அர்களம் [अर्गलम्]
18 புராணங்களில் ஒன்றான
மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருவது தேவீ
மஹாத்ம்யம். இதை துர்கா சப்தசதீ, சப்தசதீ, சண்டிபாடம் என்ற பெயரிலும் கூறுவர்.
இந்த 13 அத்யாயங்களும் மூன்று பாகங்களாகக் கூறப்படும்.
இந்த தேவீ மஹாத்ம்யம்
மார்கண்டேயர் பாகுரி என்ற மஹரிஷிக்கு சொன்னதாக்க் கூறுவர். சில புத்தகங்களில்
(குறிப்பாக குப்தவதீ உரையில்) இது வேத வ்யாசரின் சிஷ்யரான ஜைமிநி முனிவருக்கு
மார்கண்டேய மஹரிஷி உரைத்த்து என்றும் உள்ளது.
இதில் ஸுரதன் என்ற அரசனும் ஸமாதி
என்ற வைச்யனும் முறையே தங்களால் பயனடைந்த தன் தேச மக்கள் மற்றும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களாலேயே
அவர்களின் இடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு காட்டில் அலைந்து திரிந்து ஸுமேதஸ்
என்ற முனிவரின் ஆசிரமத்தில் அறிமுகம் ஆகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சோகங்களை
ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றிக் கொள்கின்றனர். அப்பொழுது, ஸுமேதஸ் அவர்கள் நிலைக்கு
மஹாமாயை (அ) விஷ்ணுமாயா வால் உருவாக்கப் பட்ட ஒரு மாயை தான் என்றும் அதிலிருந்து
மீள அந்த தேவியை த்யானிப்பதுதான் என்று
கூறி அத்தாயின் கதையை அவர்களுக்கு கூறினார். அது தான் தேவி மஹாத்ம்யம்.
இதன் முதல் பாகத்தில் மது,
கைடப வதமும் (அத்யாயம் 1), இரண்டாம் பாகத்தில் மஹிஷாசுர வதமும் (அத்யாயம் 2-4),
மூன்றாம் பாகம் சும்ப, நிசும்பர்களையும் அவர்களின் படையைச் சேர்ந்த தூம்ரலோசன்,
ரக்தபீஜன் அனைவரையும் வதமும் (அத்யாயம் 5-10) கொண்டது. அத்யாயம் 11-13 தேவியை
தேவர்களும் மற்றவர்களும் துதிப்பதும் தேவி அனைவருக்கும் அருள்வதும் உள்ளது.
தேவீ மஹாத்ம்யத்தின் சிறப்பு
என்னவென்றால் இது சாதாரணமாக கதையாக இருந்தாலும் மந்திர வடிவாகவும் கருதப்
படுகிறது. எனவே, இதை மந்திர வடிவமாகப் பாராயணம் செய்வர்.
இந்த தேவீ மஹாத்ம்யத்தை
பாரயணம் செய்ய வெவ்வேறு புத்தகங்களில் பல்வேறு முறைகள் கூறப்பட்டுள்ளன. கேரளம்,
வங்காளம் ஆகிய இடங்களில் மற்றும் சாக்தர்கள் என்று கூறப்படும் (சக்தியை வடிபாடு செய்பவர்கள்)
தந்திர வழிபாட்டு முறையில் தேவியை ஆவாஹனம் (சிலை அல்லது பிம்பங்களில் சக்தியை
உருவேற்றம்) செய்து வழிபடுவர்.
மற்றவர்கள் சாதாரணமாக, தேவீ
மஹாத்ம்யம் பாராயணம் செய்ய நவாங்க (9 அங்கம்) விதிகளைக் கடைபிடிப்பர்.
இவை தான் அந்த 9 விதிகள்
1.
ந்யாஸம் (அங்க சுத்தி
என்றும் கூறலாம்)
2.
ஆவாஹநம் (தேவியை
அழைத்தல்)
3.
நாமங்கள்
4.
அர்களம்
5.
கீலகம்
6.
ஹ்ருதயம்
7.
தளம்
8.
த்யாநம்
9.
கவசம்
இதன் பின் தேவீ மஹாத்ம்யம்
பாராயணம் செய்வர். இதை நவராத்திரி சமயம் தினமும் பாராயணம் செய்வார்கள். விசேஷமாக
அஷ்டமி அன்று செய்வது மிக நல்லது என்று கூறுவர்.
முழுவதுமாக தேவீ மஹாத்ம்யம்
பாராயணம் செய்ய இயலாதவர்கள், இதில் அர்களம், கீலகம், கவசம் இவை மூன்றையுமாவது
படித்தால் நற்பயன் கிட்டும் என்று கூறுவர்
அர்களம் என்றால் என்ன?
அர்களம் என்றால் தாழ்ப்பாள்
என்று பொருள்; இங்கு குறிப்பால் அரண் என்ற பொருளைத் தரும்.
நாளை இந்த அர்களத்தின் த்யான
ச்லோகங்களைப் பார்ப்போம்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகவசார்ககீலகம்னு பொதுவா இதை சாதகர்கள் அழைப்பார்கள். கவசம் + அர்க்கம் + கீலகம் . நல்ல விஷயங்கள் எழுத முற்படுவதற்கு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குதக்குடு
www.ummachikappathu.blogspot.com
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தக்குடு. தங்கள் blog-ல் பெயர் காரணம் படித்தேன். புதுமையாக (புதிதாக கேட்பதால்) இருந்தது.
பதிலளிநீக்குநல்ல பகிர்வுடா சீனு. தேவி மகாத்மியம் பற்றி தொடர்ந்து எழுது... எல்லோரும் பயன்பெறட்டும்....
பதிலளிநீக்கு