புதன், ஏப்ரல் 04, 2012

பங்குனி உத்திரம்


பங்குனி உத்திரம் என்றால் என்ன?

பங்குனி மாத்த்தில்  உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் இது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதைச் சிறப்பாக ஏன் கொண்டாட வேண்டும்?
பொதுவாக, நம் முன்னோர் ஒவ்வொரு மாதமும் முழு நிலவு தினத்தை (பௌர்ணமியை)ச் சிறப்பாகக் கொண்டாடி வந்துள்ளனர். பொதுவாக மாதங்களின் பெயர்களே, அம்மாதங்களின் முழுநிலவு தின நட்சத்திரத்தின் பெயரை ஒட்டியே வழங்கப்பட்டு வந்துள்ளன.

 உதாரணமாக சித்திரை மாதத்து முழுநிலவு சித்திரை நட்சத்திரத்தை ஒட்டியே இருக்கும்.

 வடமொழியில் உத்திர நட்சத்திரத்திற்கு உத்திர பல்குனிஎன்பது தான் பெயர். (பூர நட்சத்திரத்திற்கு பூர்வ பல்குனிஎன்பது பெயர்). பூர்வஎன்றால் முடிந்த அல்லது கழிந்த, ‘உத்தரஎன்றால் பிந்தைய என்று போருள்.

நம் பங்குனி மாதத்தின் முழுநிலவு நாள் உத்திர நட்சத்திரத்தை ஒட்டியே வரும். (இந்த வருடம் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்திற்கு அடுத்த நாள் விசாக நட்சத்திரத்தில் வருகிறது).

பங்குனி உத்திரம் நட்சத்திரம் சாதாரணமாக சிவ-பார்வதி, முருகன்-வள்ளி, தெய்வானை திருமண நாளாகவும், வள்ளி பிறந்த தினமாகவும், தேவேந்திர-இந்திராணி திருமண நாளாகவும், ப்ரம்மா-சரஸ்வதி திருமண தினமாகவும், வைணவர்களைப் பொறுத்தவரை ஆண்டாள் திருமணமாகவும் காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் தாயார் திருமண உத்சவங்களாகவும்  – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடப் படுகிறது.

பொதுவாக, வட இந்தியர்கள் ஹோலிப் பண்டிகையை பங்குனி மாதப் பூர்த்தியில், பௌர்ணமியன்று (அதாவது பங்குனி உத்திரத்தில் தான்)க் கொண்டாடுவர். நான் முன்னரே கூறியது போல் அவர்களின் மாதம் சந்திரனையும் நம் மாதம் சூரியனையும் கொண்டு இருப்பதால் சில ஆண்டுகள் இந்த பண்டிகைகள் மாறிவிடக் கூடும். ஹோலிக்கு முதல் நாள் காமதகனமாகவும், அடுத்த நாளான ஹோலியன்று ரதியின் வேண்டுதலால் சிவனருளால் காமன் உயிர்த்தெழுந்த தினமாகவும் கொண்டாடப்படுவதும் உண்டு.

ஜோதிடத்தில்,

சந்திரனை மனதுக்கு காரகன் என்பர். அதாவது சிந்தை, சித்தம் ஆகியவற்றின் அதிபதி. ஆங்கிலத்திலும் மனநிலை சரியில்லாத நிலைமையை ‘lunatic’ என்று கூறுவது lunar என்ற வேர்சொல்லை ஒட்டியே.

கன்னிராசியைப் பொறுத்தவரை அதன் அதிபர் சுக்கிரன். அவர் காதலுக்கும் திருமணத்திற்கும் காரகர்.

 பங்குனி உத்திரத்தில் சந்திரன் உத்திர நட்சத்திரத்தின் ராசியான கன்னியில் இருப்பதால் மனதுக்கு உகந்த திருமண நாளாக அது கருதப் படுகிறது. அதனால் தான்,  அன்று அனைத்து ஆலயங்களிலும் திருமண உத்சவங்கள் கொண்டாடப்படும் வழக்கம் துவங்கியிருக்கலாம்.

அனைவருக்கும் பங்குனி உத்திர நல்வாழ்த்துகள்.

11 கருத்துகள்:

  1. பங்குனி உத்திரத்தை பற்றி நல்ல பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. நல்லதோர் பகிர்வு. பல நல்ல தகவல்கள் ! !
    குலதெய்வம் கோவிலுக்கு போவது எதனால் ? தெரிந்து கொள்ள விழைகிறேன்..

    பதிலளிநீக்கு
  3. அரிய தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றிி
    கன்னிக்கு ஆட்சி அதிபதி புதன் என நினைக்கிறேன்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான பக்தி விளக்கப் பதிவு சகோ...வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல்கள் சீனு!

    பகிர்வுக்கு நன்றிடா!.

    பதிலளிநீக்கு
  6. @ரமணி,

    தவறினைச் சுட்டிகாட்டியதற்கு நன்றிகள். புதன் தான் கன்னி ராசிக்கு(ம், மிதுன ராசிக்கும்) அதிபதி.

    [தொழில் நுட்ப காரணத்தால் உடனடியாக பதிலளிக்கவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்]

    பதிலளிநீக்கு