வியாழன், மே 31, 2012

புகை இ(ல்)லை


1988-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை புகையிலை மறுப்பு/எதிர்ப்பு தினமாகக் கொண்டாடத்  தீர்மாணம் இயற்றியது.

சாதாரணமாக, புகையிலை என்றவுடன் நமக்கு சிகரெட் புகைப்பது தான் நினைவுக்கு வரும். மற்றவை, அவ்வளவாக பெரிதாக எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. காரணம், புகைப்பது புகைப்பவரை மட்டுமன்றி, மற்றவர்களையும் பாதிக்கும் என்பதால் கூட இருக்கலாம். ஆனால்,  புகைப்பிடிப்பதைப் போலவே மற்ற புகையிலைப் பொருட்களை பாவிப்பதும் அந்த அள்வு தீமைச் செய்யக் கூடியதே.

சிகரெட், பீடி, சுருட்டு போன்றைவைத் தவிர புகையிலை வேறு வழியிலும் உட்கொள்ளப்படுகிறது. அவை….

1.            ஷிஷா புகையிலை (ஹூக்காவில் இடப்படுவது)
2.            குட்கா
3.            மூக்குப் பொடி
4.            (புகையிலை) சுவிங்கம்

புகைப்பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை பாவிப்பதாலும் இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் இறப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உலக அளவில் இது ஆறில் ஒரு பங்காகும். சமீபத்தில் நட்த்தப்பட்ட ஆய்வு, நகர்புற பகுதி பெண்களிடம் புகையிலைப் பழக்கம் கடந்த ஆண்டுகளைவிட மூன்று மடங்காக உயர்ந்திருப்பதாத் தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவன தகவலின் படி இந்தியா ஆண்களில் 25 சதவிகித்தவரும் பெண்களில் 3 சதவிகிதத்தவரும் புகைப்பிடிப்பவர்களாம். இப்படியே போனால், புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை 2020-ல் 16 லட்சத்தை எட்டக்கூடும் என்பது கணிப்பு.

புகைபிடிப்போருக்கு இணையாக அவர்கள் விடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பள்ளி-கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வது, புகையிலை பொருட்கள் மீதான வரிகளையும் அதிகரிப்பது என்று கடந்த சில வருடங்களாகச் செய்வதைப் போலல்லாமல் புகையிலைப் பொருட்களை தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு தனிமனிதருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அது தீமை பயக்கும் என்பதை நாம் உணர வேண்டும். அப்பொழுதான் அதற்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து போராட முடியும்.



4 கருத்துகள்:

  1. // புகையிலைப் பொருட்களை தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.// நிச்சயம் செய்ய மாட்டார்கள். நிறைய பணம் இவர்களிடமிருந்து அரசுக்குக் கிடைக்கிறதே சீனு.

    எத்தனை எத்தனை இறப்புகள்..... உபயோகிப்பவர்களே திருந்தினால்தான் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிச்சயம் செய்ய மாட்டார்கள். நிறைய பணம் இவர்களிடமிருந்து அரசுக்குக் கிடைக்கிறதே//
      கறுப்புப் பணம் என்றால் உலக நாடுகளுடன் போட்ட ஒப்பந்தத்தைக் காட்டும் அரசு, உலக ஒப்பந்ததை மீறி சுமார் 100 கோடி பங்குகளை புகையிலை கம்பெனிகளில (ITC, VSD போன்றவை) பொதுத்துறை நிறுவங்கள் மூலம் வைத்துள்ளது. ஒரு பங்கின் face value மட்டுமே எடுத்துக் கொண்டாளும் அது 1000 கோடியைத் தாண்டும்; Premium வேறு இருக்கிறது. இதில் முக்கியமான நகைமுரண் என்னவென்றால் இந்த புகையிலை கம்பெனிகளின் பங்குகளில் பெறுவாரியான முதலீடு செய்துள்ளவை LIC போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களே.

      நீக்கு
  2. புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு தனிமனிதருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அது தீமை பயக்கும் என்பதை நாம் உணர வேண்டும்

    பதிலளிநீக்கு