செவ்வாய், நவம்பர் 15, 2011

ஐந்து நாள் போட்டிகளின் முடிவு


நேற்று காலை கல்கத்தாவில் இரண்டாவது ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கின.

முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றி;
இந்தியா டாஸில் வென்று முதலில் மட்டையாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது;
சச்சின் 100வது சதத்தை எட்ட இருந்த எதிர்பார்ப்பு
இன்றும் இந்தியா நல்ல வலுவான நிலையில் இருந்த்து.
அதுவும், கல்கத்தாவின் செல்லப் பிள்ளை லக்ஷ்மண் சதம் எடுத்த நிலை.
-       மைதானம் நிரம்புவதற்கான அனைத்து அம்சங்களும் இருந்தன.
ஆனால், மைதானத்தில் இருந்தவர்களோ விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் சொற்பமானவர்களே. இங்கிலாந்து தவிர அனைத்து இடங்களிலும் ஐந்து நாள் போட்டிகளில் கிட்டத்தட்ட இதே நிலைமை தான்.

இதன் காரணம் என்னவாக இருக்கும்?

1.    இங்கிலாந்து தொடரில் இந்தியா பெற்ற தொடர் தோல்விகளால் இந்தியா தன் வீட்டில் மட்டுமே வெல்லும் என்ற விரக்தி;
2.    தற்போதய மேற்கிந்திய அணி (குறிப்பாக இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்து ஆடுவதில்) அத்தனைத் திறன் பெற்ற அணி இல்லை;
3.     ஐந்து நாட்களை வீணாக விளையாட்டிற்காக செலவிடுவதா என்ற மன நிலை;
4.    ஆடுகளங்களின் (மோசமான) நிலைமை;
5.    தொழில் நுட்ப முன்னேற்றத்தால் மைதனத்திலிருந்து பார்ப்பதைவிட வீட்டில் நன்றாக பார்த்து ரசிக்க முடிவது  அல்லது அலுவலகத்தில் தொலைகாட்சியிலும் வலையிலும் ஸ்கோர் தெரிந்துகொள்வது;
போன்றவற்றால் பொதுவாக ஐந்து நாள் போட்டிகளை மைதானத்தில் பார்ப்பது குறைந்திருந்தால் அது பரவாயில்லை.

ஆனால், இது ஐந்து நாள் என்ற பொன் முட்டையிடும் வாத்தை ஐபிஎல் என்ற முட்டைக்காகக் கொல்வது என்ற நிலையாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. பொதுவாகவே supply அதிகம் ஆகும் பொழுது அதன் தேவை குறையும். ஒருவேளை அதிக கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல், சாம்பியன் ட்ராஃபி போன்றவை தான் காரணம் என்றால், அவற்றைக் குறைக்க வேண்டியது தான் இப்போதைய தேவை. ஐபிஎல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் இடைப்பட்ட வருட்த்தில் சாம்பியன் ட்ராஃபியும் நடத்தலாம்.

ஆனால், இன்றைய ஆட்டங்களின் பட்டியல்கள் நிறைவுற்ற நிலையில் இது சாத்தியமாகத் தோன்றவில்லை ஐசிசி கூட ஐந்து நாள் சாம்பியன் தொடரை நடத்துவது 2017-க்கு முன் சாத்தியமில்லை என்று கைவிரித்துவிட்டது.

மைதானத்தில் ஆட்களே இல்லாமல், தொலைக்காட்சி உரிமையை மட்டும் வைத்து ஒரு தொடரை நடத்துவது சாத்தியமா? ஆட்டக்காரர்கள் அதை விரும்புவார்களா?

இது ஐந்து நாள் ஆட்டத்தின் முடிவா? காலம் தான் இதற்கு பதில் தர முடியும்.

5 கருத்துகள்:

  1. அருமையான அலசல் பாஸ்
    லக்ஸ்மன் அடித்து தூள் கெளப்பிவிட்டார்

    பதிலளிநீக்கு
  2. டெஸ்ட்போட்டிகள் தான் ஓரு கிரிக்கெட் வீரரின் முழுத்திறமையை வெளிப்படுத்தும் இந்த 20 ஓவர் போட்டிகளின் வரவுதான் கிரிக்கெட் போட்டிகளை அழிக்கும் வில்லன்.....

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் ராஜா,

    லக்ஷமண் தூள் கிளப்பிவிட்டார்.

    எவ்வளவு குற்றம் சொன்னாலும் T20 போட்டிகள் இன்று தவிர்க்க முடியாதாவை. தேவை கடிவாளமே. ஐசிசி தான் இந்த ஐபிஎல் போன்றவற்றை control-ல் வைக்க ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், BCCI போன்றவை அதை எந்த அளவுக்கு அனுமதிக்கும் என்பது தான் தெரியவில்லை. தொலை நோக்குடன் செயல் பட்டால் டெஸ்ட் போட்டிகளுக்கு (அதன் மூலம் மொத்தமாக கிரிக்கெட் விளையாட்டுக்குமே ) நல்லது.
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. பவர்-ல் இருக்கும் பவார், Paddy field - ஐ பார்ப்பாரா, இல்லை, Cricket field - ஐ பார்ப்பாரா?

    பதிலளிநீக்கு
  5. //Paddy field - ஐ பார்ப்பாரா, இல்லை, Cricket field - ஐ பார்ப்பாரா?//
    அவருக்கு (பரூவா கொடுத்துள்ள) கணக்கைப் பார்க்கவே நேரம் போதவில்லை. இத்ற்கெல்லாம் நேரமிருக்கிறதா?
    btw, BCCI நேற்று, இதுவரை டெஸ்ட் போட்டிகள் நடைபெறாத இடங்களில் நடத்துவதைப் பற்றிக் கூறியிருக்கிறது. ஆனால், மைதானங்களில் மக்களுக்கு வசதிகள் சரிவர செய்து கொடுக்காமல் வெறும் இடமாற்றத்தால் இந்த நிலைமையைச் சீர் செய்ய முடியும் என்றுத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு