வட கிழக்கு இந்தியாவில் குறிப்பாக பிகார் மாநிலத்தில் மிக முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப் படுவது
சட் (Chhath – छठ) பூஜை தான். இது வட இந்தியாவின் கார்த்திகை (சந்திர மாதம்) மாதம் அமாவாசைக்கு
பிறகு வரும் ஷஷ்டி அன்று கொண்டாடப்படுகிறது. ஹிந்தியில் சஹ் என்றால் ஆறு; சட: என்றால் ஆறாவது. இது ஆறாவது நாள், அதாவது தீபாவளி
(அமாவாசை) முடிந்து வரும், நாம் கந்த ஷஷ்டியாகக் கொண்டாடும் அதே ஆறாவது நாளை அவர்கள் சட்
பூஜையாகக் கொண்ட்டாடுகின்றனர்.
நாம் இதை கந்த ஷஷ்டியாக்க்
கொண்டாடினாலும், இவர்கள் இதை சூரியனுக்காகவே கொண்டாடுகின்றனர். ”சடி மாதா” என்று இவர்கள் சூரியனின் மனைவியான உஷாதேவியை (உஷா
என்றால் இளங்காலை பொழுது; வட மொழியில் இதை உஷா காலம் என்று கூறுவர்) வணங்குகின்றனர்.
இந்த வருடம் நாம் கந்த ஷஷ்டியை திங்கள் கிழமையன்றே கொண்டாடினோம். காரணம், திங்கள் அன்று
மாலையே ஷஷ்டி துவங்கிவிட்டது. ஆனால், இவர்கள்
செவ்வாயன்று தான் சட் விரதம் இருக்கிறார்கள், ஏனென்றால் அன்றும் ஷஷ்டி மீதி இருந்தது.
இதை இவர்கள் (சதுர்த்தியிலிருந்து) 4 நாட்களாகக் கொண்டாடுகின்றனர்.
முதல் நாள், அதாவது
சதுர்த்தியன்று, இதை ”நஹாய் ஔர் காய்” அதாவது குளித்து உண் என்று கூறுகிறார்கள். அன்று, காலையில் நதியில் குளித்து
பின் கத்து, கடலை பருப்பு, பச்சரிசி ஆகிய்வற்றை உண்பர்.
இரண்டாம் நாள் லோஹாந்தா
என்று கொண்டாடுகின்றனர். அன்று, கீர் தான் முக்கிய உணவு.
மூன்றாம் நாள் பகல் முழுக்க மாலை பூஜைக்கான் பிரசாதங்கள் தயாரித்து
மாலை முழுவதும் நீரில் நின்றபடி விரதம் இருப்பர். இதில் கலந்து கொள்ளும் பெண்கள் பொதுவாக
மஞ்சளில் நனைத்த வெள்ளைப் புடவைகளை அணிவர்.
மறுநாள் காலை சூரிய
உதயத்தில் சூரியனை அவன் மனைவி உஷாதேவியுடன் வணங்கி நீர் (அர்க்யம்) சமர்ப்பித்து விரதம்
முடிப்பர். பிரச்சாதங்களை அங்கிருக்கும் அனைவருக்கும் வழங்குவர்.
பொதுவாக இது வேதகாலத்திலிருந்தேக்
கொண்டாடப் படுவதாகக் கூறப்பட்டாலும், இது தற்ப்பொழுது பிகாரில் முக்கியமாகக் கொண்டாடப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக இது பிகாரின மங்கேரி மாவட்ட்த்தில்
மிகப் பெரிய பண்டிகை. இந்த மங்கேரி மாவட்டம் தான் மகாபாரத காலத்தில் அங்க தேசம் என்று
துரியோதனனால் கர்ணனுக்கு வழங்கப்பட்ட இடம். ஒருவேளை, கர்ணன் காலத்தில் ஆரம்பிக்கப்
பட்ட சூரிய வழிபாடாகக் கூட இருக்கலாம்.
