வெள்ளி, மார்ச் 01, 2013

ஷாஜகானின் ஓவியங்கள்


ஷாஜகான் ஆட்சியிலிருந்த பொழுது தன் ஆட்சியின் எடுத்துக் காட்டும் வண்ணம் அவரது வாழ்க்கை வரலாற்றை ‘பாத்ஷா நாமா’ என்று புத்தக வடிவில் தொகுக்க எண்ணினார். இந்த முயற்சி அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற 8-ஆம் ஆண்டில் துவங்கியது.

முதலில் முகமது அமின் காஸ்வினி என்பவர் அவர் ஆட்சியின் முதல் 10 வருட நிகழ்வுகளைத் தொகுத்தார். இதில் ஆட்சியின் சிறப்புகளைக் காட்டும் வண்ணம் 44 ஓவியங்கள் இடம் பெற்றன. இந்த ஓவியங்களில் அவர் ஆட்சியின் சிறப்பம்சங்களுடன் அவர் பரிவாரங்களுடன் நடத்திய வேட்டைகள், எதிரிப்படைகளின் முற்றுகை, தர்பார் நடைமுறைகள், வெளிநாட்டுத் தூதர்கள் வியாபாரிகள் வருகை ஆகியவையும் வரையப்பட்டிருந்தன.

இரண்டாவதாக, இது அப்துல் ஹமீத் லாஹூரி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பாத்ஷா நாமாவின் இரண்டாவது வெளியீட்டை 1648-ஆம் ஆண்டு வெளியிட்டார். 1654-ஆம் ஆண்டு லாஹூரியின் மறைவுக்குப் பின் அவரது மாணவர் முஹமது வாரிஸ் என்பவரால் மீண்டும் 1656-ஆம் ஆண்டு மூன்றாவது தொகுப்பு நடந்தது.

இதில் பாத்ஷாநாமாவின் முதல் வெளியீடு முகலாயர்கள் அரசாட்சியில் இருந்தவரை பரம்பரையாக அவ்வம்ச மன்னர்களிடமே இருந்து வந்தது.

முகலாயர்கள் ஆட்சி சரிவின் பொழுது 1799-ஆம் ஆண்டு எல்லைப் புற மாகாணத்தின் ஊட் நவாப் வசம் இந்தத் தொகுப்பு வந்து சேர்ந்தது. ஆங்கில ஆட்சியின் கீழ் எல்லைப் புற ஆட்சியாளராக (Governer) ஆக நியமிக்கப்பட்ட நவாபினால் இந்த ஓவியங்கள் மூன்றாம் ஜார்ஜால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் லார்ட் டைங்கன் மௌத் மூலம் பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட்து.  இதன் பின்னர் பாரத ஓவியக்கலையின் சிறப்பைப் பறைசாற்றும் இந்த ஓவியங்கள் ஆங்கிலேயர் வசம் சேர்ந்தன. இன்றும் இந்த ஓவியங்கள் எலிசபெத் மஹாராணியின் விண்ட்ஸர் கேஸ(ட்)ல்-இல் உள்ள ராஜ நூலகத்தில் (Royal Library)  பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. துவக்கத்தில் ராயல் நூலகம் இதன் முதல் இரண்டு படங்களை மட்டுமே வெளியிட்டது. பின்னர், 1997-ஆம் ஆண்டு இந்திய சுதந்திர பொன்விழாக் கொண்டாட்டங்களின் பொழுது எலிசபெத் மஹாராணியின் அனுமதியுடன் இவற்றின் பிரதிகள் புத்தக வடிவில் வெளியிடப் பட்டன.

தற்போது ஜெய்பூரில் மினியேச்சர் ஓவியர் ராஜு ஷர்மா மீண்டும் அதே பாணியில் அந்த ஓவியங்களை (புத்தகங்களில் வெளிவந்த ஓவியங்களைக் கொண்டு) வரைந்து வெளியிட இருக்கிறார்.

இதன் முதல் கட்டமாக ஆறு படங்களைக் காட்சிப்படுத்தினார். இந்த ஆறு படங்களை வரைய அவருக்கு ஒரு வருடம் ஆனது. மொத்த 44 படங்களையும் வரைய ஏழு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறியுள்ளார்.

8 கருத்துகள்:

  1. ஓவியர் ராஜு ஷர்மாவின் முயற்சி பாராட்டுக்குரியது.

    அப்போதைய மன்னர்கள் தன் ஆட்சியின் சிறப்புக்களை ஓவியமாய் வரைந்து பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.

    தற்போது மன்னர்கள் (அதுதான் இந்நாட்டு மக்கள்) அவர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லிக்கொள்ளும் சேவகர்களின் (அதான் தலைமை அரசியல்வாதிகள்) காலில் விழுவதை ஒவியமாய் படமெடுத்து ஃப்ளக்ஸ் போர்டு விளம்பரமாக்கி பிழைத்துக் கொள்கிறார்கள். (ரொம்ப குழப்பிட்டேனோ! என்ன செய்ய அரசியல் பேசினால் நான் குழம்பித்தான் போய் விடுகிறேன்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 23-ஆம் புலிகேசியில் வடிவேலு தன் உருவப் படத்தை வரைய வைப்பது நினைவுக்கு வருகிறது. இதிலும் கூட ஷாஜஹானின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் எல்லாம் இருக்கிறது.

      இப்பொழுதைய அரசியல்வாதிகளும் இவர்களின் தொடர்ச்சி தானே!

      நீக்கு
  2. படங்கள் அழகு...

    ஓவியர் ராஜு ஷர்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அத்தனை ஓவியங்களும் ரசிக்க வைத்தன! அருமை!

    பதிலளிநீக்கு
  4. ஓவியங்களும் தகவல்களும் ரசிக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு