குழந்தை பிறந்து ஒர்
ஆண்டு ஆனதோ இல்லையோ, எல்லா பெற்றொருக்கும் வரும் முதல் கவலை அது எப்போது பேசத்
துவங்கும் என்பதாகத் தான் இருக்கும். அதுவும் அடுத்த வீட்டில் சமவயது குழந்தை
இருந்து அது பேசத் துவங்கிவிட்டால் குல தெய்வத்திற்கு காசு முடிவதிலிருந்து கடா
வெட்டுவரை வேண்டுதல்கள் இருக்கும். மேலும், அந்த குழந்தையின்
அறிவாற்றலையும் சந்தேகிக்க ஆரம்பித்துவிடுவர். சாதாரணமாக சீக்கிரம்
பேசத் துவங்கும் குழந்தைகள் புத்திசாலிகள் என்ற கருத்து இருக்கிறது. இது சரியில்லை. குழந்தைகளின் அறிவுத் திறனுக்கும் அவர்கள்
பேசத் துவங்குவதற்கும் அதிகத் தொடர்பு இல்லை.
குழந்தைகள் பேசுவது
மிக முக்கியமான ஒன்று தான். பேசுவது என்பது அவர்களின் எண்ணங்களை
வெளிப்படுத்துவரற்குத் தேவையான மிக முக்கியமான ஒன்று.
சொல்லப் போனால்
குழந்தைகள் பேசுவதற்கு முன்னரே தங்களின் எண்ணங்களை, உணர்வுகளை, தேவைகளை – அழுவது,
கோபமாக பொருட்களை எறிவது, தரையில் பிரண்டு அரற்றுவது ஆகியவற்றினால் - வெளிப்படுத்தத்
துவங்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக – பெற்றோரும் சுற்றத்தாரும் – செல்லும் சொற்களைக்
கவணித்து அவற்றில் அவர்களை ஈர்த்த, அவர்களுக்கு எளிதானவற்றைத் திரட்டி தங்கள் அந்த
சத்தங்களை பிரதிபலிக்க முயற்சிக்கும். சிறு குழந்தைகளின் கவனிப்புத் திறன் பெரியவர்களை விட மிகக் கூர்மைனது. காரணம்,
நம்மைப் போல் அன்றி அவர்களுக்கு கவனச் சிதறல் குறைவு.
குழந்தைகளின் இந்த
முயற்சியை வளர்ப்பதிலும் அதைச் சீரமப்பதிலும் பெற்றோருக்குப் பெரும் பங்கு உள்ளது.
அவர்களின் பேச்சு, உரையாடல்கள் தான் குழந்தைகளால்
அதிகம் கவனிக்கப்படுபவை. அதிகம் தொலைகாட்சி பார்க்கும் குழந்தைகளால்
- ஒலி ஒரே இடத்திலிருந்து வருவதால்
உரையாடல்களையும் அதற்கான உதட்டசைவு நாக்கு சுழலும் விதம் ஆகியவற்றை கவனிக்க முடியாததாலோ என்னவோ – பேசத் துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால்,
பேசத்துவங்கும் குழந்தைகளைத் தொலைகாட்சியிலிர்ந்து திசைத் திருப்பி,
வெவ்வேறு சத்தங்களையும், சொற்களையும் வார்த்தைகளையும்
உச்சரிக்கச் செய்யத் தூண்ட வேண்டும்.
சாதாரணமாக, குழந்தை மூன்று மூன்றரை வயதில் பேச ஆரம்பிக்கும். துவக்கத்தில் அவை
வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்காமல் அல்லது பதங்களை மாற்றியோ பேச (உறள சீசீ உளற!!!) ஆரம்பிக்கும். அப்பொழுது அவர்களைத் திட்டவோ கண்டிக்கவோ திருத்தவோ முயலக் கூடாது. இது சாதாரணமாக அவர்களை புதுபுது சொற்களை கற்க/உபயோகப்படுத்த
முயற்சிப்பதிலிருந்து தடுக்கும். அதே நேரம், பெற்றோர் அவர்களைப் போலவே மழலையாக பேச ஆரம்பிக்கவும் கூடாது. இது அவர்களை அவர்களாகவேத் திருத்திக் கொள்வதிலிருந்துத் தாமதப் படுத்தும்.
மெதுவாக பேச ஆரம்பித்துவிட்டால்
அடுத்து பெற்றோர் சந்திக்கும் பிரச்சனை அவர்கள் திக்கித் திக்கி பேசுவது. குழந்தை முதலில் திக்கிப் பேச ஆரம்பித்த உடனேயெ பெற்றோருக்கு tension ஆரம்பித்துவிடும். ஆனால், இதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது தங்கள்
எண்ணங்களை வெளிப்படுத்த நினைக்கும் குழந்தைக்கு அதற்கான தகுந்த பொருத்தமான சொற்களை
அல்லது அந்தச் சொற்களைப் பயண்படுத்தித் தொடர் வாக்கியமாக மாற்றுவதில் உண்டாகும் குழப்பமே.
சில நேரங்களில் பயம் கூடக் காரணமாக இருக்கும். இந்த நேரத்தில், அந்த பயத்தைப் போக்கி புது புது வார்த்தைகளை மெதுவாக
அவர்களுக்கு அறிமுகப் படுத்துவது நலம்.
பொதுவாக, குழந்தைகள் ஆறு / ஏழு
வயதை எட்டும் பொழுது தடுமாறாமல் தொடர்ச்சியாகப் பேசத் துவங்குவர். அதுவரை பொறுமை காப்பது
அவசியம்.
//காடா வெட்டுவரை வேண்டுதல்கள் இருக்கும்.//
பதிலளிநீக்குஇது என்ன புது வேண்டுதல் சீனு?
நல்ல பயனுள்ள தகவல்கள்.
குழந்தை மொழி கொள்ளை அழகுதான்
பதிலளிநீக்குவெங்கட் அது கடா தான். கால் சற்று அதிகமாகிவிட்டது. இப்போது வெட்டிவிட்டேன். வேண்டுதல் நிறைவேறிவிட்டது. நன்றிகள்
பதிலளிநீக்குஆம். ராஜா குழந்தைகளின் மழலைப் பேச்சுகளையும் அதில் தெறிக்கும் அறியாமையும் கேட்கக் கேட்க ஆனந்தம் தான். ஆனால், பெரியவர்கள் சில நேரங்களில் தேவையில்லாமல் கவலை கொள்வர். அதைத் தான் குறிப்பிட்டிருந்தேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள்.