வியாழன், ஜூலை 05, 2012

பிறந்த நாள் பரிசு


’ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே’
’கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ’

இப்படி எத்தனையோ பழமொழிகள் கேள்வி பட்டிருக்கிறோம் அதில் புதிதாக ‘மக்கள் நல நிதியோ உறுப்பினரின் ஊர்தியோ’ என்று புதுமொழியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறு குழந்தைகளின் பிறந்த நாள் விழா கொண்டாடும் பொழுது, அதில் கலந்து கொண்டு பரிசுகளைத் தரும் குழந்தைகளுக்கு return gift என்று பதில் மரியாதை செய்வது வழக்கம்.

சென்ற ஞாயிறன்று உத்திர பிரதேசத்தின் செல்லப் பிள்ளை அகிலேஷ் யாதவ்-விற்கு 39-ஆவது பிறந்த நாள். அதில் அவரது கட்சி உறுப்பினர்கள் அவருக்குப் பல பரிசுகள் அளித்திருப்பார்கள். அவர்களுக்கு பதில் மரியாதை செய்யும் விதமாக, தன் கட்சியினருக்கு மட்டுமே அளித்தால் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவாக, அகிலேஷ் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது என்னவெனில், அனைத்து உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தை சொகுசு சிற்றுந்து (Luxury Car)  வாங்கிக் கொள்ளலாம் என்பது தான். உறுப்பினர்களுக்கு வாகனம் அளித்தால் அது அவர்கள் மக்களைச் சந்திப்பதை எளிதாக்கும் என்றும் அது தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கு உதவும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஏழைகள். கார் கூட வாங்க முடியாத அவர்களின் வெறும் 70% உறுப்பினர்கள் மட்டுமே கோடீஸ்வரர்கள்!
 
முதலில் எதிர்கட்சிகளின் எதிர்க்க ஆரம்பித்தவுடன் இத்திட்டம் தேவையிருக்கும் உறுப்பினர்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் நேற்று இத்திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். 

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால்  அகிலேஷின் உண்மையான பிறந்த நாள் அக்டோபர் 24. ஆனால், பள்ளியில் சேர்க்கும் பொழுது அவரது பிறந்த தேதியை ஜூலை 1-ஆம் தேதியாகத் தவறுதலாகக் குறித்து விட்டார்கள். அதனால், அகிலேஷே பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடவில்லை என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது.

11 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. காமராஜர் (திமுக, அதிமுக பற்றி) கூறிய ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்பது இன்று அனைத்துக் கட்சிகளுக்கும் பொறுந்தும்.

   நீக்கு
 2. உத்தரவிட்டு திரும்பப் பெறும் இரண்டாவது விஷயம் இது. ஒவ்வொரு அரசியல்வாதியிடமும் பெரிய பெரிய SUV [Sports Utility Vehicle] இருக்க, 20 லக்ஷம் சர்வசாதாரணமாக பொது மக்கள் நலத்திட்டத்திற்காக ஒதுக்கிய பணத்திலிருந்து எடுத்து கார் வாங்க சொல்வது அநியாயம்... நானும் இது பற்றி எழுத நினைத்திருந்தேன்....

  த.ம. 1

  பதிலளிநீக்கு
 3. அக்கி (அதான் அகிலேஷ்) இப்படி யோசிக்காமல் அறிவிப்புகளை விட்டு விட்டு சிக்கிக் கொள்கிறார். பாவம், சின்னப் பையன். பொழச்சுப் போகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நாம் வேறென்ன செய்ய முடியும். வருகைக்கு நன்றிகள்

   நீக்கு
 4. // ‘மக்கள் நல நிதியோ உறுப்பினரின் ஊர்தியோ’// muthalil படித்த பொது இதன் அர்த்தம் புரியவில்லை சார். பதிவு முழுவதும் படித்ததும் தான் அந்த அயோக்கியர்களின் அக்கிரமம் புரிந்த்தது. எவன் காசை எடுத்து எவனுக்கோ சொகுசு ஊர்தி வாங்கிக் கொடுகிறார்கள். சமூக கண்ணோட்டத்துடன் கூடிய உங்கள் பதிவிற்கு ஒரு சபாஷ்.

  வெங்கட் சார் பதிவில் உங்கள் கருது பார்த்து வந்தேன் தங்களது வது நண்பராக உங்கள் தளத்தில் இணைந்துள்ளேன்... தொடர்ந்து சந்திப்போம் nandri

  படித்துப் பாருங்கள்

  சென்னையின் சாலை வலிகள்

  http://seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

  பதிலளிநீக்கு
 5. // ‘மக்கள் நல நிதியோ உறுப்பினரின் ஊர்தியோ’// muthalil படித்த பொது இதன் அர்த்தம் புரியவில்லை சார். பதிவு முழுவதும் படித்ததும் தான் அந்த அயோக்கியர்களின் அக்கிரமம் புரிந்த்தது. எவன் காசை எடுத்து எவனுக்கோ சொகுசு ஊர்தி வாங்கிக் கொடுகிறார்கள். சமூக கண்ணோட்டத்துடன் கூடிய உங்கள் பதிவிற்கு ஒரு சபாஷ்.

  வெங்கட் சார் பதிவில் உங்கள் கருது பார்த்து வந்தேன் தங்களது 27 வது நண்பராக உங்கள் தளத்தில் இணைந்துள்ளேன்... தொடர்ந்து சந்திப்போம் nandri

  படித்துப் பாருங்கள்

  சென்னையின் சாலை வலிகள்

  http://seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் நண்பர் இணைப்பிற்கும் நன்றிகள்.

   நிச்சய்ம் உங்கள் பதிவுகளைப் படித்துப் பார்க்கிறேன்.

   கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கும் நன்றிகள்.

   நீக்கு
 6. No doubt the DOB was changed deliberately (most likely to get him admitted in school early). Else both date & month won't be wrong. That time, MSYadav would have been a non-entity & never expected himself/his son to become so famous and that such goof-ups would get exposed.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அதனால்தான் அவ்ர் தனியே ’பிறந்த தினம்’ கொண்டாடவில்லை. அதே சமயம் தன் தொண்டர்கள் கொண்டாடுவதையும் தடுக்கவில்லை. (இரண்டு பிறந்த தினங்கள் இருந்தால் இரட்டை ஆதாயம்)

   நீக்கு