“காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும்
நல்ல பாட்டு”
பாட்டுக்கொரு புலவன் பாரதி குழந்தைகளுக்குக்
கூறியது என்னவோ இதுதான்.
ஆனால் இன்று குழந்தைகளுக்கு
காலை எழுந்தவுடன் படிப்பதற்கே நேரமில்லை. இதில் பாடுவது எங்கே?
ஆனால் அவர்களுக்கு தினமும் தாய்
தந்தையிடமிருந்து “பாட்டு” (திட்டுகள் தான்!!) கிடைத்துவிடுகிறது.
காலை எழுந்தவுடன் தான் எவ்வளவு வேலை.
காலைக் கடன் முடித்து, பால் குடித்து, குளித்து, சாப்பிட்டு, பள்ளிக்குச் செல்ல புத்தகங்களை
(தேடி) எடுத்துவைத்து, சீருடை அணிந்து பள்ளி கிளம்புவதற்குள் பள்ளி வண்டி வந்து விடுகிறது.
தமிழகத்திலாவது பரவாயில்லை. 9
மணிக்கு தான் பள்ளி ஆரம்பிக்கும். தில்லி போன்ற நகரங்களில் இன்னும் மோசம். 7 மணிக்கே
பள்ளி ஆரம்பித்து விடுகிறது. “மாலை முழுதும் விளையாட்டு” என்பதற்கு
வசதியாகத் தான் உள்ளது. இருந்தாலும் காலையில் தினமும் கச்சேரிதான்.
எங்கள் வீட்டிலாவது பரவாயில்லை.
கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் வீடுகளில் நிலமை போர்களம் தான்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்
மேல் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு அவர்கள் காலையில் மிகவும் மெதுவாக, நேர விரயத்தைப்
பற்றி கவலையின்றி அல்லது மற்ற விஷயங்களில் ஈடுபட்டு பள்ளி செல்ல விருப்பமின்றி வேண்டுமென்றே
தங்கள் வேலையைச் செய்கிறார்கள் என்பது தான்.
இது எந்த அளவு உண்மை. அவர்கள்
உண்மையாகவே பள்ளி செல்ல விருப்பமின்றி வேண்டுமென்றே தான் தாமதிக்கிறார்களா?
காரணம் இது அல்ல.
குழந்தைகளின் மூளை பள்ளிப் பருவத்தில்
குறிப்பாக ஆரம்ப நிலையில் வளர்ச்சி நிலையில் தான் இருக்கும். அவர்களால் பெரியவர்கள்
அளவுக்கு வேகமாக செயலாற்ற இயலாது. மேலும், அவர்களால் சாதாரணமாக ஒரு நேரத்தில் ஒரு வேலைதான்
செய்ய முடியும். வளர வளர 2-3 வேலைகளை ஒருசேர செய்யும் திறமையை வளர்த்துக் கொள்வார்கள்.
தவிர, குழந்தைகள் எப்பொழுதும் புதிது புதிதாக ஏதாவது கற்கவிரும்புவர். அதனால் ஒரேமாதிரி
திட்டமிட்ட (routine) வேலைகள் – தினமும் காலை பள்ளி
கிளம்பும்போது ஒரே மாதிரி வேலை தானே – அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. பள்ளியிலும்
ஒரே மாதிரி நடத்தப்படும் பாடங்கள் அவர்களுக்கு வேப்பங்காய் தான். மற்றபடி, பெரும்பாலும்
அவர்கள் பள்ளி செல்வதை வெறுப்பதில்லை.
தவிர மற்றொரு காரணமும் உள்ளது.
நாம் நம் இளம் வயதில் இப்பொழுது உள்ளது போல் இரவு வெகு நேரம் விழித்திருந்ததில்லை. பெரும்பாலும்,
9-10 மணிக்கு உறங்கிவிடுவோம். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு உறங்க 11 மணி ஆகிவிடுகிறது.
[குழந்தைகளை 9-10க்கு உறங்க வைத்தாலும் நாம் 11 மணி வரை விழித்திருப்பதால் அவர்களின்
உறக்கமும் பாதிக்கப்படத்தான் செய்கிறது]. கூட்டுக் குடும்பங்கள் இர்ந்தவரை ஒரளவு வீட்டுவேலைகள்
பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதனால், காலையில் குழந்தைகளை தயார் செய்வது எளிதாக இருந்த்து; மேலும், ஒரு குழந்தையைப் பார்த்து மற்ற குழந்தையும் தயாராகிவிடும். ஆனால், Nuclear குடும்பத்தினால் அது சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது.
இதெல்லாம் அறிவுக்கு தெரிந்தாலும்
காலையில் பள்ளி வாகனம் ஒலியெழுப்பும் பொழுது சண்டை ஆரம்பம் ஆவதை தடுக்க முடிவதில்லை.
காலையில் அதுவும் பனிக்காலத்தில் 7 மணிக்கு குழந்தைகள் செல்வதை பார்த்தாலே பாவமாக இருக்கும்.
பதிலளிநீக்குகாலை நேர டென்ஷன்.......:((((
என்னப்பா! காலையில வைஷு ஸ்கூல் கிளம்பும்போது ஒரே டென்ஷனா! :) வீட்டுக்கு வீடு வாசப்படி.... :)
பதிலளிநீக்குசமீபத்தில் குழந்தைகள் வளர்ப்பு ப்ற்றி ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. அதில் நல்ல நல்ல கருத்துகள் இருந்தன. சாதாரணமாக நாம் கொண்டிருக்கும் தவறான கருத்துகளை (Myth) அதில் குறிப்பிட்டு இருந்தது. படிக்கும் பொழுது அவை புரிந்தாலும் குழந்தைகள் காலையில் பள்ளி கிளம்பும் பொழுது அது அறிவுக்கு எட்டுவதில்லை. அதுதான்.
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.
நட்புடன்
ஆதி வெங்கட்.
தில்லியிலிருந்து பதிவெழுதும் ஜாம்பவான் பதிவர்களுக்கு மத்தியில் புதிதாக எழுதத் துவங்கியிருக்கும் என் பதிவையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குநான் காலையில் பாடும் பாட்டு,எழுந்திரு மணியாகிட்டு,நேரா நில்லு மணியாகிட்டு,ஒழுங்கா தலைய காமி மணியாகிட்டு,சாப்பிடம்மா மணியாகிட்டு,இப்படி பாடல் வரிகள் பல
பதிலளிநீக்குவாங்க ஆச்சி,
பதிலளிநீக்குகாலையில் “சுப்ரபாதம்” பாடாத பெற்றோர் யாராவது உண்டா?
எவ்வளவு தான் புத்தகங்கள் படித்து அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் காலைநேர டென்ஷனை குறைக்கும் மருந்து எதுவும் இல்லை என்றேத் தோன்றுகிறது.
தங்கள் வருகைக்கு நன்றிகள்.
Good stuff man!! No freedom is absolute nu namba constitution pathi solvanga, adudan gnabagam varudu. Over freedom kooda kedudhal dan
பதிலளிநீக்குநன்றி, ராம் குமார்.
பதிலளிநீக்குஎன் சுதந்திரம் என் மூக்கு நீளம் வரை என்பதும் நினைவுக்கு வருகிறது