வெள்ளி, பிப்ரவரி 08, 2013

நாலந்தா பல்கலைக் கழகம்


பழங்கால இந்தியாவின் முக்கியக் கல்வி மையமாகக் கருதப்படுபவை நாலந்தாவும் தட்சசீலமும் ஆகும். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டினரும் இங்கு வந்து இங்கிருந்தப் பல்கலைக் கழகங்களில் வந்து கல்வி பயின்று சென்று வந்ததாகப் படித்துள்ளோம்.

கிரிஸ்து பிறப்பதற்கு முன்னரே சுமார் கி.மு 4 ஆம் நூற்றாண்டிலேயே மிகுந்த சிறப்புடன் விளங்கிய தட்சசீலம் குஷானர்களின் வீழ்ச்சிக்குப் பின் கலையிழந்து இங்கிருந்த பல்கலைக் கழகங்களும் அழிந்தன. தட்சசீலம் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் உள்ளது.

நாலந்தா தன் சிறப்பை குப்தர்களின் காலத்தில் (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு) தான் பெற்றது. சீனா மற்றும் வேறு வெளிநாட்டு யாத்ரிகர்களும் தங்கள் குறிப்புகளில் இதன் சிறப்புகளை விளக்கியுள்ளனர். 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மூலம் 10000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வந்ததாக யுவான் சுவாங்-இன் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நாலந்தா மூன்று முறை அழிவைச் சந்தித்துள்ளது. முதலில் ஹூனர்களால் (மிஹிர்குலன் தலைமையில்) ஸ்கந்த குப்தரின் காலத்தில் (5-ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது. பின்னர் ஸ்கந்த குப்தரின் வாரிசுகளாலேயே புதுப்பிக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது முறையாக கௌடர்கள் என்ற இனத்தவர்களால் 7-ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது. பின்னர் ஹர்ஷவர்தனரால் புதுப்பிக்கப்பட்டது.

கடைசியாக 1193-ஆம் ஆண்டு துருக்கியர்களால் (பக்தியார் கில்ஜி தலைமையில்) அழிக்கப்பட்டது. இது பற்றி மின்ஹஜ்-இ-சிராஜ் என்பவர் அராபிய மொழியில் தன் வரலாற்றுக் குறிப்பான ‘தபகத்-இ-நஸீரி’ என்ற நூலில் நாலந்தாவில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட புத்தத் துறவிகள் இதில் கொல்லப்பட்டதாகவும் இதல் கல்லூரி முழுவதும் அழிக்கப்பட்டதுடன்  9 அடுக்குகள் கொண்ட கல்லூரி நூலகம் இடிக்கப்பட்டு அதிலிருந்த புத்தகங்கள் எரிக்கப்பட்டதாகவும் அந்த புத்தகங்கள் எரிந்த நெருப்பு 6மாதத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாலந்தா இந்தியாவின் தற்போதைய பீஹார் மாநிலத்தில் உள்ளது.

2006-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்கள் நாலந்தாவில் ஒரு சர்வதேசப் பல்கலைக் கழகத்தை நிறுவி மீண்டும் பழைய காலம் போன்று இதைப் பல்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து கல்வி பயிலும் வகையில் நிறுவ முற்பட்டு முயற்சிகள் மேற்கொண்டார்.

சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கல்லூரி புதுப்பிக்கப்பட்டு சர்வதேச அளவில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. சிங்கப்பூர், சீனா, இங்கிலாந்து ஆகிய நாட்டினரும் இதனைப் புதுப்பிக்க முன் வந்துள்ளனர். இந்திய அரசும் 2010 ஆம் ஆண்டு நாலந்தா கல்லூரி மசோதாவைக் கொண்டு வந்தது. நவம்பர், 2010 ஆம் ஆண்டு கல்லூரி சுமார் 450 ஏக்கரில் மீண்டும் நிறுவப்பட்டது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமிர்த்யா சென் இதன் துணை முதல்வராக (Vice Chancellor) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் கல்லூரி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

2014 அக்டோபர்-நவம்பர் மாதத்தில் இங்கு மாணவர்கள் சேர்க்கப் பட்டு முதல் கட்டமாக ‘School of History & Archeology’  ‘School of Environmental Studies & Ecology’ ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் நாலந்தாவை-யும் யுனெஸ்கோ-வின் ‘இந்திய பாரம்பரிய இடங்களின் பட்டியலில்’ இடம் பெற கோரிக்கைகள் ஆரம்பித்துள்ளன. அமர்த்யாசென் ஆரம்பித்து வைத்த இந்தக் கோரிக்கையை தற்போது பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரும் வழி மொழிந்து அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாலந்தா தன் பழைய பெருமையை மீண்டும் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்!

3 கருத்துகள்:

  1. கல்வி கூடங்களை வேண்டுமானாலும் அழித்துவிடலாம் மூடர்களால்.

    கல்வி செல்வத்தை
    யாராலும் அழிக்க முடியாது.

    உலகம் தோன்றியநாள் முதற்கொண்டு இந்த மூடர்கள் உலகெங்கிலும் எல்லா இடத்திலும், எல்லா இனங்களிலும் இருக்கிறார்கள்.

    ஞானம் மண் போன்று அழிக்கமுடியாதது.

    அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் புதிய பானைகளை செய்துகொள்ளலாம் என்பது எப்போது இது போன்ற மூடர்களுக்கு புரியபோகிறது.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்பது அடுக்கு மாளிகையில் வைக்கப்பட்டப் புத்தகங்கள் அழிந்தன என்றால் அவற்றில் எத்தனைத் தகவல்கள் அடுத்தத் தலைமுறைக்குச் செல்வது தடுக்கப்பட்டிருக்கும் என்பது சற்று வருத்தமான விஷயம் தான்!

      சமீபத்தில் யாழ்ப்பான நூலக்த்திலும் ஆயிரக்கணகான நூல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

      எண்ணிக்கைதான் வித்யாசம்! மற்றபடி மனிதன் மனதளவில் இன்னமும் மாற்வில்லை.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பட்டாபி!

      நீக்கு
  2. காட்டு மிராண்டிகள் ஏன் புத்தகங்களை அழிக்கவேண்டும்

    பதிலளிநீக்கு