களை எட்டியதைப் பார்த்தோம். அதில் ஓர் ஆச்சரியமானத் தகவலை விட்டுவிட்டேன். சீனாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஓர் ஆச்சர்யமான தகவல் இருந்தது. அந்நாட்டில் தற்பொழுது 100 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை 49000த் தாண்டிவிட்ட்தாம். ஜூன் வரை அது 48900 ஆக இருந்ததாகவும் சீனாவின் ஜெரொண்டொலாஜிகல் சொசைடி என்ற அமைப்பு கூறுகிறது. இது சென்ற ஆண்டைவிட 5000 அதிகமாம். லுயோ மெழ்ஹென் என்ற 126 வயது பெண்மணிதான் அந்நாட்டில் தற்பொழுது மிகவும் முதியவராம்.

நூறு என்றவுடன் நம் ஞாபகத்திற்கு வருபவர் சச்சின். இன்று 100வது சதத்தை அடித்துவிடுவார் என்று நினைத்திருந்தேன். அதிலும் முதல் session-ல் எட்வர்ட்ஸின் பந்துகளை அவர் எதிர் கொண்ட விதம் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது. ஆனால், கடைசியில் short length-ல் வந்த பந்தை விட்டு காலில் வாங்கி அவுட். 76 ரன்கள்.  நேற்று அவர்  15000 ரன்கள் எடுத்த உடனேயே எழுத நினைத்தேன்.  ஆனால், இன்று பார்த்துவிட்டு சதத்தையும் சேர்த்து எழுதலாம் என்று இருந்தால் இப்படி 76-ல் அவுட் ஆகிவிட்டார். எத்தனையோ சாதனைகள். ஆனாலும், முச்சதம் அடிப்பது, இன்றைய நிலையில், கடினம் தான் என்று நினைக்கிறேன். Fitness-தான் பிரச்சனை. அதுதான் அவர் கவனத்தையும் திசைத் திருப்புகிறது என்று நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் மைதானம் சற்று சிறியதாக இருக்கும் (எல்லைக் கோடுகள் குறுக்கப் படுவதால்). மேலும் அதில் attacking விளையாடலாம். ஆனால் அவர் தற்போது (டெஸ்டில்) அப்படி ஆடுவதில்லை. ஆனால், அப்படி அவரை சாதாரணமாக கழித்து கட்டிவிட முடியாது என்பது தான் அவருடைய பலம். பொறுத்திருந்து பார்ப்போம்.

சாதாரணமாக, அவர் முதல் இன்னிங்ஸ் ஆட்டக்காரர் [சேவாக், திராவிட் ஆகியோரும் கூட]. ஆனால், லக்ஷ்மண், கம்பீர் போன்றவர்கள் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டக்காரர்கள். அதனால் அவர்கள் match winner-களாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆனாl சச்சின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் match winner இல்லை என்பதுதான். ஆனால் சச்சின் டெஸ்ட்களில் சதம் அடித்த 51-ல் 17 வெற்றி; 11 தோல்வி, 23-ல் டிரா. அதுவே ஒருநாள் போட்டிகளில் 49-ல் 33 வெற்றிக்காக. அதிலும், ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை அவர் முதல் ஆட்டக்காரராகக் களமிறங்குவதால் பெறும்பாலும் இறுதிவரை ஆட முடிவதில்லை. எனவே, அவரை finisher இல்லை என்று குற்றம் சாட்டினால் அது ஓரளவுக்கு சரி. ஆனால், match winner இல்லை என்பது அவர் மீது உள்ள காழ்புணர்வே.

6 கருத்துகள்:

 1. //MGR-ன் தொழில் நுட்ப ஆர்வம் இவரிடமும் மக்கள் கூட்டம் ரஜினியிடமும் சென்றுவிட்டதாகவே கூறலாம். அதே நேரம் MGR-ஐ விட ரஜினி எப்படி நல்ல நடிப்பாரோ அதே போல் அவரைவிட கமலின் சினிமா தொழில் நுட்ப ஆர்வமும் அதிகம்.//

  Objection your honour!
  எம் ஜி ஆரின் மக்கள் கூட்டம் எம் ஜி ஆரிடமேதான் உள்ளது. ரஜினியின் கூட்டம் ரஜினியோடது.
  MGR-ஐ விட ரஜினி நல்ல நடிப்பாரா! அப்படியா?
  MGR மக்களுக்காக நடித்தார்(!!!). கமல் அவருக்காக!

  பதிலளிநீக்கு
 2. தில்லி குளிர் - தீபாவளி அடுத்த நாள் போட்ட ஸ்வெட்டர் ஹோலிக்கு அடுத்த நாள் தான் கழட்டுவாங்க அப்போ... :)

  ஓசோன் - ல ஓட்டை... :( எத்தனை சொன்னாலும் புரியாத ஜனங்கள்....

  கமல் படங்கள் வரிசை... பெரும்பாலும் என் வரிசையும் அதுதான்... ஒரு சில தவிர... :)

  நல்ல கலவை சீனு....

  பதிலளிநீக்கு
 3. வாங்க பத்து,

  MGR மக்களிடம் மட்டுமே நடித்தவர். திரையில் அல்ல.
  ரஜினி அப்படியல்ல அவர் பல படங்களில் நன்கு நடித்துள்ளார். அமிதாப், சத்ருகன் சின்ஹா remake-களில் நடித்து தன் நடிப்பின் வீச்சைக் குறைத்துக் கொண்டுவிட்டார். ஆனால், அந்த மசாலா படங்களே அவரின் star அந்தஸ்தை உயர்த்தியன என்பதையும் மறுக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 4. ஆமாம் வெங்கட். இப்பொழுதெல்லாம் ( 2 வருடங்களாக) half sweater என்று சொல்லப்படும் கையில்லா sweaterகளை உபயோகப் படுத்துவதே இல்லை. நேராக full hand sweater தான். அதுவும் ஒன்று ஒன்றட்ரை மாதத்திற்கு மட்டுமே.

  பதிலளிநீக்கு