புதன், பிப்ரவரி 27, 2013

கழிவு அகற்றல் - தடை



தில்லி மாநிலத்தில், கழிவு நீக்கப் பணிகளில் மனிதர்கள் நேரடியாக ஈடுபடுத்தப் படுவது நேற்று முதல் தடை செய்யப்படுத்தப் பட்டுள்ளது.

 தில்லி துப்புரவுப் பணியாளர் ஆணையத்தின் சார்பில் செய்யப்பட்ட ஒரு விழாவில் தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், ‘இந்நேரம் முதல் எந்த மனிதரும் கழிவுகளை அகற்ற நேரடியாக ஈடுபடுத்தப்படமாட்டார்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

2012 ஆம் ஆண்டிலிருந்தே ‘கைமுறை துப்புரவுத் தொழிலாளி வேலை தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான மசோதா நாடாளுமன்றத்தின் விவாதத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த நிலையில், சென்ற மாதம் உச்ச நீதி மன்றம் இதில் மத்திய அரசின் இயலாமையைக் கண்டித்தது.

இந்நிலையில் தில்லி அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டு, இந்தியாவிலே இத்தடையைச் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெறுகிறது.

மாநகராட்சிகள் (தில்லியில் மூன்று மாநகராட்சிகள் உள்ளன) இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆணையிடப்பட்டுள்ளன.

தில்லி அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவது விரைவில் அமல் படுத்தப்பட வேண்டும்!

அமிர்கான் நடத்திய சத்யமேவ ஜயதே தொடரிலும் மனிதர்கள் நேரடியாக கழிவு அகற்றுவது பற்றிய ஒரு episode வந்தது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்

[யூட்யூபில் இதன் தமிழ் வடிவம் கிடைக்கவில்லை]




 

6 கருத்துகள்:

  1. தில்லி அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவது விரைவில் அமல் படுத்தப்பட வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. தில்லி அரசின் முயற்சி பாராட்டுக்குரியது சீனு....

    பதிலளிநீக்கு
  3. வெளியூரில் இருந்ததால் இந்தச் செய்தியே தெரியவில்லை. மகிழ்ச்சி தரும் செய்தி. உடனே பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடப்போவதில்லை என்றாலும் முன்னேற்றகரமான துவக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனே பெரிய மாற்றம் வந்து விடாது என்பது உண்மை தான். மேலும் ஏற்கனவே இதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

      அனைத்திலும் முக்கியமாக அனைவருக்கும் Mindset மாற வேண்டும். அப்பொழுது தான் மாற்றம் வரும்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ஷாஜஹான்!

      நீக்கு