தில்லி வந்த புதிதில்
இவ்வளவு விளம்பரமும் பரபரப்பும் இருந்த்தில்லை. இப்பொழுது, குறிப்பாக லல்லு யாதவ் மத்திய
அமைச்சராக இருந்த பின்பு, தேசிய சேனல்கள் அனைத்திலும் இதுதான் முதல் செய்தி. இந்த வருடம்
மும்பையிலும் பெரிய கொண்டாட்டங்கள். அனைத்து (குறிப்பாக பீகாரைச் சேர்ந்த மனோஜ் வாஜ்பேய்
போன்றவர்கள்) இந்தி திரை நட்சத்திரங்களும் முக்கிய இடம் பிடித்து கொண்டாடுகின்றனர்.
சட் பூஜை குறித்து இதுவரை நான் அறிந்திராத பல தகவல்கள்! நல்ல பகிர்வு!
பதிலளிநீக்குவாங்க சேட்டை, இந்த வருடம் மும்பையிலும் விமர்சையாகக் கொண்டாடியுள்ளனர். [ஒரு வேளை (ராஜ்) தாக்ரே தாக்கியதன் தாக்கமோ?] ஆற்றங்கரைக்கு பதிலாக கடற்கரை. எல்லாச் செய்தி தொலைக்காட்சிகளிலும் காலை முதல் இதுதான்.
பதிலளிநீக்குvery informative!
பதிலளிநீக்குகடந்த சில வருடங்களாகத்தானே இது இத்தனை பிரபலம் ஆகியிருக்கிறது சீனு. இருபது வருடங்களுக்கும் முன்பெல்லாம் நாம் இதைப் பார்த்ததேயில்லையே... இப்போது பார்த்தால் அத்தனை அமர்க்களம்.... இன்று டேக்குவா [இது சட் பூஜா ஸ்பெஷல் இனிப்பு] கிடைத்தது... :)
பதிலளிநீக்குநானும் எழுதலாம் என்று இருந்தேன். பார்க்கலாம் :)
புதியதொரு தகவலை அறிந்து கொண்டேன் நன்றி பாஸ்
பதிலளிநீக்குஇந்த மங்கேரி மாவட்டம் தான் மகாபாரத காலத்தில் அங்க தேசம் என்று துரியோதனனால் கர்ணனுக்கு வழங்கப்பட்ட இடம். ஒருவேளை, கர்ணன் காலத்தில் ஆரம்பிக்கப் பட்ட சூரிய வழிபாடாகக் கூட இருக்கலாம்./
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ஜனா, தங்கள் வருகைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஆமாம் வெங்கட், லல்லு மத்திய அமைச்சரான பின், அவர் வீட்டிலேயே குளம் கட்டி பூஜை செய்ததும், செய்தி சேனல்களுக்கு அப்போது வேறு (யாரும்!!) முக்கிய செய்திகள் இல்லாததாலும் இது மிகப் பிரபலம் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குவாருங்கள் இராஜராஜேஸ்வரி, ஆன்மீக விஷயங்களில் அதிலும் கொஞ்சம் வரலாறு கலந்துவிட்டால், உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு ஆர்வம் காட்டுவேன். அதனால், இது போல் தகவல்கள் (நண்பர்கள் மூலம்) அவ்வப்போது கிடைக்கும்.
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
ராஜா, வருகைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅரிய நல்ல தகவல்களுடன்கூடிய ஆன்மீகப் பகிர்வு அருமை!.....வாழ்த்துக்கள் சகோ .ஓர் சின்ன வேண்டுகோள் .நான் என் ஆரம்பகாலக்
பதிலளிநீக்குகவிதைகளை இப்போது தமிழ் 10 ல் தொடர்ந்து வெளியிட்டுள்ளேன் .அவை அனைத்தும் காத்திருக்கும் பகுதியில் உள்ளன .தயவு செய்து சிரமம் கருதாமல் முடிந்தவரை அந்தக் கவிதைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் அவை அனைவரையும் சென்றடைய உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ தாங்கள் எனக்கு இதுவரை
வழங்கிவரும் ஊக்குவிப்புகளிற்கு .
அம்பாளடியாள் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
பதிலளிநீக்கு