வெள்ளி, ஜூலை 20, 2012

நூற்றுக்கு நூறு


பதிவு எழுத ஆரம்பித்து ஒரு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது…

இதுவரையில் அப்படி என்ன தான் எழுதியிருக்கிறேன்….

கிட்டத்தட்ட 2001-இன் ஆரம்பங்களிலேயே பதிவுலகில் நண்பர்கள் எழுதும் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துவந்தாலும் அவ்வப்போது gmail கணக்கின் மூலம் கருத்துகள் எழுதியிருந்தாலும் நானே ஒரு வலைப்பக்கக் கணக்குத் துவங்கி பதிவுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் முதலில் தோன்றவே இல்லை.

என் தந்தையார் சிறு வயதில் அவர் எனக்கு நேரடியாகவும் சில சமயங்களில் அவரது நண்பர்கள் மற்றும் பிறருடன் பேசும் போது அறிந்து கொண்ட தகவல்கள் பிற்காலத்தில் எனக்கு  பல விஷயங்களில் உபயோகமாக இருந்தன. பெரும்பாலும் அவை ஆன்மீக, வானவியல் (சிறுவயதில் கோடைஇரவுகளில் நாங்கள் மொட்டை மாடியில் தூங்குவது வழக்கம் என்பதால் நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றி அவ்வப்பொழுது கூறியதுண்டு. அதில் எனக்கு ஆர்வம் என்பதால் அவற்றில் பெரும்பாலானவை இன்றும் ஞாபகம் இருக்கிறது). அவர் இறந்த பொழுது அத்தகவல்களைத் தொகுத்திருந்தால் எத்தனை உபயோகமாக இருந்திருக்கும் என்று பல முறை நினைத்ததுண்டு.

அப்பொழுது ஒருநாள் திடீரென நாமும் நமக்குத் தெரிந்த தகவல்களைத் தொகுத்து எங்காவது  பதிய வைக்க வேண்டும் என்றுத் தோன்றியது. இடைப்பட்ட வலைபதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்திருந்ததால் ஒருநாள் இவற்றைப் பதிவாக் எழுதாலாமே என்ற எண்ணம் தோன்றி  எழுதவும் துவங்கினேன்.

எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் மனதில் எழுந்த கேள்வி. அப்படி என்ன தான் எழுதப் போகிறோம். நமக்கும் எழுதும் அளவுக்கு நமக்கு அப்படி என்ன தெரியும்? எதை எழுதுவது? என்ற கேள்விகள் எழுந்தன. உடனே, அதற்கு பதிலாக சிறுவயதில் ஔவைப் பாட்டி கூறியது தான் நினைவுக்கு வந்தது.  அது ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்பது தான். எனக்குத் தெரிந்த அந்த கையளவு மண்ணை பதிய வைப்பதன் மூலம் அந்த மண்ணில் இருக்கும் குறைகளை மற்றவர்கள் சுட்டிக் காட்ட முடியும் என்பதால் அதையே என் வலைப்பக்கத்தின் தலைப்பாகவும் தேர்ந்தெடுத்தேன்.

அனுபவம், அரசியல், வரலாறு, கல்வி, குழந்தை வளர்ப்பு, நாட்காட்டிகள் அதைச் சார்ந்த வானவியல், ஆன்மீகம் என்று பலதரப்பட்ட   பதிவுகள் எழுதியுள்ளேன்.

தில்லி, உத்திர பிரதேச பகுதிகளில் கடந்த 20 வருடங்களாக வசித்துவருவதன் இதைப் பற்றி எழுதினால் இப்பகுதியைப் பற்றி அவ்வளவாக அறியாதவர்களுக்கும் இது பயன் தரலாம் என்பதால் என்பதிவுகளில் இதைப் பற்றியே அதிகமாக எழுதி வருகிறேன்.

ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ ‘இன்று சுடுவது நிச்சயம்’ என்ற இரண்டு கதைகள்  'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற ஆன்மீகக் கதை கூட எழுதியுள்ளேன்.

மொத்தமாகப் பார்த்தால் இது என் நூறாவது பதிவு.

நூறு பதிவு எழுதி ‘நூற்றுக்கு நூறு’ என்று தலைப்பிட்டுவிட்டால் அது நான் என்பதிவிற்குத் தரும் மதிப்பெண்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.

நூறு பதிவுகள் எழுதிய நிலையில் இதுவரை என் வலைப்பக்கத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேல். அதாவது சராசரியாக ஒரு பதிவை பார்த்தவர்களின் எண்ணிக்கை நூறு. அதனால் தான் பதிவின் தலைப்பு ’நூற்றுக்கு நூறு!!’

என்பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் நன்றிகள்….

20 கருத்துகள்:

  1. சதம் அடித்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் பாஸ் முதலில் நூறாவது பதிவுக்குவாழ்த்துக்கள்

    உங்கள் பதிவுகளின் மூலம் பல புதிய தகவல்களை அறிந்து கொண்டுள்ளேன் தொடரட்டும் உங்கள் பணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறு பல நூறுகளாகப் பெருக வாழ்த்துகள்..

      நீக்கு
    2. நன்றிகள் ராஜா.

      [btw., உங்கள் ஆதர்ச நாயகன் ‘தாதா’-வின் படத்தை உங்களின் profile picture-ஆக மாற்றிவிட்டீர்களா?]

      நீக்கு
    3. தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் இராஜராஜேஸ்வரி.

      நீக்கு
  3. உங்கள் வலைப்பூவின் தலைப்பை பார்த்து அடிகடி நான் வியந்தது உண்டு... நீங்கள் எழுதிய கதைகள் படித்து விடுகிறேன் சார்..... உங்களைத் தொடர்வது மகிழ்ச்சியே...

    நூற்றுக்கு நூறுக்கு வாழ்த்துக்கள்

    த ம 1

    பதிலளிநீக்கு
  4. நூறு குறிப்பிடத்தக்க சாதனை தான். சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் தொடருங்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் நண்பரே
    தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  6. நன்றிகள் ரஜினி பிரதாப் சிங்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துகள்.

    நூறு முறை வாழ்த்த ஆசை.

    வாழ்த்துகள்.....வாழ்த்துகள்.....வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறு முறை நன்றிகள்... நன்றிகள்.... நன்றிகள்.....

      நீக்கு
  8. நூற்றுக்கு நூறு! வாழ்த்துகள் சீனு.... இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நூற்றுக்கு நூறு. எங்கள் மதிப்பீடுதான்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் வெங்கட ஸ்ரீநிவாசன்! இன்னும் பல பதிவுகளை அளியுங்கள்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு